செம்பியன்மாதேவி

கள்ளக்குறிச்சி மாவட்ட கிராமம்

செம்பியன்மாதேவி (Sembiyanmadevi) என்பது தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரானது கள்ளக்குறிச்சியிலிருந்து 20.8 கி.மீ தொலைவிலும், உளுந்தூர்ப்பேட்டையிலிருந்து 18.1 கி.மீ தொலைவிலும், இளவனாசூரிலிருந்து 4.1 கி.மீ தொலைவிலும், தியாகதுர்க்கத்திலிருந்து 9 கி.மீ தொலைவிலும் உள்ளது. முன்பு செம்பியன்மாதேவி கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தது. தற்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு (ஜனவரி 8, 2019 அன்றிலிருந்து) மாற்றப்பட்டுள்ளது.

மக்கள் தொகை

தொகு

செம்பியன்மாதேவியில் முதன்மையாக பேசப்படும் மொழி தமிழாகும். இந்தக் கிராமத்தில் 316 வீடுகள் உள்ளன, மொத்த மக்கள் தொகையானது 1528 ஆகும். இதில் பெண் மக்கள் தொகை 47.3%, கிராம கல்வியறிவு விகிதம் 57.3%, பெண் கல்வியறிவு விகிதம் 22.8% ஆக உள்ளது.[1]

பேருந்துநிலையம் மற்றும் பேருந்துகள்

தொகு

இங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து  பாண்டிச்சேரி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நகரங்களுக்கு செல்ல 25 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து வசதி உள்ளது.

கோவில்கள்

தொகு

செம்பியன்மாதேவி கிராமத்தில்  அருள்மிகு முத்து மாரியம்மன்சப்த கன்னிமார், மருதாண்டவர் கோயில்கள் உள்ளன. செம்பியன்மாதேவியில் மற்றொரு மிக சக்திவாய்ந்த அருள்மிகு திரௌபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 6 ஏக்கர் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2 ஆவது வாரத்தில் நடைபெறும்.

படவரிசை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sembiyanmadevi".

வெளி இணைப்புகள்

தொகு
  1. Sembiyanmadevi Gmap
  2. Sembiyanmadevi
  3. sembiyanmadevi
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பியன்மாதேவி&oldid=3710811" இலிருந்து மீள்விக்கப்பட்டது