சென்னை நகரில் ஒலிபரப்பு

சென்னையில் ஒலிபரப்பு (Broadcasting in Chennai) 1924-இல் மெட்ராஸ் மாநில வானொலி மன்றத்தினால் தொடங்கப்பட்டது. 1938ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் அனைத்திந்திய வானொலி நகரத்தில் ஒளிபரப்பச் சேவையினைத் தொடங்கும் வரை இந்த சேவை செயல்பட்டது.

தற்போது, சென்னையில் 4 வீச்சு பண்பேற்ற வானொலி நிலையங்களும் 11 பண்பலை வானொலி நிலையங்களும் அனைத்திந்திய வானொலி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சூரியன் பண்பலை வானொலி, ரேடியோ மிர்ச்சி, பிக் வானொலி, ஹலோ எஃப்எம், ரேடியோ சிட்டி, ரேடியோ ஒன், ரெயின்போ எப் எம், எப் எம் கோல்டு, எம்.ஓ.பி. சமுதாய வானொலி ஏனையோருடன் பல நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர்.[1][2]

வரலாறு தொகு

இந்தியாவில் ஒளிபரப்பு ஜூன் 1923இல் பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் பம்பாய் மாநில மன்றம் மற்றும் பிற வானொலி மன்றங்களுடன் நிகழ்ச்சிகளைத் தொடங்கியது. 1924ஆம் ஆண்டில், மெட்ராஸ் மாநில மன்ற வானொலியினை வி.கிருஷ்ணசாமி செட்டியார் நிறுவினார். இது ஜூலை 31, 1924இல் எழும்பூரில் உள்ள ஹோலோவேஸ் கார்டனில் இருந்து முதல் ஒலிபரப்பைத் தொடங்கியது. பின்னர் சில நிதி சிக்கல்களை மன்றம் எதிர்கொண்டது, ஆனால் 1927இல் சென்னை மாநகராட்சியால் மீட்கப்பட்டது. பின்னர் இந்நிலையம் 1938இல் மெட்ராஸில் அகில இந்திய வானொலி நிறுவப்படும் வரை இயங்கியது.[3] சென்னை மாநகராட்சியின், ரிப்பன் கட்டிட வளாகத்தில் இந்த வானொலி நிலையம் 1938இல் நிறுவப்பட்டது.[4]

1927 சூலை மாதம் ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் இந்திய ஒலிபரப்பு நிறுவனம் இரண்டு வானொலி நிறுவனங்களை நிறுவ அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் ஒன்று 1927 சூலை 23 இல் பம்பாயிலும், மற்றொன்று கல்கத்தாவில் ஆகஸ்ட் 26 அன்று தமது சேவையினை துவக்கின. இந்த நிறுவனம் நிதிச்சுமையில் தள்ளாடியபோது அரசு இந்த நிறுவனத்தினை தன் கட்டுப்பாட்டில் எடுத்து இந்திய மாநில ஒலிப்பரப்பு சேவையினை ஏப்ரல் 1, 1930ல் ஏற்படுத்தியது. சோதனை முறையில் இரண்டாண்டு பணியாற்றியபின் மே 1932ல் நிரந்தர நிறுவனமாக மாறியது. 1936ல் இதன் பெயர் அனைத்திந்திய வானொலி என மாற்றப்பட்டது.[5]

அனைத்திந்திய வானொலி சென்னையில் அதன் நடவடிக்கைகளை 16 ஜூன் 1938இல் தொடங்கியது. இந்தியச் சுதந்திரம் பெற்றபோது நாட்டில் உள்ள ஆறு வானொலி நிலையங்களுள் சென்னையும் ஒன்று. பிற நிலையங்கள் தில்லி, பம்பாய், கல்கத்தா, இலக்னோ, மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகும்.[6] இந்நேரத்தில் இந்தியாவில் உள்ள மொத்த வானொலிப் பெட்டிகளின் எண்ணிக்கை சுமார் 275,000 ஆகும். இலங்கை வானொலியுடன் போட்டியிட விவித பாரதி சேவை அக்டோபர் 3, 1957 அன்று தொடங்கப்பட்டது. 23 ஜூலை 1977 அன்று பண்பலை ஒளிபரப்பைத் தொடங்கியது. நாட்டின் முதல் பண்பலை நிலையமாக ஏ.ஐ.ஆர் மெட்ராஸ் ஆனது. பின்னர் இது 1990களில் விரிவாக்கப்பட்டது.[7]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Gilbert, Sean, தொகுப்பாசிரியர் (2006). World Radio TV Handbook 2007: The Directory of International Broadcasting. London: WRTH Publications Ltd.. பக். 237–242. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8230-5997-9. https://archive.org/details/worldradiotvhand00unse_29. 
  2. https://worldradiomap.com/in/chennai
  3. Muthiah, S. (21 May 2018). "AIR Chennai’s 80-year journey". The Hindu (Chennai: Kasturi & Sons). https://www.thehindu.com/society/history-and-culture/air-chennais-80-year-journey/article23947443.ece. 
  4. "Historical Events at a Glance". District Profile. Govt. of Tamil Nadu. Archived from the original on 30 July 2013. பார்க்கப்பட்ட நாள் 28 December 2012.
  5. "Milestones of AIR (official website)". All India Radio. பார்க்கப்பட்ட நாள் 13 January 2013.
  6. Venkatesan, R. (15 June 2018). "AIR Chennai to mark 80 years of service with special programmes". The Hindu Business Line (Chennai: The Hindu). https://www.thehindubusinessline.com/news/national/air-chennai-to-mark-80-years-of-service-with-special-programmes/article24171246.ece. 
  7. "Milestones of AIR". All India Radio. Archived from the original on 12 June 2010.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_நகரில்_ஒலிபரப்பு&oldid=3698052" இலிருந்து மீள்விக்கப்பட்டது