செலீனியம் டிரையாக்சைடு

சூரிய சக்தி கருவிகளில் பயன்படும் வேதிச் சேர்மம்

செலீனியம் டிரையாக்சைடு (Selenium trioxide) என்பது SeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியம் மூவாக்சைடு என்றும் இச்சேர்மத்தை அழைக்கலாம். வெண்மை நிறங்கொண்டு நீருறிஞ்சும் சேர்மமாக இது காணப்படுகிறது. ஒரு ஆக்சிசனேற்றியாகவும் இலூயிசு அமிலமாகவும் செயல்படுகிறது. Se(VI) சேர்மங்கள் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகவும் செலீனியம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளுக்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள்[3]. செலீனியம் மூவாக்சைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

செலீனியம் டிரையாக்சைடு
Selenium trioxide[1]
Structural formula of the monomer as found in the gas phase
Structural formula of the monomer as found in the gas phase
Space-filling model of the monomer as found in the gas phase
Space-filling model of the monomer as found in the gas phase
இனங்காட்டிகள்
13768-86-0 N
ChemSpider 103019 Y
InChI
  • InChI=1S/O3Se/c1-4(2)3 Y
    Key: VFLXBUJKRRJAKY-UHFFFAOYSA-N Y
  • InChI=1/O3Se/c1-4(2)3
    Key: VFLXBUJKRRJAKY-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 115128
  • O=[Se](=O)=O
பண்புகள்
SeO3
வாய்ப்பாட்டு எடை 126.96 கி/மோல்
தோற்றம் வெண்மையான நீருறிஞ்சும் படிகங்கள்
அடர்த்தி 3.44 கி/செ.மீ3
உருகுநிலை 118.35 °C (245.03 °F; 391.50 K)
கொதிநிலை பதங்கமாகும்
நன்றாகக் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணகம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
Lethal dose or concentration (LD, LC):
7 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
7.08 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)
5.06 மி.கி/கி.கி (கினியா பன்றி, வாய்வழி)
2.25 மி.கி/கி.கி (முயல், வாய்வழி )
13 மி.கி/கி.கி (குதிரை, வாய்வழி)[2]
13 மி.கி/கி.கி (பன்றி, வாய்வழி)
9.9 மி.கி/கி.கி (பசு, வாய்வழி)
3.3 மி.கி/கி.கி (ஆடு, வாய்வழி)
3.3 மி.கி/கி.கி (செம்மறி ஆடு, வாய்வழி)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

செலீனியம் டிரையாக்சைடு நிலைப்புத்தன்மை இல்லாமல் இருப்பதால் இதைத் தயாரிப்பது கடினமாகும்.

2 SeO3 → 2 SeO2 + O2

சாதாரணமான சூழல் நிபந்தனைகளில் செலீனியம் டையாக்சைடு எரியாது என்பதால் இதை வேறு பல வழிகளில் தயாரிக்கிறார்கள்[3].செலீனிக் அமிலத்தை பாசுபரசு பென்டாக்சைடுடன் சேர்த்து 150-160 ° செல்சியசு வெப்பநிலையில் நீரிறக்கம் செய்து தயாரிக்கலாம். நீர்ம கந்தக டிரையாக்சைடை பொட்டாசியம் செலீனேட்டுடன் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.

SO3 + K2SeO4 → K2SO4 + SeO3

வினைகள்

தொகு

வேதியியலில் செலீனியம் டிரையாக்சைடானது (SeO3) தெல்லூரியம் டிரையாக்சைடைக் (TeO3) காட்டிலும் கந்தக டிரையாக்சைடின் (SO3) பண்புகளை ஒத்துள்ளது[3].

120 ° செல்சியசு வெப்பநிலையில் SeO3 செலீனியம் டையாக்சைடுடன் வினைபுரிந்து Se(VI)-Se(IV) சேர்மம் டைசெலினியம் பென்டாக்சைடைத் தருகிறது:[4]

SeO3 + SeO2 → Se2O5.

இவ்விளை பொருள் செலீனியம் டெட்ராபுளோரைடுடன் வினைபுரிந்து சல்பூரைல் புளோரைடை ஒத்த செலீனியம் சேர்மமான செலீனோயில் புளோரைடாக உருவாகிறது.

SeO3 + SeF4 → SeO2F2

SO3 உடன் பிரிடின், டையாக்சேன் மற்றும் ஈதர் போன்ற இலூயிசு காரங்கள் சேர்ந்து கூட்டு விளைபொருட்கள் உருவாகின்றன[3].

இலித்தியம் ஆக்சைடு மற்றும் சோடியம் ஆக்சைடு போன்ற சேர்மங்களுடன் வினைபுரிந்து SeVIO54− மற்றும் SeVIO66−:உப்புகள் உருவாகின்றன:[5], மேலும் Li2O, உடன் இது வினைபுரிந்து தளவழிப் பிணைப்பு 170.6–171.9 பைக்கோமீட்டரும், நீள் அச்சு Se-O பிணைப்பு 179.5 பைக்கோமீட்டர் அளவுடன் கூடிய முக்கோணப் பட்டக எதிர்மின் அயனியைக் (SeVIO54−) கொண்ட Li4SeO5, சேர்மத்தைக் கொடுக்கிறது.

Na2O சேர்மத்துடன் இச்சேர்மம் வினைபுரிந்து சதுர சாய்தள கோபுர SeVIO54−அயனியைக் கொண்ட Na4SeO5 சேர்மத்தைக் கொடுக்கிறது. இச்சேர்மத்தின் Se-O பிணைப்பு நீளங்கள் 1.729 → 1.815 பைக்கோ மீட்டர்களாகும். Na12(SeO4)3(SeO6), containing octahedral SeVIO66− அயனியைக் கொண்ட Na12(SeO4)3(SeO6) சேர்மமும் இவ்வினையில் உருவாகிறது. SeVIO66− என்பது ஆர்த்தோசெலீனிக் அமிலத்தினுடைய (Se(OH)6) இணை காரமாகும்.

கட்டமைப்பு

தொகு

திண்ம நிலைக் கட்டத்தில் SeO3 எட்டு உறுப்பினர் கொண்ட (Se-O)4 வளையத்துடன் கூடிய வளைய நாற்படிகளைக் கொண்டுள்ளது. செலீனியம் அணுக்கள் 4- ஒருங்கிணைவுகளுடன் அமைந்துள்ளன. பாலம் அமைக்கும் Se-O பிணைப்பு நீளங்கள் 175 பைக்கோமீட்டர் மற்றும் 181 பைக்கோமீட்டர்களாகவும் பாலமற்ற பிணைப்புகள் 156 பைக்கோமீட்டர் மற்றும் 154 பைக்கோமீட்டர்களாகவும் காணப்படுகின்றன[5].

SeO3 வாயுநிலைக் கட்டத்தில் நாற்படி மற்றும் ஓருறுப்பு SeO3 களைப் பெற்றுள்ளது. முக்கோணத் தளத்தில் உள்ள Se-O பிணைப்பின் பிணைப்பு நீளம் 168.78 பைக்கோமீட்டர்களாகும்[6].

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
  2. 2.0 2.1 "Selenium compounds (Se) ஆக". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 3.2 3.3 Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0123526515
  4. Z. Žák "Crystal structure of diselenium pentoxide Se2O5" Zeitschrift für anorganische und allgemeine Chemie 1980, volume 460, pp. 81–85. எஆசு:10.1002/zaac.19804600108
  5. 5.0 5.1 Handbook of Chalcogen Chemistry: New Perspectives in Sulfur, Selenium and Tellurium, Franceso A. Devillanova, Royal Society of Chemistry, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780854043668
  6. Brassington, N. J.; Edwards, H. G. M.; Long, D. A.; Skinner, M. (1978). "The pure rotational Raman spectrum of SeO3". Journal of Raman Spectroscopy 7 (3): 158–160. doi:10.1002/jrs.1250070310. பன்னாட்டுத் தர தொடர் எண்:0377-0486. https://archive.org/details/sim_journal-of-raman-spectroscopy_1978-06_7_3/page/158. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலீனியம்_டிரையாக்சைடு&oldid=3849208" இலிருந்து மீள்விக்கப்பட்டது