செம்மார்புக் குக்குறுவான்
செம்மார்புக் குக்குறுவான் | |
---|---|
![]() | |
கன்னான் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Piciformes |
குடும்பம்: | Megalaimidae |
பேரினம்: | Megalaima |
இனம்: | M. haemacephala |
இருசொற் பெயரீடு | |
Megalaima haemacephala Statius Muller, 1776 | |
வேறு பெயர்கள் | |
Xantholaema haemacephala |
செம்மார்புக் குக்குறுவான் அல்லது கன்னான் அல்லது திட்டுவான் குருவி [2] (coppersmith barbet ) என்பது ஒருவகை குக்குறுவான் பறவையாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.
விளக்கம்தொகு
இப்பறவை கனத்த அலகுடனும், இலைப் பச்சை நிறத்துடனும், சிவந்த மார்பு, முன்தலைக் கொண்டும், மஞ்சள் கழுத்துடன், குட்டையான வாலுடன் இருக்கும். இப்பறவை ஆல், அரசு, அத்தி மரப் பழங்களை விரும்பி உண்ணும். ஈசல் போன்ற பூச்சிகளையும் உண்ணும்.
குணம்தொகு
இப்பறவை வாழும் பகுதிக்கு ஏதாவது தீங்கு வந்தால் விநோத ஒலி எழுப்பும் தன்மை கொண்டது. இதனாலேயே பளியர் என்ற பழங்குடி மக்கள் இப்பறவையை திட்டுவான் குருவி என்று அழைப்பார்கள்.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Megalaima haemacephala". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 இலங்கையிலிருந்து மதுரைக்கு வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகள்: சூழலியல் பேரவையின் ஆய்வில் தகவல் தி இந்து தமிழ் பார்த்த நாள் 02. செப்டம்பர் 2015