செவன் கலிஸ் சுசூகி
செவன் கலிஸ் சுசூகி (Severn Cullis-Suzuki, பிறப்பு: 30 நவம்பர் 1979) என்பவர் ஒரு கனடிய சூழலியல் ஆர்வலர், எழுத்தாளர் ஆவார். இவர் சூழலில் பிரச்சினைகள் குறித்து உலகம் முழுவதும் பேசியுள்ளார். கேட்போர் தங்கள் விழுமியங்களை வரையறுக்கவும், எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படவும், தங்களுக்கான பொறுப்பை ஏற்கவும் வலியுறுத்தினார். இவர் கனடாவைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலரான டேவிட் சுசூகியின் மகள் ஆவார்.
செவன் சுசூகி Severn Suzuki | |
---|---|
2006 அக்டோபரில் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் கலிஸ்-சுசூகி பேசுகிறார் | |
பிறப்பு | 30 நவம்பர் 1979 வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடா |
குடியுரிமை | கனடியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | யேல் பல்கலைக்கழகம், விக்டோரியா பல்கலைக்கழகம் |
பணி | சூழலில் ஆர்வலர், பேச்சாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், எழுத்தாளர் |
வாழ்க்கை
தொகுசெவன் கலிஸ் சுசூகி கனடாவின், பிரிட்டிசு கொலம்பியாவின் வான்கூவரில் பிறந்து வளர்ந்தார். இவரது தாயார் எழுத்தாளர் தாரா கலிஸ். இவரது தந்தை, மூன்றாம் தலைமுறை யப்பானிய கனடியரான மரபியல் நிபுணர் மற்றும் சூழலில் ஆர்வலர் டேவிட் சுசூகி ஆவார்.[1] பிரஞ்சு இம்மர்சனில் உள்ள லார்ட் டென்னிசன் தொடக்கப் பள்ளியில் படிக்கும் போது, தன் ஒன்பது வயதில், இவர் சுற்றுச்சூழல் குழந்தைகள் அமைப்பு (ECO) என்ற சூழலியல் அமைப்பை நிறுவினார். இது சூழலில் சிக்கல்களைப் பற்றி மற்ற இளைஞர்கள் கற்றுக்கொள்வதற்கும் கற்பிப்பதற்குமான குழந்தைகள் குழுவாகும். 1992 இல், இவர் தன் 12 வயதில், இரியோ டி செனீரோவில் நடந்த புவி உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள தான் நிறுவிய குழுவின் உறுப்பினர்களிடம் நிதி திரட்டினார். குழு உறுப்பினர்களான மைக்கேல் குயிக், வனேசா சுட்டி, மோர்கன் கீஸ்லர் ஆகியோருடன், கலிஸ் சுசூகியும் அந்த உச்சிமாநாட்டில் இளைஞர்களின் பார்வையில் சூழலியல் சிக்கல்களை முன்வைத்தார். அங்கு இவர் மாநாட்டு பேராளர்களிடம் ஆற்றிய உரைக்காக பாராட்டப்பட்டார். அந்தக் காணொளி பரவலான கவனத்தைப் பெற்றது. இதனால் "ஐந்து நிமிடத்திற்கு உலகை மௌனமாக்கியவர்" என்ற பாராட்டப்பட்டார்.[2]
1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் குளோபல் 500 ரோல் ஆஃப் ஆனர் விருது அளித்து இவர் கௌரவிக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டு, டபுள்டே பதிப்பகத்தினால் இவரது உலகத்துக்குச் சொல்லுங்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது. இது குடும்பங்களுக்கான சூழல் படிகள் குறித்த 32 பக்க நூலாகும்.
