செலீனியம் டெட்ராபுளோரைடு

செலீனியம் டெட்ராபுளோரைடு (Selenium tetrafluoride) (SeF4) ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் எளிதில் நீருடன் வினைபுரியக்கூடிய நிறமற்ற திரவம் ஆகும். இச்சேர்மமானது கரிமத் தொகுப்பு முறைகளில் (ஆல்ககால்கள், கார்பாக்சிலிக் அமிலங்கள் அல்லது கார்போனைல் ஆகியவற்றின் புளோரினேற்றம்)  புளோரினேற்றம் செய்வதற்கான காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. மிதமான நிலைகளில் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பும், வாயுவாக இல்லாமல் திரவ நிலையில் இருப்பதும் இதை கந்தக டெட்ராபுளோரைடைக் காட்டிலும் சிறந்த புளோரினேற்றக் காரணியாக ஆக்குகிறது.

செலீனியம் டெட்ராபுளோரைடு
இனங்காட்டிகள்
3D model (JSmol)
ChEBI
ChemSpider
ECHA InfoCard 100.033.352
பப்கெம் <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
பண்புகள்
SeF4
வாய்ப்பாட்டு எடை 154.954 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 2.77 கி/செமீ3
உருகுநிலை −13.2 °செல்சியசு (8.2 °பாரன்ஃகைட்; 259.9 கெல்வின்)
கொதிநிலை 101 °செல்சியசு (214 °பாரன்ஃகைட்; 374 கெல்வின்)
தீவிளைவுகள்
NFPA 704
NFPA 704 four-colored diamondFlammability code 0: Will not burn. E.g., waterHealth code 3: Short exposure could cause serious temporary or residual injury. E.g., chlorine gasReactivity code 2: Undergoes violent chemical change at elevated temperatures and pressures, reacts violently with water, or may form explosive mixtures with water. E.g., phosphorusSpecial hazard W: Reacts with water in an unusual or dangerous manner. E.g., cesium, sodium
0
3
2
தொடர்புடைய சேர்மங்கள்
இதர எதிரயனிகள்
செலீனியம் டைஆக்சைடு, செலீனியம்(IV) குளோரைடு, செலீனியம்(IV) புரோமைடு
இதர நேரயனிகள்]]
கந்தக டெட்ராபுளோரைடு, டெல்லூரியம்(IV) புளோரைடு
ஒத்த சேர்மங்கள்
செலீனியம் டைபுளோரைடு, செலீனியம் எக்சாபுளோரைடு
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
☒verify (what is ☑Y☒N ?)
Infobox references

தொகுப்பு முறை

தொகு

1907 ஆம் ஆண்டில் பால் லீபியு செலீனியம் மற்றும் புளோரினை வினைவுரியச் செய்ததே இச்சேர்மத்திற்கான முதலில் வெளிவந்த தொகுப்பு முறை ஆகும்.[1]

Se + 2 F2 → SeF4

எளிதில் கையாளக்கூடிய பொருட்களை வைத்து உருவாக்கப்பட்ட தொகுப்பு முறை தயாரிப்பானது செலீனியம் டையாக்சைடினை கந்தக டெட்ராபுளோரைடைக் கொண்டு புளோரினேற்றம் செய்யும் முறையாகும்.[2]

SF4 + SeO2 → SeF4 + SO2

இந்த வினையில் இடைவினைப்பொருளாக செலீனினைல் புளோரைடு (SeOF2) கிடைக்கிறது.

இச்சேர்மத்திற்கான மற்றொரு தயாரிப்பு முறை தனிம நிலை செலீனியத்தை குளோரின் டிரைபுளோரைடைடுடன் புளோரினேற்றத்திற்கு உட்படுத்துவதாகும்:

