சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு

(சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு (Sheikh Zayed Cricket Stadium) ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி நகரில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்காகும். இவ்வரங்கு $23 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2004 மே மாதத்தில் திறக்கப்பட்டது.[1] இவ்வரங்கில் விளையாடப்பட்ட முதலாவது ஆட்டம் இசுக்காட்லாந்து, கென்ய அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல்-தர ஆட்டம் ஆகும். இது 2004 நவம்பரில் கண்டங்களிடைக் கிண்ணத்திற்காக நடத்தப்பட்டது. இவ்வரங்கில் 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகளும் இடம்பெற்றன. 20,000 இருக்கைகள் இங்கு உள்ளன.[2]

சைகு சாயிது விளையாட்டரங்கு
Zayed Cricket Stadium
ملعب زايد للكريكت
அரங்கத் தகவல்
அமைவிடம்அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்
ஆள்கூறுகள்24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E / 24.39639; 54.54056
உருவாக்கம்2004
இருக்கைகள்20,000
இயக்குநர்அமீரகத் துடுப்பாட்ட வாரியம்
குத்தகையாளர்ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி
ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி
முடிவுகளின் பெயர்கள்
வடக்கு எல்லை
கூடார எல்லை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு20–24 நவம்பர் 2010:
 பாக்கித்தான் v  தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு10–14 மார்ச் 2021:
 ஆப்கானித்தான் v  சிம்பாப்வே
முதல் ஒநாப18 ஏப்ரல் 2006:
 பாக்கித்தான் v  இந்தியா
கடைசி ஒநாப26 சனவரி 2021:
 ஆப்கானித்தான் v  அயர்லாந்து
முதல் இ20ப10 பெப்ரவரி 2010:
 ஆப்கானித்தான் v  இசுக்காட்லாந்து
கடைசி இ20ப20 அக்டோபர் 2021:
 அயர்லாந்து v  இலங்கை
20 அக்டோபர் 2021 இல் உள்ள தரவு
மூலம்: கிரிக்கின்ஃபோ

இவ்வரங்கிற்கு அமீரகத்தின் முன்னாள் ஆட்சியாளர் சைகு சாயிது இப்னு சுல்தான் ஆல் நகியானின் நினைவாக "சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு" எனப் பெயரிடப்பட்டது.

பன்னாட்டுப் போட்டிகள் தொகு

2006 ஏப்ரலில் இவ்வரங்கில் இந்தியாவுக்கும், பாக்கித்தானுக்கும் இடையில் தொடர் போட்டிகள் 2005 பாக்கித்தான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரிப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இப்போட்டிகளில் $10 மில்லியன் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதியில் 75% பாக்கித்தானுக்கும், மீதம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டது.[3]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Zayed Cricket Stadium- Abu Dhabi Cricket Club". AdCricketClub.ae. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 15 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Zayed Cricket Stadium | United Arab Emirates | Cricket Grounds | ESPNcricinfo". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2018-10-26.
  3. "India bat in Abu Dhabi charity match against Pakistan". Web.archive.org. 10 June 2008. Archived from the original on 10 ஜூன் 2008. பார்க்கப்பட்ட நாள் 8-09-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள் தொகு