கலிஸ் சுசூகி 2002 இல் யேல் பல்கலைக்கழகத்தில் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். யேலுக்குப் பிறகு, கலிஸ் சுசூகி இரண்டு ஆண்டுகள் பயணங்களை மேற்கொண்டார். 2002 இல் டிஸ்கவரி கிட்சில் ஒளிபரப்பப்பட்ட குழந்தைகளுக்கான தொலைக்காட்சித் தொடரான சுசூகிஸ் நேச்சர் குவெஸ்ட் என்ற நிகழ்ச்சியை கலிஸ்-சுசூகி இணைந்து தொகுத்து வழங்கினார்.
2002 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்கைஃபிஷ் புராஜெக்ட் என்ற இணைய அடிப்படையிலான சிந்தனைக் குழுவைத் துவக்க உதவினார். கோபி அன்னானின் சிறப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக, இவரும் ஸ்கைஃபிஷ் திட்டத்தின் உறுப்பினர்களும் 2002 ஆகத்தில் ஜோகானஸ்பேர்க்கில் நடந்த வளம் குன்றா வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாட்டில் "பொறுப்பின் அங்கீகாரம்" என்ற உறுதிமொழியை கொண்டு வந்தனர் ஸ்கைஃபிஷ் திட்டம் 2004 இல் கலைக்கப்பட்டது, ஏனெனில் கல்லிஸ்-சுசூகி தனது கவனத்தை மீண்டும் கல்வி பக்கமாக திருப்பினார். விக்டோரியா பல்கலைக்கழகத்தில் நான்சி டர்னரின் கீழ் மக்கள் தாவரத்தொடர்பியிலை படிப்பதற்காக பட்டதாரி திட்டத்தில் சேர்ந்து, 2007 இல் முடித்தார்
ஜீன்-பால் ஜாட் இயக்கி 10, நவம்பர், 2010 அன்று பிரான்சு திரையரங்குகளில் வெளியிடப்பட்ட செவர்ன், தி வாய்ஸ் ஆஃப் எவர் சில்ட்ரன் என்ற ஆவணப்படத்தில் கலிஸ்-சுசூகி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.
கலிஸ் சுசூகி எர்த் சார்ட்டர் இன்டர்நேஷனல் கவுன்சில் உறுப்பினராக உள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு2008 இல் திருமணம் செய்துகொண்ட குலிஸ்-சுசூகி தன் கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள ஹைடா குவாயில் 2021 ஆகத்து வரை வாழ்ந்தார்.[3] டேவிட் சுசுகி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக புதிய பொறுப்பை ஏற்கும் பொருட்டு 2021 செப்டம்பரில் வான்கூவருக்குக் குடிபெயர்ந்தார்.[4][5][6][7]
இவர் இரண்டு தேசிய வளைகோல் லீக் வீரர்களான நிக் சுசூகி மற்றும் ரியான் சுசூகி ஆகியோரின் உறவினர்.
குறிப்புகள்
தொகு- ↑ Fernandes, Cesil (May 29, 2012). "'Rio girl' Severn Cullis-Suzuki 20 years on". dw.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.
- ↑ "Nearly 30 years before Greta Thunberg, a 12-year-old girl shamed world leaders at the United Nations". news.com.au.
- ↑ "A Fine Balance". Earth Island Journal. பார்க்கப்பட்ட நாள் 2021-10-29.
- ↑ "bio". Severn Cullis-Suzuki (in ஆங்கிலம்). 2019-07-11. பார்க்கப்பட்ட நாள் 2021-10-29.
- ↑ "Severn Cullis-Suzuki to become executive director of David Suzuki Foundation". The Georgia Straight (in ஆங்கிலம்). 2020-11-09. பார்க்கப்பட்ட நாள் 2021-10-29.
- ↑ "Quarantine as Ceremony: COVID-19 as an Opportunity to Quietly Rebel against the Dominant Langscape". Terralingua (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-29.
- ↑ Tretkoff, Ernie (2010). "Christine McEntee Takes Office as AGU Executive Director". Eos, Transactions American Geophysical Union 91 (36): 313. doi:10.1029/2010eo360005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0096-3941. Bibcode: 2010EOSTr..91..313T. http://dx.doi.org/10.1029/2010eo360005.