செம்பழுப்பு தொண்டை வெள்ளைக் கண் நெட்டைக்காலி
செம்பழுப்பு தொண்டை வெள்ளைக் கண் நெட்டைக்காலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மோடாசிலிடே
|
பேரினம்: | ஆந்தசு
|
இனம்: | ஆ. ரூபிகோலிசு
|
இருசொற் பெயரீடு | |
ஆந்தசு ரூபிகோலிசு ரோத்சைல்டு & ஹார்ட்ரெட், 1923 |
மடாங்கா (Madanga) அல்லது செம்பழுப்பு தொண்டை வெள்ளைக் கண் நெட்டைக்காலி (ஆந்தசு ரூபிகோலிசு) என்ற சிற்றினத்தினைச் சார்ந்த பறவை முன்னர் சூசுடெரோபிடே குடும்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. தற்பொழுது இது வாலாட்டிக் குருவி குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தக் குடும்பத்தில் வாலாட்டிக் குருவி மற்றும் நெட்டைக்காலிகளும் அதன் உறவினர்களும் உள்ளன.
விளக்கம்
தொகுஆந்தசு இந்தோனேசியத் தீவான புரூ தீவில் காணப்படும் அகணிய உயிரியாகும். இது ஈரமான மலைப்பாங்கான மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல காட்டில் காணப்படும். இது 820 m (2,690 அடி) க்கும் 1,500 m (4,900 அடி) க்கும் இடைப்பட்ட உயரத்தில் உள்ள வா பெஹாட் குடியேற்றத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டது. பின்னர் 1,460 m (4,790 அடி) உயரத்தில் உள்ள வாகேகாவிலிருந்து இரண்டு பறவைகள் மீண்டும் 1995-ல் சேகரிக்கப்பட்டன. இந்த சிற்றினம் இந்த தீவிற்குள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும், மரங்கள் வெட்டுதல் மற்றும் பிற மனித நடவடிக்கைகளால் வாழிடங்கள் அச்சுறுத்தப்படுவதாலும், 1996ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக அறிவிக்கப்படுள்ளது.[2][3]
உடலமைப்பு
தொகுமடங்கா பெரும்பாலும் மரப்பட்டை மற்றும் லைச்சன் ஆகியவற்றில் காணப்படும் சிறிய முதுகெலும்பில்லா விலங்குகளை உண்ணும். இந்தப் பறவை மாறுபட்ட நிறம் மற்றும் உடல் அம்சங்களைக் கொண்டுள்ளது. வெள்ளைக் கண் வளையம் இல்லாமல்; நீண்ட கால்விரல்கள், இறக்கை மற்றும் வால், மற்றும் கூர்மையான வால் பகுதியினைக் கொண்டது.[3]
வகைப்பாட்டியல்
தொகு2015-ல் மூலக்கூறு பகுப்பாய்வின் மூலம் இவை நெட்டைக்காலிகளுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையது என அறியப்படுகிறது. எனவே இதனை வாலாட்டிக் குருவி குடும்பத்தில் நெட்டைக்காலி பேரினத்தில் சேர்த்தனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2012). "Madanga ruficollis". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22714290/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ BirdLife International 2008.0. Madanga ruficollis. In: IUCN 2010. IUCN Red List of Threatened Species. Version 2010.4
- ↑ 3.0 3.1 Rufous-throated White-eye, Hokkaido Institute of Environmental Sciences and Japan Science and Technology Agency
- ↑ Alstrom, P.; Jonsson, K. A.; Fjeldsa, J.; Odeen, A.; Ericson, P. G. P.; Irestedt, M. (2015). "Dramatic niche shifts and morphological change in two insular bird species". Royal Society Open Science 2 (3): 140364. doi:10.1098/rsos.140364. பப்மெட்:26064613.