சென்னை மாநகர பரப்பு
சென்னை மாநகர பரப்பு, இந்தியாவின் 4-வது பெரிய மாநகர பரப்பாகும். மக்கள் தொகை அடிப்படையில், உலகின் 34 -வது பெரிய பரப்பாக "சென்னை மாநகர பரப்பு" திகழ்கிறது. சென்னை மாநகர பரப்பானது, சென்னை மாநகராட்சிப்பகுதிகள் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளை உள்ளடக்கியதாக அமையும். இந்த மாநகர பரப்பு பகுதியின் நகர வளர்ச்சித்திட்டங்கள், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் செயல்படுத்தப்படுகிறது.
உள்ளடக்கம்
தொகுசென்னை மாநகர பரப்பு 3 மாவட்டங்களை உள்ளடக்கி மொத்தம் 1172 சதுர கீ. மீ. பரப்பளவு கொண்டதாக அமைந்துள்ளது.
Sn | மாவட்டம் | பரப்பளவு (ச. கீ. மீ -யில்)()[1] | மக்கள் தொகை (2001) |
---|---|---|---|
1 | சென்னை மாவட்டம் (சென்னை மாநகரம் ) | 176 | 4,343,645 |
2 | திருவள்ளூர் மாவட்டம் | 637 | 1,574,847 |
3 | காஞ்சிபுரம் மாவட்டம் | 376 | 1,107,789 |
மொத்தம் | 1189 | 7,026,281 |
நகர வளர்ச்சியில் பங்கு பெரும் அமைப்புகள்
தொகுSn | அமைப்புகள் | கடமைகள் |
---|---|---|
1 | சென்னை மாநகராட்சி, நகராட்சிகள் and பஞ்சாயத்துகள் | தத்தம் பகுதிகளில் குடி ஆளுமை செய்தல் |
2 | தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் | மனைகள் மற்றும் கட்டிய வீடுகளை வழங்குதல், மனை மற்றும் இருப்பிடம் சார்ந்த சேவை செய்தல் |
3 | மாநகர போக்குவரத்து கழகம் | பேருந்து போக்குவரத்து |
4 | தென்னக இருப்புவழி | சென்னை புறநகர் இருப்புவழி, சென்னை மெட்ரோ சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் |
5 | சென்னை நகர போக்குவரத்து காவல் | போக்குவரத்து மேலாண்மை திட்டங்கள் |
6 | தமிழ்நாடு மின்சார வாரியம் | மின்சாரம் தயாரிப்பு மற்றும் விநியோகம் |
7 | பொதுப்பணி துறை | நிலத்தடி சாக்கடைத்திட்ட ஆக்கம் மற்றும் பராமரிப்பு |
8 | சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் | நகர கட்டுமான திட்டமிடல்கள், பல்வேறு கட்டுமானப்பணிகளின் ஒருங்கிணைப்பு |
9 | சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் | சென்னை மாநகர பரப்பின் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீரகற்றம் |
10 | தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் | சேரிப்பகுதிகளில் நல்ல இருப்பிட வசதி, கட்டமைப்பு மற்றும் அங்கு வாழ்பவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் |
விளக்கம்
தொகுதமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரம், இந்தியாவின் நான்காவது பெரிய மாநகரமாகும். சென்னை மாநகர பரப்பானது, சென்னை மாநகராட்சி பகுதிகள், 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 214 ஊராட்சிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. சென்னை மாநகர பரப்பின் மொத்த பரப்பளவு 1189 ச கீ.மீ ஆகும்.
சென்னை மாநகர பரப்பு தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடிக்கி அமைந்துள்ளது. அவை சென்னை மாநகராட்சிப்பகுதி, திருவள்ளூர் மாவட்டத்தின் ஓர் பகுதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். திருவள்ளூர் மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 3427 ச கி. மீ -இல் 637 ச கி. மீ - உம் (அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி மற்றும் பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட பகுதிகள்) , காஞ்சிபுரம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 4433 ச கி. மீ - இல் 376 -உம் (தாம்பரம், திருப்பெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு வட்டத்திற்குட்பட்ட பகுதிகள்) ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "CHENNAI METROPOLITAN AREA - PROFILE". Chennai Metropolitan Development Authority. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-10-05.
வெளியிணைப்புகள்
தொகு