செவ்வலகு கூன்வாள் சிலம்பன்

செவ்வலகு கூன்வாள் சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்:
போமாதோரிங்கசு
இனம்:
போ. ஓக்ரேசிசெப்சு
இருசொற் பெயரீடு
போமாதோரிங்கசு ஓக்ரேசிசெப்சு
வால்தென், 1873

செவ்வலகு கூன்வாள் சிலம்பன் (Red-bild Scimitar-Babbler) என்பது திமாலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது வடகிழக்கு இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு சீனா அருகிலுள்ள பகுதிகளில் காணப்படுகிறது. இது கூன்வாள் சிலம்பன்களின் நீண்ட சிவப்பு-ஆரஞ்சு நிற வளைந்த அலகு, நீண்ட வெள்ளை சூப்பர்சிலியம் மற்றும் பழுப்பு நிற மேல் பகுதிகள் மற்றும் வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆண் பெண் பறவைகள் ஒத்தவை.

இது பொதுவாக இதன் வரம்பில் 300-2400 மீட்டருக்கு இடையில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள், குறிப்பாக மூங்கில் கொத்துகள் மற்றும் போகீனியா அதிகமாக்க் காணப்படும் காடுகளில் காணப்படும். உள்ளன. இது முக்கியமாக முதுகெலும்பற்ற விலங்குகளை உணவாகக் கொள்கிறது. ஆனால் பூக்களிலிருந்து தேனை உட்கொள்வதாகவும் அறியப்படுகிறது. இது கலப்பு-இன பறவை மந்தைகளில் அடிக்கடி காணப்படும். பெரும்பாலும் வெள்ளை-முடி சிலம்பன்களுடன் தொடர்புடையது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Pomatorhinus ochraceiceps". IUCN Red List of Threatened Species 2016: e.T22715984A94477385. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715984A94477385.en. https://www.iucnredlist.org/species/22715984/94477385. பார்த்த நாள்: 11 November 2021. 
  • Collar, N. and C. Robson (2020). Red-billed Scimitar-Babbler (Pomatorhinus ochraceiceps), version 1.0. In Birds of the World (J. del Hoyo, A. Elliott, J. Sargatal, D. A. Christie, and E. de Juana, Editors). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA. https://doi.org/10.2173/bow.rbsbab1.01