சேந்தமங்கலம் (கேரளம்)

சேந்தமங்கலம் (ஆங்கிலம்:Chendamangalam) (அல்லது சேந்நமங்கலம்) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்துக்குட்பட்ட பறவூர் வட்டத்திலுள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இது இதே பெயரில் உள்ள ஊராட்சியையும் உள்ளடக்கியது.

இருப்பிடம்

தொகு

இது எர்ணாகுளத்திலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் மூன்று ஆறுகள், நதிகளின் ஏழு நுழைவாயில்கள், மலைகள், பசுமையான சமவெளிகள் ஆகியவற்றால் அமையப்பெற்றது.

ஈர்ப்புகள்

தொகு

கொச்சியின் முன்னாள் மகாராஜாக்களுக்கு பரம்பரை அமைச்சர்களாக இருந்த பாளையத்து அச்சன்களின் இல்லமான பாளையம் அரண்மனை கேரளாவின் கட்டடக்கலை சிறப்புகளில் ஒன்றாகும். இந்த அரண்மனை 450 ஆண்டுகளுக்கும் மேலானது. இது வரலாற்று ஆவணங்களையும் நினைவுச்சின்னங்களின் தொகுப்புகளையும் கொண்டுள்ளது.

வரலாறு

தொகு

கோட்டையில் கோவிலகத்தில் உள்ள மலைகளில் உள்ள ஒரு இந்துக் கோயில், ஒரு சிரிய கிறித்தவத் தேவாலயம், ஒரு பள்ளிவாசல், மீட்டெடுக்கப்பட்ட யூத தொழுகைக் கூடம் என ஒன்றுக்கொன்று தனித்துவமானவை. [1] தொழுகைக் கூடம் கி.பி 1614 இல் கட்டப்பட்டது. அது அமைதியான வனப்பகுதியில் உள்ளது. இந்த தொழுகைக் கூடத்தின் பின்னால் உள்ள முற்றத்தில், கி.பி 1264 தேதியிட்ட ஒரு யூதப் பெண்மணியின் உருவச்சிலை உட்பட பழைய யூத கல்லறைகளைக் காணலாம்.

கி.பி 69 இல் எருசலேத்தில் தங்களின் இரண்டாவது கோவில் அழிக்கப்பட்டு இறுதியில் பாழடைந்து போய், பின்னர் யூதர்கள் சேந்தமங்கலத்திற்கு வந்து தங்களுக்கென ஒரு காலனியை நிறுவினார். கி.பி 1341 இல் பெரும் வெள்ளத்திற்குப் பிறகு அவர்கள் கொச்சி கோட்டைக்குச் சென்றனர். சமீபத்திய நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட கேரளாவில் உள்ள அனைத்து 8 தொழுகை ஆலயங்களிலும் - சேந்தமங்கலம், பரவூர், மாளா, கொச்சி, எர்ணாகுளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளவற்றிலும் இதேபோன்ற பாரம்பரிய கட்டடக்கலை அம்சங்கள் உள்ளன:

  • ஒரு பைஞ்சுதை (கான்கிரீட்) அல்லது கல் அடித்தளத்தில் பித்தளை அல்லது வெள்ளி உலோகத்தின் மையத் தூண்
  • மேற்கு சுவரில் ஒரு பேழை
  • ஆலயத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு மேலே, விடுமுறை நாட்களில் வாசகர்கள் பயன்படுத்தும் ஒரு மாடம்.
  • மாடத்தின் பின்னால் படிக்கட்டுக்கு மேலே, வழக்கமாக கட்டிடத்திற்கு வெளியே இருந்து ஒரு பெண்கள் காட்சிக்கூடம், .

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் சிரியர்களுக்காக கட்டப்பட்ட வைபெனகோட்டா பாடசாலையின் எச்சங்களும் இங்கே உள்ளன. பாடசாலைக்கு அருகில் 1201 இல் கட்டப்பட்ட ஒரு பழைய சிரிய கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இது இந்தியாவின் முதல் அச்சகத்தின் தளமாகும்.

சேந்தமங்கலம் முந்தைய கொச்சின் மாநிலத்தின் கனையனூர் வட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பஞ்சாயத்து 1914 இல் உருவாக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு, தெற்கில் உள்ள ஆறுகளின் எல்லையில் அமைந்துள்ள இது கலாச்சார பன்முகத்தன்மையின் சந்திப்பு இடமாகும். யூதர்கள், கிறித்தவர்கள், முஸ்லிம்கள், பல தனித்துவமான இந்து சாதிகள் இங்கு இணக்கமாக வாழ்கின்றனர். கொங்கணியர்கள் (கவுட சாரஸ்வத் பிராமணர்), மூப்பன்கள் (குடும்பி) போன்ற புலம்பெயர்ந்த சமூகங்களின் இருப்பும் இங்கு உள்ளது. கைவினைக் கலைஞர்களின் பிரிவுகளில் கல்தச்சர்கள், மரத் தச்சர்கள், வார்ப்பவர்கள், கொல்லர்கள், பொற்கொல்லர்கள், நெசவாளர்கள், குயவர்கள் போன்றோர் இன்று வரை தொழில்துறைக்கும் வணிகத்துக்குமான முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறார்கள்.

யூத சமூகம் 1950கள்-1960களில் இசுரேலுக்கு குடிபெயர்ந்தது. அவர்களின் தொழுகை ஆலயம் தற்போது தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படுகிறது. மசூதிக்கு பின்னால் கைவிடப்பட்ட யூத கல்லறையும் உள்ளது, ஆலயத்திலிருந்து சுமார் 400 மீ நிலம், இது இன்னும் மீட்கப்படவில்லை.. [2]

மார் இசுலீவா தேவாலயம் 1075 இல் நிறுவப்பட்டது. தேவாலயத்தின் பழைய தொகுதியின் சிறப்பு வலுவூட்டப்பட்ட கட்டுமானம் திப்பு சுல்தான் மலபார் மீது படையெடுத்த நேரத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

பாளையம் சத்தியாக்கிரகம் கொச்சின் மாநிலத்தில் கோயில் நுழைவு பிரகடனத்தின் விளைவாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் மாதப்பிறப்புக்கு முன்னதாக நடத்தப்படும் வருடாந்திர கண்காட்சியான மட்டச்சந்தை, மக்கள் தங்கள் உள்நாட்டுத் தேவைகளான உணவுப் பொருட்கள், சுவையூட்டும் பொருள்கள், வெட்டுக்கருவிகள், மட்பாண்டங்கள், தளவாடங்கள் போன்றவற்றை அவர்களின் விவசாய விளைபொருட்களுக்கு அல்லது கையால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஈடாக (இப்போது அனைத்து பரிவர்த்தனைகளும் பணமாக இருந்தாலும்) வாங்குவதற்கு அருகிலிருந்தும் தூரத்திலிருந்தும் வருவது கடந்த கால வரலாற்றை நினைவூட்டுகிறது.

1663 முதல் 1809 வரை கொச்சியின் பிரதமர்களாக இருந்த பாளையத்து அச்சன் குடும்பத்தினர் சேந்தமங்கலத்தில் வசித்து வந்துள்ளனர்.

வழிபடும் இடங்கள்

தொகு
  • சேந்தமங்கலம் தொழுகை ஆலயம்
 
சென்னோத் சிறீ வேணுகோபாலசாமி கோயில்
 
புத்தியத்ரிகோவு சிவன் கோயில்
 
கோட்டயில் கோவிலகத்தில் தொழுகைஆலயம்
 
கோட்டயில் கோவிலகம் மசூதி
  • சிறீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி தேவஸ்தானம் கி.பி 1900 இல் சேந்நமங்கலத்தில் (முன்னர் ஜெயந்த மங்களம் என்று அழைக்கப்பட்டது) நிறுவப்பட்டது, முக்கிய தெய்வம் வேணுகோபாலகிருஷ்ண சுவாமி . பிரதான சிலை வேணுகோபாலகிருஷ்ண சுவாமியின் சிலை விக்கிரகம். இறைவனின் உற்சவ சிலை, அவரது காலடியில் கருடன், அனுமனின் சிலைகளும் உள்ளன. இந்த கோயில் வைசாக மாதத்தில் ஆறு நாள் நீடித்த ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. சிறீ வேணு கோபால கிருஷ்ணசாமி தேவஸ்தானம்
  • சிறீ கிருஷ்ண சுவாமி கோயில், கோட்டையில் கோவிலகம்
  • ஹோலி கிராஸ் சர்ச், கோட்டையில் கோவிலகம்
  • புனித செபாசுத்தியன், கோதுருத்து
  • புனித தெரசா சிறுமலர் தேவாலாயம், கூத்துக்காடு
  • சிறுமலர் தேவாலயம், கூத்துக்காடு
  • புனித செபாசுத்தியன் சாப்பல், பருவதுருத்தம்
  • சேந்தமங்கலம் ஜும்மா பள்ளிவாசல்
  • பாறையில் அய்யப்பன் கோயில், வடக்கும்புறம், இது ஒரு பழங்கால கோயில்  

புள்ளி விவரங்கள்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [3] சேந்தமங்கலத்தில் 28,133 மக்கள் தொகை இருந்தனர். ஆண்களில் 48% பேரும், பெண்களில் 52% சதவீதம் பேரும் இருந்தனர். சேந்தமங்கலத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 86% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்; ஆண்களின் கல்வியறிவு 87% மற்றும் பெண் கல்வியறிவு 85%. மக்கள் தொகையில் 10% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

கல்வி

தொகு
  • புனித செபாசுத்தியன் மேல்நிலைப் பள்ளி, கோதுருத்து
  • பாலியம் அரசு மேல்நிலைப் பள்ளி, சேந்தமங்கலம்
  • தர்மபோசனி சபா பள்ளி, வி.பி. துருத்து
  • டி.டி.சபா பள்ளி, சேந்தமங்கலம்
  • சாண்டாக்ரூஸ் எல்பி பள்ளி, கூத்துக்காடு
  • அரசு. எல்பி பள்ளி, சேந்தமங்கலம்
  • செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி, சத்தேதம்
  • செயின்ட் மேரிஸ் எல்பி பள்ளி, சேந்தமங்கலம்
  • ஓ.எல்.எம்.எஸ்., குரும்பதுருத்து
  • எச்.ஐ.ஜே.பி பள்ளி, சத்தேதம்
  • அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம்

ஆர்வமூட்டும் இடங்கள்

தொகு
  • கோட்டையில் கோவிலகம்
  • யூத சந்தை

தொழுகை ஆலயம் மீட்டெடுக்கப்பட்டு வாரத்தில் 9:30 முதல் 5:00 வரை பார்வையாளர்களுக்கு ஒரு கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. சேந்தமங்கலம் ஜெப ஆலயம்

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. The Synagogues of Kerala: Architecture
  2. "Minor Synagogues of Kerala". Minor Sights. பார்க்கப்பட்ட நாள் 9 April 2016.
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேந்தமங்கலம்_(கேரளம்)&oldid=3463442" இலிருந்து மீள்விக்கப்பட்டது