செம்மார்பு ஈப்பிடிப்பான்
செம்மார்பு ஈப்பிடிப்பான் ( Red-breasted flycatcher ) என்பது குருவி வரிசையைச் சேர்ந்த பழைய உலக ஈப்பிடிப்பான் ஆகும். இது கிழக்கு ஐரோப்பா மற்றும் நடு ஆசியா முழுவதும் இனப்பெருக்கம் செய்கிறது. குளிர்காலத்தில் தெற்காசியாவுக்கு வலசை போகிறது. ஆசிய இனமான Ficedula albicilla, முன்பு செம்மார்பு ஈப்பிடிப்பானின் துணையினமாகக் கருதப்பட்டது, சாம்பல் நிறம் சூழ்ந்த செந்தொண்டை மற்றும் வித்தியாசமான பாடல் பாடல் பாடுவதாக இருந்தது. அது இப்போது செந்தொண்டை ஈப்பிடிப்பான் ( பல்லாஸ், 1811) என தனி இனமாக பிரிக்கப்பட்டுள்ளது.
செம்மார்பு ஈப்பிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Ficedula |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/FicedulaF. parva
|
இருசொற் பெயரீடு | |
Ficedula parva (Bechstein, 1792) | |
Range of F. parva Breeding Passage Non-breeding Extant & Origing uncertain (non breeding) |
செம்மார்பு ஈப்பிடிப்பான் சிறிய அளவிலான ஒரு பறவையாகும். இது சுமார் 11-12 செ. மீ. நீளம் இருக்கும். இது சாம்பல் நிற தலையுடனும், ஆரஞ்சு தொண்டையுடனும், உடலின் மேற்பகுதி பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும். அலகு கருப்பாகவும், பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க வசதியாக அகலமாகவும் அதேசமயம் கூர்மையான வடிவத்தையும் கொண்டதாக இருக்கும். இது பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்பதுடன், ஓக் இலைகளுக்கு இடையில் உள்ள கம்பளிப் பூச்சிகளை வேட்டையாடுகிறது மேலும் சிறு பழங்களையும் உண்கிறது. வாலடி இறகுகள் வெண்மையாக இருக்கும். நகரும்போது பெரும்பாலும் வாலை மேலே தூக்கியபடி இருக்கும். இவை பறந்தோ அல்லது சில சமயங்களில் தரையிலோ பூச்சிகளை தேடிப் பிடிக்கின்றன. குளிர்காலத்தில் இவை பெரும்பாலும் அமைதியாக இருக்கும். பிற காலங்களில் சிப்-சிப்-சிஆர்ஆர்ஆர்ஆர் என குரல் எழுப்பியபடி இருக்கும். இவற்றின் இனப்பெருக்க காலத்தில், ஐரோப்பிய பலவண்ண ஈப்பிடிப்பானைப் போன்ற மெல்லிசை சீழ்க்கை பாடல்களைப் பாடும்.
இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் ஆண், பெண், முதிர்சியடையாத ஈப்பிடிப்பான்கள் பழுப்பு நிறத் தலைகளோடு, தொண்டையில் நிறப்பட்டை இன்றி காணப்படும்.
இவை முக்கியமாக இலையுதிர் காடுகளில், குறிப்பாக நீர்நிலைக்கு அருகில் காணப்படுகின்றன. இவை மரப் பொந்து அல்லது மரத்தில் உள்ள இடைவெளியில் கூடு கட்டுகின. நான்கு முதல் ஏழு முட்டைகளை இடுகின்றன.
1973-2002 வரை போலந்தில் இவை இனப்பெருக்கம் செய்யும் பகுதியில் இவற்றின் வசந்த கால வருகையைப் பற்றிய ஆய்வுகளில், அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதலால் ஆண் பறவைகள் முன்னதாகவே திரும்பி வருவதைக் காட்டுகின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International. (2018). "Ficedula parva". IUCN Red List of Threatened Species 2018: e.T22735909A132037161. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22735909A132037161.en. https://www.iucnredlist.org/species/22735909/132037161. பார்த்த நாள்: 10 October 2021.
- ↑ Cezary Mitrus; Tim H. Sparks; Piotr Tryjanowski (2005). "First evidence of phenological change in a transcontinental migrant overwintering in the Indian sub-continent: the Red-breasted Flycatcher Ficedula parva". Ornis Fennica 82: 13–19. http://www.birdlife.fi/julkaisut/of/pdf/vol82-1/2Mitrus2421.pdf.