பிலிரான் (Biliran) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், கிழக்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் நவல் ஆகும். இம்மாகாணம் 1992 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் கெரார்டோ எஸ்பினோ ஜேஆர். (Gerardo Espina, Jr) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 536.01 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக பிலிரான் மாகாணத்தின் சனத்தொகை 171,612 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 78ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 75ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 132 கிராமங்களும், 8 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக நான்கு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.

பிலிரான்
மாகாணம்
மாகாண வரைபடம்
மாகாண வரைபடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்கிழக்கு விசயாசு
நேர வலயம்ஒசநே+8 (பிசீநே)

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 11 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-04.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிரான்&oldid=3517253" இலிருந்து மீள்விக்கப்பட்டது