பி. கே. சேகர் பாபு

(சேகர் பாபு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பி. கே. சேகர் பாபு ஒரு இந்திய அரசியல்வாதியும், அமைச்சரும் ஆவார்.

பி. கே. சேகர்பாபு
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 மே 2021
முதல்வர் மு. க. ஸ்டாலின்
முன்னவர் சேவூர் ராமச்சந்திரன்  
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 10, 1963 (1963-01-10) (அகவை 60)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர் இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) எஸ். சாந்தி
பிள்ளைகள் பி.எஸ்.விக்னேஷ்
பி.எஸ்.ஜெயகல்யாணி
பி.எஸ்.ஜெயசிம்மன்
பெற்றோர் பி.கிருஷ்ணசாமி
கோவிந்தம்மாள்
இருப்பிடம் ஓட்டேரி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா

அரசியல் வாழ்க்கை தொகு

சேகர்பாபு தனது அரசியல் வாழ்க்கையை அ.இ.அ.தி.மு.க.வில் தொடங்கினார். அக்கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளராகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.[1] பின்னர் அவரும் அவர்தம் ஆதரவாளர்களும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதால், சலிப்படைந்த அவர் அக்கட்சியை விட்டுவிலகினார். 2011 சனவரி 29ஆம் நாள் சனிக்கிழமை தன்னைத் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.[1]

பதவி தொகு

இவர் 2001 மற்றும் 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக உறுப்பினராக போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 சனவரியில் தி.மு.க.வில் இணைவதற்காக ச.ம.உ.பதவியிலிருந்து விலகினார்.[1], [2][3][4] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சசராக பதவியேற்றார்.[5]

தேர்தலில் போட்டியிட்ட ஆண்டுகள் தொகு

ஆண்டு தொகுதி கட்சி முடிவு
2001 ஆர். கே. நகர் அதிமுக வெற்றி
2006 ஆர். கே. நகர் அதிமுக வெற்றி
2011 ஆர். கே. நகர் திமுக தோல்வி
2016 துறைமுகம் திமுக வெற்றி
2021 துறைமுகம் திமுக வெற்றி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._சேகர்_பாபு&oldid=3563182" இருந்து மீள்விக்கப்பட்டது