செப்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
செப்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by copper production) என்பது செப்பு எனப்படும் தாமிரத்தை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலாகும். இப்பட்டியல் 2014 ஆம் ஆண்டு சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட தாமிரத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலாகும்.
தாமிரத்தை அதிகமாகப் பெற்றுள்ள நாடுகள் பொதுவாக அவற்றை உருக்கி எடுத்துக் கொள்ளும் வகையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஒரு நாட்டின் செப்பு உற்பத்தியானது, உருக்கி எடுத்து செய்யும் உற்பத்தி மற்றும் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட தயாரிப்பு இரண்டும் பெரிதும் வேறுபடுகின்றன.
தரம் | நாடு/பகுதி | 2014 இல் செப்பு உற்பத்தி (ஆயிரம் டன்கள்) |
---|---|---|
உலகம் | 18,700 | |
1 | சிலி | 5,800 |
2 | சீனா | 1,620 |
3 | பெரு | 1,400 |
4 | அமெரிக்கா | 1,370 |
5 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 1,100 |
6 | ஆத்திரேலியா | 1,000 |
7 | உருசியா | 850 |
8 | சாம்பியா | 730 |
9 | கனடா | 680 |
10 | மெக்சிகோ | 520 |
11 | கசக்ஸ்தான் | 430 |
12 | போலந்து | 425 |
13 | இந்தோனேசியா | 400 |
மற்ற நாடுகள் | 2,400 |
சென்ற நூற்றாண்டின் ஒப்பீட்டு அளவுகள்.[1]
தரம் | நாடு/பகுதி | 1907 இல் செப்பு உற்பத்தி (ஆயிரம் மெட்ரிக் டன்கள்) |
---|---|---|
உலகம் | 723 | |
1 | அமெரிக்கா | 399 |
2 | மெக்சிகோ | 61 |
3 | எசுப்பானியா மற்றும் போர்ச்சுக்கல் | 50 |
4 | ஜப்பான் | 50 |
5 | ஆஸ்திரலேசியா | 42 |
6 | சிலி | 27 |
7 | செருமனி | 21 |
8 | உருசியா | 15 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Encyclopaedia Britannica, 11th ed. (1910), vol. 7, p. 109.