செல்லூர்
செல்லூர் வங்கக் கரையில் இருந்ததோர் ஊர்.
இக்காலத்தில் பன்னாட்டுப் பறவைகளின் புகலிடமாக விளங்கும் கோடியக்கரைப் பகுதியில் இந்த ஊர் இருந்தது எனல் பொருத்தமானது.
செல்லூர் என்னும் பெயருடன் முதுகுளத்தூர் பகுதியில் ஓர் ஊர் உள்ளது.
இது கடல், வயல், கானம் ஆகிய மூன்று நில வளங்களும் கொண்டது.
இந்த ஊரில் அன்றில் பறவைகள் மிகுதி. [1]
இப்பகுதியில் இருந்த மற்றொரு சங்ககால ஊர் ஊணூர்.
செல்லூர் அரசன் செல்லிக்கோமான் ஆதன் எழினி. இவன் இளங்கோசர் குடிமக்களின் தலைவன். [2] நெடியோன் என்னும் அரசன் இவனது மார்பில் வேலைப் பாய்ச்சிக் கொன்றான். செல்லூரில் கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்ட வெற்றித்தூணும் நாட்டினான் [3] [4]
சங்ககாலப் புலவர்களில் இருவர் செல்லூரில் வாழந்தனர். அவர்கள் 1) செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார், 2) செல்லூர்க் கோசிகன் கண்ணனார். 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி இந்தச் செல்லூர்நாட்டில் வாழ்ந்தவன்.
மதுரையில் உள்ள செல்லூர் (ஆப்பனூர்) 1 பரணிடப்பட்டது 2011-10-11 at the வந்தவழி இயந்திரம் வேறு.
அடிக்குறிப்பு
தொகு- ↑ ஓதம் காலைக் கொட்கும் பழம்பல் நெல்லின் ஊணூர் ஆங்கண் நெடும்புள் (அன்றில்) போல வருந்தினை இளநாகனார் - அகநானூறு 220
- ↑ கடலாடு மகளிர் கொய்த ஞாழலும், கழனி உழவர் குற்ற குவளையும் கடிமிளைப் புறவின் பூத்த முல்லைநொடு பல் இளங்கோசர் கண்ணி அயரும் மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் – ஆதன் எழினி அருநிறத்து அழுந்திய – வேல் போல வருந்துவர் (தலைவி சேரி செலினே) – பரத்தை கூற்று – ஐயூர் முடவனார் – அகம் 216
- ↑ அருந்திறல் கடவுள் செல்லூர்க் குணாஅது பெருங்கடல் முழக்கிற்று – கருங்கட் கோசர் நியமம் ஆயினும் உறும் எனக் கொள்குவர் அல்லர் நறுநுதல அரிவை பாசிழை விலையே மருதன் இளநாகனார் - அகநானூறு 90
- ↑ ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ, தேரொடு மறுகியும், பணிலம் பயிற்றியும், கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர், கடாஅ யானைக் குழுச்சமம் ததைய, மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் முன் முயன்று அரிதின் முடித்த வேள்விக் கயிறு அரை யாத்த காண்தரு வனப்பின் அருங்கடி நெடுந்தூண் போல யாவரும் காணலாகா மாணெழில் அகலம் உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே