செபீல்டு
செபீல்டு (Sheffield, /ˈʃɛfiːld/ (ⓘ) ஐக்கிய இராச்சியத்தில் இங்கிலாந்தின் வடபகுதியில் தெற்கு யார்க்சையரில் உள்ள ஓர் நகரமாகும். இங்கு பாயும் ஷீஃப் ஆற்றினைக் கொண்டு இந்நகர் இப்பெயர் பெற்றது. தொழிற்சாலைகளினாலேயே இந்நகரம் வளர்ச்சியடைந்துள்ளது. செபீல்டு நகரத்தின் 2011 ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 551,800 ஆகும். இங்கிலாந்தின் எட்டு மிகப்பெரும் நகரங்களில் இது ஒன்றாக விளங்குகிறது.
செபீல்டு நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): "எஃகு நகரம்" | |
குறிக்கோளுரை: "Deo Adjuvante Labor Proficit" "கடவுளருளால் நம் முயற்சி வெல்லும்" | |
இங்கிலாந்தினுள் செபீல்டு அமைவிடம் | |
நிறுவப்பட்டது | ~8வது நூற்றாண்டு |
ஊர் அரசியலமைப்பு | 10 ஆகத்து 1297 |
நகரமாகத் தகுதி | 1893 |
பரப்பளவு | |
• நகரம் | 367.94 km2 (142.06 sq mi) |
மக்கள்தொகை | |
• நகரம் | வார்ப்புரு:English district population ([[List of English districts by population|Ranked வார்ப்புரு:English district rank]]) |
• நகர்ப்புறம் | 6,40,720 (செபீல்டு ஊரகப் பகுதி) |
• நகர்ப்புற அடர்த்தி | 3,949.2/km2 (10,228/sq mi) |
• செரெமோனியல் கௌன்ட்டி | 12,92,900 |
நேர வலயம் | ஒசநே+0 (கிரீன்விச் இடைநிலை நேரம்) |
இடக் குறியீடு | 0114 |
இணையதளம் | www.sheffield.gov.uk |
19வது நூற்றாண்டில் செபீல்டு எஃகு உற்பத்தியால் உலகெங்கும் பெயர் பெற்றிருந்தது. எஃகு தயாரிப்பில் பல மேம்பாடுகள் இங்கு ஏற்பட்டன. தொழிற் புரட்சியின்போது இந்த நகரத்தின் மக்கள்தொகை பத்து மடங்காகப் பெருகியது. 1843 இல் நகராட்சி அங்கீகாரம் பெற்றது. 1970களிலும் 198களிலும் பன்னாட்டு போட்டித் தயாரிப்புக்களாலும் நிலக்கரி சுரங்கத் தொழில் முடக்கத்தாலும் உள்ளூர் இரும்புத் தயாரிப்பு முடங்கத் தொடங்கியது.
21வது நூற்றாண்டில் மற்ற பிரித்தானிய நகரங்களைப் போலவே இங்கும் விரிவான ஊரகப் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகின்றன. £9.2 பில்லியன் உற்பத்தியுடன் பொருளியலில் மொத்த மதிப்புக் கூட்டல் 1997இல் 60%ஆக உயர்ந்துள்ளது.[1]
பல மலைகளின் நடுவே அமைந்துள்ள செபீல்டு பீக் தேசியப் பூங்காவிற்கு கிழக்கில் உள்ளது. டான் ஆறு மற்றும் அதன் துணையாறுகளுடன் செபீல்டு 61% பசும்வெளியாக உள்ளது.[2] இந்நகரில் 200க்கும் கூடுதலான பூங்காக்களும் வனப்பகுதிகளும் நந்தவனங்களும் உள்ளன.[3] 2.5 மில்லியன் மரங்கள் உள்ளதாக மதிப்பிடப்படும் செபீல்டு, ஐரோப்பாவின் எந்த நகரத்திலும் உள்ள தனிநபர் ஒருவருக்கெதிர் மரங்களின் எண்ணிக்கையில் உயர்ந்த வீதத்தைக் கொண்டுள்ளதாக விளங்குகிறது.[2]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Income & Wealth". Sheffield City Council. 30 November 2007. Archived from the original on 21 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 7 July 2010.
- ↑ 2.0 2.1 "Sheffield Geography". Sheffield City Council. 17 December 2007. Archived from the original on 5 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Millhouses Park, Sheffield பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம். Spinsheffield.com. Retrieved on 24 August 2011.
வெளி இணைப்புகள்
தொகு- Sheffield City Council Website
- A tale of two cities: the Sheffield Project பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் a report by University of Sheffield commissioned by David Blunkett about inequality within the city
- The Story of Sheffield by John Derry, 1915