சேந்தநாடு திரௌபதியம்மன் கோயில்
சேந்தநாடு திரௌபதியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சேந்தநாடு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1] இங்கு மூலவராக திரௌபதி அம்மனும் மற்றும் விநாயகர் முருகர் சன்னதி உள்ளது. காவல் தெய்வமாக முத்தூலுராவுத்தர் உள்ளார். இத்திருத்தலத்தில் ஆண்டுகள்தோறும் ஆனி மாதத்தில் உற்சவ சேவை நடைபெறும். சிறப்பு உற்சவமாக தேரோட்டமும் தீமிதி திருவிழாவும் நடைபெறும்.
அருள்மிகு திரௌபதியம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கள்ளக்குறிச்சி |
அமைவிடம்: | திரௌபதியம்மன்கோயில் தெரு, சேந்தநாடு, உளுந்தூர்பேட்டை வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | உளுந்தூர்பேட்டை |
மக்களவைத் தொகுதி: | விழுப்புரம் |
கோயில் தகவல் | |
தாயார்: | திரௌபதியம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | தீமிதி திருவிழா |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் திரௌபதியம்மன் சன்னதியும், விநாயகர், முருகர், முத்தாலுராவுத்தர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் தீமிதி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் தேரோட்டம் திருவிழா நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)