சேது பாரதம்

சேது பாரதம் (Setu Bharatam) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் 4 மார்ச் 2016 அன்று 102 பில்லியன் (US$1.3 பில்லியன்) நிதியில் தொடங்கப்பட்டது திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கமானது, 2019க்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் தொடருந்து குறுக்கீடு இல்லாததாக மாற்றுவதாகும்.[1]

சேது பாரதம்
நாடுஇந்தியா
பிரதமர்நரேந்திர மோதி
துவங்கியது4 மார்ச்சு 2016; 8 ஆண்டுகள் முன்னர் (2016-03-04)

திட்ட விவரங்கள் தொகு

இத்திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆளில்லா தொடருந்து சாலையினை 208 இருப்புப்பாதைக்கு மேல் மற்றும் கீழ்ப் பாலங்கள் கட்டுவதாகும். மேலும் 1,500 பாழடைந்த பிரித்தானியக் கால பாலங்களைப் பகுதி பகுதியாக விரிவுபடுத்தி, சீரமைத்துச் செப்பனிடுதலாகும். இதற்காக முறையே 208 பில்லியன் (US$2.6 பில்லியன்) மற்றும் 300 பில்லியன் (US$3.8 பில்லியன்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[2][3]

சேது பாரதம் திட்டம் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் 2019க்குள் தொடருந்து இருப்புப்பாதை குறுக்கீடு இல்லாத சாலையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இருப்புப்பாதை குறுக்கீடு பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 20,800 கோடி செலவில் 208 ரயில்வே உயர்மட்ட பாலங்கள்/கீழ்ப் பாலங்கள் கட்டப்படும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டப்படும் 208 தொடருந்து மேல்மட்ட பாலங்களின் விவரங்கள் பின்வருமாறு:[4][5]

  • ஆந்திர பிரதேசம் - 33
  • அசாம் - 12
  • பீகார் - 20
  • சத்தீஸ்கர் - 5
  • குஜராத் - 8
  • அரியானா - 10
  • இமாச்சல பிரதேசம் - 5
  • சார்கண்டு - 11
  • கர்நாடகா - 17
  • கேரளா - 4
  • மத்திய பிரதேசம் -6
  • மகாராட்டிரா - 12
  • ஒடிசா - 4
  • பஞ்சாப் - 10
  • ராஜஸ்தான் - 9
  • தமிழ்நாடு - 9
  • உத்தரகண்ட் - 2
  • உத்தரபிரதேசம் - 9
  • மேற்கு வங்காளம் - 22

73 உயர்மட்ட பாலங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. இதில் 64 பாலங்களுக்கு 5600 கோடி நிதி ஒதுக்கீடு அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30,000 கோடி செலவில் 1500க்கும் மேற்பட்ட பழமையான மற்றும் பழுதடைந்த பாலங்கள் படிப்படியாக மாற்றுதல் / அகலப்படுத்துதல் / பலப்படுத்துதல் மூலம் மேம்படுத்தப்படும்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், உ.பி., நொய்டாவில் உள்ள நெடுஞ்சாலைப் பொறியாளருக்கான இந்திய குழுமத்தில் இந்தியப் பாலம் மேலாண்மை அமைப்பை நிறுவியுள்ளது. இதற்காக 11 ஆலோசனை நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 50,000 பாலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பின் முதல் சுழற்சி ஜூன் 2016க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[6][7]

வெளி இணைப்புகள் தொகு

மேலும் பார்க்கவும் தொகு

இதேபோன்ற துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து வளர்ச்சி
இதேபோன்ற விமான போக்குவரத்து வளர்ச்சி
பொது

மேற்கோள்கள் தொகு

  1. "PM Narendra Modi launches Setu Bharatam project, vows to improve road transport in India", Zee News, 4 March 2016
  2. "India poised for quantum leap in infra, says Narendra Modi", The Financial Express, 5 March 2016
  3. "Setu Bharatam project to be kicked off on Friday", தி எகனாமிக் டைம்ஸ், 2 March 2016
  4. Firstpost (4 March 2016). "PM Modi launches Rs 50,800 cr Setu Bharatam project, says India poised for a quantum leap in infra". Firstpost.
  5. "Prime Minister Launches Setu Bharatam Programme".
  6. National Bureau. "PM Narendra Modi launches 'Setu Bharatam' project, vows to improve infrastructure". The Hindu.
  7. "PM Modi launches Rs 50,800 cr Setu Bharatam project to ensure highways without railway crossings by 2019". The Indian Express. 4 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேது_பாரதம்&oldid=3742727" இலிருந்து மீள்விக்கப்பட்டது