செர்னிவ்சி மாகாணம்
செர்னிவ்சி மாகாணம், உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்த சிறு மாகாணம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் செர்னிவ்சி நகரம் ஆகும். இம்மாகாணத்தின் தெற்கில் உருமேனியா மற்றும் மல்தோவா நாடுகளுடன் பன்னாட்டு எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இம்மாகாணம் கார்பேத்திய மலைகள், காடுகள், சமவெளிகள் கொண்டது. தினிஸ்டர் ஆறு இம்மாகாணத்தில் பாய்கிறது. 2020-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 8,96,566 ஆகும்.
செர்னிவ்சி மாகாணம்
Чернівецька область | |
---|---|
செர்னிவெத்ஸ்கா மாகாணம் [1] | |
ஆள்கூறுகள்: 48°17′N 26°01′E / 48.28°N 26.01°E | |
நாடு | உக்ரைன் |
நிறுவப்பட்ட நாள் | 9 ஆகஸ்டு 1940 |
தலைநகரம் | செர்னிவ்சி நகரம் |
அரசு | |
• ஆளுநர் | செர்கி ஒசாசுச் [2][3] |
• செர்னிவ்சி மாகாணச் சட்டமன்றம் | 64 உறுப்பினர்கள் |
• தலைவர் | ஐவான் முண்டயன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,097 km2 (3,126 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 25வது இடம் |
மக்கள்தொகை (2021)[4] | |
• மொத்தம் | ▼ 8,96,566 |
• தரவரிசை | 26வது இடம் |
• ஆண்டு வளர்ச்சி | −0.4%% |
Demographics | |
• அலுவல் மொழி | உக்குரேனிய மொழி |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கத்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 58-60xxx |
வட்டாரக் குறியீடு | +380-37 |
ஐஎசுஓ 3166 குறியீடு | UA-77 |
வாகனப் பதிவு | СЕ |
மாவட்டங்கள் | 11 |
நகரங்கள் (மொத்தம்) | 11 |
• மண்டல நகரங்கள் | 2 |
நகர்புற குடியிருப்பு பகுதிகள் | 8 |
கிராமங்கள் | 398 |
FIPS 10-4 | UP03 |
இணையதளம் | www.oda.cv.ua www.rada.gov.ua |
புவியியல்
தொகு8,097 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செர்னிவ்சி மாகாணம், உக்ரைன் நாட்டின் பரப்பளவில் 1.3% கொண்ட மிகச்சிறிய மாகாணம் ஆகும். இம்மாகாணத்தில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாயும் 75 ஆறுகள் உள்ளது. இம்மாகாணத்தின் பெரிய ஆறு தினிஸ்டர் ஆறு 290 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.[5] இம்மாகாணம் 3 வகையான புவியியல் அமைப்புகளை கொண்டது. புல்வெளி காடுகள், கார்பேத்திய மலைகள் மற்றும் காடுகள் ஆகும்.
அமைவிடம்
தொகுஉக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்த செர்னிவ்சி மாகாணத்தின் தெற்கில் உருமேனியா மற்றும் மல்தோவா நாடுகளும், பிற திசைகளில் இவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம், * தெர்னோப்பில் மாகாணம், கெமெள்னிட்சிகி மாகாணம் மற்றும் வின்னித்சியா மாகாணம் எல்லைகளாக உள்ளது. இம்மாகாணம் உருமேனியாவுடன் 226 கிலோ மீட்டர் நீளத்திற்கும், மல்தோவாவுடன் 198 கிலோ மீட்டர் நீளத்திற்கும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
மாகாண ஆட்சிப் பிரிவுகள்
தொகுசூலை 2020 முதல் இம்மாகாணம் 3 மாவட்டங்கள், 11 நகரங்கள், 8 நகர்புற குடியிருப்புகள் மற்றும் 252 கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[6] இம்மாகாணத்தில் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 75% (689.1 ஆயிரம்), உருமேனியா மொழி பேசுபவர்கள் 12.5% (114.6 ஆயிரம்), மல்தோவா 7.3% (67.2 ஆயிரம்) மற்றும் உருசிய மொழி பேசுபவர்கள் 4.1% (37.9 ஆயிரம்) உள்ளனர். மேலும் பெலருசியா, யூத மொழிகள் பேசுபவர்கள் 1.2% ஆக உள்ளனர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). Toponymic Guidelines for Map and Other Editors for International Use (PDF). scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
{{cite book}}
:|website=
ignored (help) - ↑ "Government adopts a series of personnel decisions". Cabinet of Ministers of Ukraine. October 28, 2019. https://www.kmu.gov.ua/en/news/uryad-prijnyav-nizku-kadrovih-pitan.
- ↑ "Serhiy Osachuk appointed new head of Chernivtsi RSA". Ukrinform. November 25, 2019. https://www.ukrinform.net/rubric-polytics/2824826-osachuk-appointed-new-head-of-chernivtsi-regional-state-administration.html.
- ↑ "Чисельність наявного населення України (Actual population of Ukraine)" (PDF) (in உக்ரைனியன்). State Statistics Service of Ukraine. Archived from the original (PDF) on 6 ஏப்ரல் 2022. பார்க்கப்பட்ட நாள் 11 July 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ About Oblast பரணிடப்பட்டது 2008-05-03 at the வந்தவழி இயந்திரம் Chernivtsi Oblast State Administration (in உக்குரேனிய மொழி)
- ↑ 2001 Ukrainian Census | English version | Results | General results of the census | National composition of population | Chernivtsi region பரணிடப்பட்டது 2007-11-13 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- Chernivtsi Oblast Administration (official website) (in உக்குரேனிய மொழி)
- Chernivtsi Oblast Council (official website) (in உக்குரேனிய மொழி)
- Statistics Committee of Chernivtsi Oblast (in உக்குரேனிய மொழி)