செவ்வாற்று கட்டுவிரியன்
செவ்வாற்று கட்டுவிரியன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எலாபிடே
|
பேரினம்: | பங்காரசு
|
இனம்: | ப. சுலோவின்சுகி
|
இருசொற் பெயரீடு | |
பங்காரசு சுலோவின்சுகி உல்ரிச் குச் மற்றும் பலர், 2005 | |
செவ்வாற்று கட்டுவிரியன் (Red River krait) எனப் பொதுவாக அழைக்கப்படும் பங்காரசு சுலோவின்சுகி, எலாபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நச்சுப் பாம்பு ஆகும். இந்தச் சிற்றினம் தென்கிழக்கு ஆசிய பெருநிலத்திலும் நோர்வேயிலும் காணப்படுகின்றது.
வகைப்பாட்டியல்
தொகு2005ஆம் ஆண்டு, உல்ரிச் குச்சும் அவருடன் பணியாற்றுபவர்களும் இந்தச் சிற்றினத்தை வகைப்படுத்தினர். இச்சிற்றினத்திற்கு, 38 வயதில் விரியன் பாம்புக் கடியால் இறந்த அமெரிக்க ஊர்வனவியலாளர் ஜோசப் புருனோ சுலோவின்சுகியின் நினைவாக, சுலோவின்சுகி என்று பெயரிடப்பட்டது.[2]
விளக்கம்
தொகுப. சுலோவின்சுகியின் உடலிலும் வால் பகுதியிலும் மாறி மாறிப் பரந்த கருப்பு வளையங்களையும் குறுகிய வெள்ளை வளையங்களையும் காணலாம். முதுகெலும்புச் செதில்கள் நடுப்பகுதியில் 15 வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. முதுகெலும்பு வரிசையில் உள்ள முதுகெலும்புச் செதில்கள் விரிவடைந்து அறுகோணமாக உள்ளன. வாலடிச் செதில்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
பரவலும் வாழிடமும்
தொகுப. சுலோவின்சுகி தற்போது வியட்நாம், வடகிழக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[3] ப. சுலோவின்சுகி காடுகளில் விரும்பி வாழ்கிறது. இது 400-700 மீ (ID2) உயரப் பகுதிகளில் காணப்படுகிறது.[1]
இனப்பெருக்கம்
தொகுப. சுலோவின்சுகி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Stuart, B.; Nguyen, T.Q. (2012). "Bungarus slowinskii". IUCN Red List of Threatened Species 2012: e.T192221A2057605. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T192221A2057605.en. https://www.iucnredlist.org/species/192221/2057605. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5.
- ↑ Smits, Ton; Hauser, Sjon (2019). "First record of the krait Bungarus slowinskii Kuch, Kizirian, Nguyen, Lawson, Donelly and Mebs, 2005 (Squamata: Elapidae) from Thailand"". Tropical Natural History 19 (2): 43–50. https://www.tci-thaijo.org/index.php/tnh/article/download/170942/137366/.
மேலும் வாசிக்க
தொகு- Kharin, Vladimir E.; Orlov, Nikolai L.; Ananjeva, Natalia B. (2011). "New Records and Redescription of Rare and Little-Known Elapid Snake Bungarus slowinskii (Serpentes: Elapidae: Bungarinae)". Russian Journal of Herpetology 18 (4): 284–294.