செர்கசி மாகாணம்

செர்கசி மாகாணம் (Cherkasy Oblast) உக்ரைன் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செர்கசி நகரம் தினேப்பர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 20900 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாகணத்தின் 2021ம் ஆண்டின் மக்கள் தொகை 11,78,266 ஆகும்.

செர்கசி மாகாணம்
Черкаська область
செர்கஸ்கா மாகாணம்[1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
நாடு உக்ரைன்
நிறுவப்பட்ட நாள்7 சனவரி 1954
தலைநகரம்செர்கசி நகரம்
அரசு
 • ஆளுநர்ஐகோர் தபுரெட்ஸ்[2]
 • மாகாணச் சட்டமன்றம்84 உறுப்பினர்கள்
 • தலைவர்அனதோலி பிதோர்னி
பரப்பளவு
 • மொத்தம்20,900 km2 (8,100 sq mi)
 • பரப்பளவு தரவரிசை18ம் இடம்
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம் 11,78,266
 • தரவரிசை15ம் இடம்
Demographics
 • அலுவல் மொழிஉக்குரேனிய மொழி
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்)
அஞ்சல் குறியீடு
18-20xxx
வட்டார குறியீடு+380 47
ஐஎசுஓ 3166 குறியீடுUA-71
வாகனப் பதிவுCA
மாவட்டங்கள்4
நகரங்கள் (மொத்தம்)16
• மண்டல நகரங்கள்6
நகர்புற குடியிருப்புப் பகுதிகள்15
கிராமங்கள்824
FIPS 10-4UP01
இணையதளம்www.oda.ck.ua
www.rada.gov.ua

புவியியல்

தொகு

இம்மாகாணத்தின் நடுவில் பாயும் தினேப்பர் ஆறு இரண்டு பெரும் சமமற்ற பகுதிகளாக பிரிக்கிறது. மேற்கில் பெரும் பகுதியை கொண்ட இம்மாகாணப்பகுதி மேட்டு நிலமாகவும், சிறிய கிழக்குப் பகுதி தாழ் நிலப்பகுதியாகவும் உள்ளது. கிழக்குப் பகுதி தினேப்பர் ஆற்று வெள்ள நீரால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே தினேப்பர் ஆற்றின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டுள்ளது.

செர்கசி மாகாணம் தென்மேற்கிலிருந்து, வடகிழக்காக 245 கிலோ மீட்டர் நீளமும்; வடக்கிலிருந்து தெற்காக 150 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதன் வடக்கில் கீவ் மாகாணம், தெற்கில் கிரோவோக்ராட் மாகாணம், கிழக்கில் போல்தாவா மாகாணம் மற்றும் மேற்கில் வின்னித்சியா மாகாணம் எல்லைகளாக உள்ளது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள்

தொகு
 
செர்கசி மாகாணத்தின் வரைபடம்

சூலை 2020ஆம் ஆண்டு முதல் செர்கசி மாகாணத்தின் ஆட்சிப் பிரிவுகலை 4 மாவட்டங்களாகவும், 16 நகரங்களாகவும், 15 நகரபுற குடியிருப்பு பகுதிகளாகவும், 824 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, செர்கசி மாகாணத்தின் மக்கள் தொகை 13,35,064 ஆகும். இம்மாகாணத்தின் மக்கள் தொகையில் 53.7% நகர்புறங்களிலும், 46.3% கிராமப்புறங்களிலும் வாழ்கின்றனர்.[3] இம்மாகாணத்தில் உக்ரைனியர்கள் 93.6% வாழ்கின்றனர்.[4] உருசிய மொழி பேசுபவர்கள் 5.4% ஆக உள்ளனர்.

பொருளாதாரம்

தொகு

இம்மாகாணத்தின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும். கோதுமை, சர்க்கரை வள்ளி கிழங்கு, பார்லி, சோளம், புகையிலை மற்றும் சணல் முக்கிய பயிர்கள் ஆகும். கால்நடைப் பண்ணைகள் அதிகம் உள்ளது. செர்கசி நகரத்தில் வேதியியல் தொழிற்சாலைகள், வேளாண்மைப் பொருட்கள் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.

கல்வி

தொகு
  • செர்கசி தேசியப் பல்கலைக்கழகம்
  • செர்கசி அரசு தொழிநுட்ப பல்கலைக்கழகம்
  • உமான் தேசிய தோட்டக்கலை பல்கலைக்கழகம்
  • பாவ்லோ தைசினா உமான் அரசு கல்வியியல் பல்கலைக்கழகம்
  • பொருளாதாரம் மற்றும் மேலாண்மைக்கான கிழக்கு ஐரோப்பிய பல்கலைக்கழகம் (தனியார்)

மேற்கோள்கள்

தொகு
  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF). United Nations Statistics Division. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
  2. Zelensky replaces heads of Odesa, Cherkasy regional state administrations, Ukrinform (2 March 2022)
  3. "General results of the census / Urban and rural population / Cherkasy region". 2001 Ukrainian Census. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-06-03.
  4. "General results of the census / National composition of population / Cherkasy region". 2001 Ukrainian Census. Archived from the original on 2007-07-02. பார்க்கப்பட்ட நாள் 2007-06-03.
  • "Cherkasy Region". Cabinet of Ministers of Ukraine. பார்க்கப்பட்ட நாள் 2007-06-01.
  • (1972) Історіа міст і сіл Української CCP - Черкаська область (History of Towns and Villages of the Ukrainian SSR - Cherkasy Oblast), Kyiv. (in உக்குரேனிய மொழி)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cherkasy Oblast
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • oda.ck.ua—Official website of Cherkasy Oblast Administration (in உக்குரேனிய மொழி, உருசிய மொழி, and ஆங்கில மொழி)
  • ukrainebiz.com—Cherkasy oblast: facts and figures



"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்கசி_மாகாணம்&oldid=3842743" இலிருந்து மீள்விக்கப்பட்டது