3 Se + 4 ClF3 → 3 SeF4 + 2 Cl2

அமைப்பு மற்றும் பிணைப்பு

தொகு

செலீனியம் டெட்ராபுளோரைடில் செலீனியம் +4 ஆக்சிசனேற்ற நிலையைக் கொண்டுள்ளது. வாயு நிலையில் இதன் வடிவம் கந்தக டெட்ராபுளோரைடினை ஒத்த சாய்ந்தாடி அமைப்பினைப் பெற்றுள்ளது. வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை இதன் அமைப்பை செலீனியம் அணுவைச் சுற்றி 5 இலத்திரன் இணையைக் கொண்ட போலி முக்கோணப் பிரமிடு வடிவம் கொண்டது எனக் கணிக்கிறது. முக்கிய அச்சாக விளங்கக் கூடிய Se-F பிணைப்புகள் 177 F-Se-F பிணைப்புக் கோணமானது 169.2° என்ற அளவிலும் இருக்கிறது. மற்ற இரண்டு புளோரின் அணுக்கள் குறைவான நீளமும்(168 பிக்கோமீட்டர்) 100.6° பினணப்புக் கோணமும் கொண்ட பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. குறைவான செறிவுள்ள கரைசல்களில் இந்த ஒருமத்திற்கான வடிவமைப்பு சிறப்பான நிலையைப் பெற்றிருக்கிறது, ஆனால், உயர் செறிவுகளில், கிடைக்கக் கூடிய ஆதாரங்களின்படி, SeF4 மூலக்கூறுகளுக்கிடையேயான வலிமை குறைந்த இணைப்பின் காரணமாக செலீனியத்தைச் சுற்றிலும் சீர்மை குலைந்த எண்முகி வடிவமைப்பிற்கு வழிவகுக்கிறது. திண்மத்தில் செலீனிய மையமானது ஒரு சீர்மை குலைந்த எண்முகிச் சூழலையே கொண்டுள்ளது.

வினைகள்

தொகு

ஐதரசன் புளோரைடில், SeF4 ஆனது கந்தக டெட்ராபுளோரைடைக் (SF4) காட்டிலும் வலிமை குறைந்த காரமாகச் செயல்படுகிறது.(Kb= 2 X 10−2):

SeF4 + HF → SeF3+ + HF2; (Kb = 4 X 10−4)

SbF5, AsF5, NbF5, TaF5, மற்றும் BFஆகியவற்றுடன் SeF3+ நேரயனிகளைக் கொண்ட அயனி சேர்க்கைப் பொருட்கள் உருவாகின்றன. [3] சீசியம் புளோரைடுடன், (CsF), SeF5 எதிரயனியானது உருவாகிறது. இந்த எதிரயனி குளோரின் பென்டாபுளோரைடு மற்றும் புரோமின் பென்டாபுளோரைடு ஆகியவற்றை ஒத்த சதுர பிரமிடு அமைப்பைப் பெற்றுள்ளது.[4] 1,1,3,3,5,5-எக்சாமெதில்பைப்பெரிடினியம் புளோரைடு அல்லது 1,2-டைமெதில்புரொப்பைல்மும்மெதில்அம்மோனியம்புளோரைடுடன், SeF62− எதிரயனியானது உருவாகிறது. இந்த எதிரயனியானது சீர்குலைந்த எண்முகி வடிவத்தைக் கொண்டுள்ளது. இதன் ஒத்த சேர்மமான SeCl62− (ஒழுங்கு அறுகோண வடிவம்) இலிருந்து இந்த எதிரயனியானது முரண்பட்டு சீர்மை குலைந்த எண்முகி வடிவத்தைப் பெறுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Paul Lebeau (1907). "Action of Fluorine on Selenium Tetrafluoride of Selenium". Comptes Rendus de l'Académie des Sciences de Paris 144: 1042. 
  2. Konrad Seppelt, Dieter Lentz, Gerhard Klöter "Selenium Tetrafluoride, Selenium Difluoride Oxide (Seleninyl Fluoride), and Xenon Bis[Pentafluorooxoselenate(VI)]" Inorg. Synth., 1987, vol. 24, 27-31. எஆசு:10.1002/9780470132555.ch9
  3. R. J. Gillespie; A. Whitla (1970). "Selenium tetrafluoride adducts. II. Adducts with boron trifluoride and some pentafluorides". Can. J. Chem. 48 (4): 657–663. doi:10.1139/v70-106. 
  4. K. O. Christe; E. C. Curtis; C. J. Schack; D. Pilipovich (1972). "Vibrational Spectra and Force Constants of the Square-Pyramidal Anions SF5, SeF5, and TeF5". Inorganic Chemistry 11 (7): 1679–1682. doi:10.1021/ic50113a046. 
  5. Ali Reza Mahjoub; Xiongzhi Zhang; Konrad Seppelt (1995). "Reactions of the Naked Fluoride Ion: Syntheses and Structures of SeF62− and BrF6". Chemistry: A European Journal 1 (4): 261–265. doi:10.1002/chem.19950010410.