துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்

(துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துபாய் பன்னாட்டு அரங்கம் (Dubai International Stadium, முன்னர் துபாய் விளையாட்டு நகர அரங்கம் என அழைக்கப்பட்டது) என்பது ஐக்கிய அரபு அமீரகம், துபாய் நகரில் அமைந்துள்ள பல-நோக்கு அரங்கம் ஆகும். இவ்வரங்கில் முக்கியமாக துடுப்பாட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்து அமீரகத்தில் உள்ள மூன்று விளையாட்டரங்குகளில் ஒன்றாகும். ஏனையவை: சார்ஜா துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு ஆகியனவாகும். துபாய் பன்னாட்டு அரங்கத்தில் 25,000 இருக்கைகள் உள்ளன, இது துபாய் விளையாட்டு நகரின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு
Dubai International Stadium
அரங்கத் தகவல்
அமைவிடம்துபாய் விளையாட்டு நகரம், துபாய்
ஆள்கூறுகள்25°2′48″N 55°13′8″E / 25.04667°N 55.21889°E / 25.04667; 55.21889
உருவாக்கம்2009
இருக்கைகள்25,000[1]
உரிமையாளர்துபாய் புரொப்பர்ட்டீசு
கட்டிடக் கலைஞர்மாட்லூப்
இயக்குநர்துபாய் விளையாட்டு நகரம்
குத்தகையாளர்பாக்கித்தான் துடுப்பாட்ட அணி
முடிவுகளின் பெயர்கள்
எமிரேட்சு சாலை முடிவு
துபாய் விளையாட்டு நகர முடிவு
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு12–16 நவம்பர் 2010:
 பாக்கித்தான் தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு6–10 அக்டோபர் 2017:
 பாக்கித்தான் இலங்கை
முதல் ஒநாப22 ஏப்ரல் 2009:
 பாக்கித்தான் ஆத்திரேலியா
கடைசி ஒநாப21 செப்டம்பர் 2018:
 வங்காளதேசம் இந்தியா
முதல் இ20ப7 மே 2009:
 ஆத்திரேலியா பாக்கித்தான்
கடைசி இ20ப20 சனவரி 2017:
 ஆப்கானித்தான் v  அயர்லாந்து
21 செப்டம்பர் 2018 இல் உள்ள தரவு
மூலம்: கிரிக்கின்ஃபோ

வரலாறு

தொகு

2009 ஏப்ரல் 22 இல், முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி ஆத்திரேலிய, பாக்கித்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்றது. பாக்கித்தான் இப்போட்டியில் வென்றது. முதலாவது தேர்வுப் போட்டி பாக்கித்தானுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையில் 2010 நவம்பரில் நடைபெற்றது. இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Dubai International Cricket Stadium - United Arab Emirates - Cricket Grounds - ESPN Cricinfo". Cricinfo.

வெளி இணைப்புகள்

தொகு