பாலியத்து அச்சன்கள்
பாலியத்து அச்சன் (ஆங்கிலம்: Paliath Achan) என்பது இந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த மேனன் நாயர்களின் "பாலியம்" குடும்பத்தின் மிகப் பழமையான ஆண் உறுப்பினருக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். இது பிராந்திய வரலாற்றில் முக்கியமாக உருவானது.
கண்ணோட்டம்
தொகுபாலியத்து அச்சன்கள் 1632 முதல் 1809 வரை கொச்சின் இராச்சியத்தின் (கேரளா) அரசன்னுக்கு பரம்பரை அமைச்சர்களாக இருந்தனர். [1] அந்த காலகட்டத்தில் மத்திய கொச்சின் பகுதியில் அதிகாரத்திலும் செல்வத்திலும் அரசனுக்கு அடுத்தபடியாக இருந்தார்கள்.
அவர்களின் உயர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கொச்சினில் "கொச்சியில் பாதி பாலியம்" என்ற கூற்று உண்டு. அதாவது கொச்சியில் பாதி பாலியம் குடும்பத்தைச் சேர்ந்தது. பாலியத்து அச்சன்களும் கணிசமான நில உரிமையாளராக இருந்துள்ளனர். மாநிலத்தின் மிகப்பெரிய அளவில் இருந்துள்ளனர். போர்த்துகீசியர்களின் வருகையை ஒட்டி கேரள வரலாற்றில் பாலியத்து அச்சன்கள் முக்கிய வீரர்களாக மாறியதாக வரலாற்று பதிவுகள் காட்டுகின்றன. பாலியத்து அச்சன்களின் சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, கொச்சி அரசன் இவர்களுக்கு வைப்பீன் தீவை வழங்கினார். அந்தக் காலத்தில், வில்லர்வட்டம் நிலமும் இவர்களிடம் வந்தது. [2] 1681 ஆம் ஆண்டில், கொச்சி மன்னன் இவர்களுக்கு சர்வாதையக்சன் என்ற பட்டத்தை வழங்கினார். (அதாவது "அனைத்து விவகாரங்களுக்கும் உச்ச தலைவர்" எனப் பொருள்). 1731 இல், பாலியத்து கோமி அச்சன் என்பவர் கொச்சி மன்னனின் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 1775 ஆம் ஆண்டில், பாலியத்து அச்சனின் நிலை டச்சுக்காரர்களால் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டது:
“ | இது இவ்வாறு செல்கிறது ... ஒரு விதியாக இராச்சியத்தின் விவகாரங்கள் பாலியத்து அச்சனால் நிர்வகிக்கப்படுகின்றன. அவர் கணிசமான நில உரிமையாளர், நிரந்தர தளபதி, கொச்சின் இராச்சியத்தின் பிரதம அமைச்சர். அவர் சென்னோட்டின் (சேந்தமங்கலம்) பரம்பரைத் தலைவராகவும், வைப்பீன் தீவின் பகுதியிலும் உள்ளார். இந்த இரண்டு இடங்களிலும் அவர் பலவிதமான அரண்மனைகளைக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் வழக்கமாக கிரங்கண்ணூருக்கு (கொடுங்கல்லூர்) அருகிலுள்ள சென்னோட்டில் வசிக்கிறார். சிறிய பழைய வில்வர்வட்டம் இராச்சியமும் அவருக்கு சொந்தமானது. பண்டைய காலங்களில் கொச்சின் அரசனிடமிருந்து அவர் இதைப் பெற்றார். அவர் அதை ஒரு நாயர் தலைவரிடமிருந்து பெற்றார். திரித்சூரின் கிழக்கில் அமைந்துள்ள முளுக்கரே (முள்ளூர்க்கரா) தோட்டம் (திரிசூர்) | ” |
இவர்கள் பிரித்தன் போன்ற காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிரான பல போர்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சமூகத்தில் நலிந்தவர்களின் நலனுக்காக ஏராளமான கிளர்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
இவர்களின் குடும்ப அரண்மனை வீடு (தரவாடு) எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது. நில சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், குடும்பம் தனக்கு சொந்தமான நிறைய நிலங்களை இழந்தது. ஒரு நபர் அல்லது குடும்பம் எவ்வளவு நிலத்தை வைத்திருக்க முடியும் என்பதற்கு இந்தச் சட்டம் உச்சவரம்பு அமைத்தது. இதன் விளைவாக, குடும்ப செல்வமும் சொத்துக்களும் 1952இல் பிரிக்கப்பட்டன. பகிர்வு நேரத்தில் குடும்பம் 213 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. பத்திரம் 1956இல் பதிவு செய்யப்பட்டது. மிகப்பெரிய கூட்டு-இந்து குடும்பமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், திருவிதாங்கூர்-கொச்சி / கேரளாவின் மிகப்பெரிய பகிர்வு பத்திரமாக இந்த பத்திரம் இருந்தது.
1999 நிலவரப்படி, 443 உறுப்பினர்கள் இருந்தனர். குடும்பம் மருமக்கதாயம் அல்லது தாய்வழி உறவு முறையைப் பின்பற்றுகிறது. குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் முதன்மையாக நம்பூதிரி பிராமணர்கள், கொச்சின் அரச குடும்ப உறுப்பினர்கள், முந்தைய திருவிதாங்கூர், மலபார் பகுதிகளைச் சேர்ந்த பிற அரச குடும்பங்களின் உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் பிற முக்கிய நாயர் குடும்ப உறுப்பினர்களுடன் திருமணம் செய்து கொண்டனர்.
பாலக்காடு அரச குடும்பத் தலைவரும் அச்சன் என்ற தலைப்பால் அறியப்படுகிறார்.
தோற்றுவாய்கள்
தொகுபாலியம் குடும்பத்தின் தோற்றம் தெளிவாக அறியப்படவில்லை. ஒரு பார்வை என்னவென்றால், பாலியம் குடும்பம் சேந்தமங்கலத்தில் உள்ள வில்லர்வட்டம் அரச குடும்பத்திலிருந்து வந்தது. இந்த குடும்பம் அதன் வம்சாவளியான இளங்குஞ்ஞப்புழா நகரத்தைச் சேர்ந்த குஞ்ஞிகாவு, கொச்சுக்குட்டி, என்ற இரண்டு சகோதரிகள் வில்லர்வட்டத்தில் திருமணம் செய்து கொண்டனர். பாளையம் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இரண்டு பரம்பரைகளில் ஒன்றாவர். மற்ற பார்வை என்னவென்றால், பாளையம் குடும்பம் கொச்சின் அரச குடும்பத்துடன் அல்லது பெரும்படப்பு சுவரூபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கடைசி சேரமான் பெருமாள் புறப்பட்டபோது, மகோதயபுரத்தின் சேர இராச்சியத்தின்) ஒரு பகுதியுடன் சௌகாட் அருகே வன்னேரிக்கு புறப்பட்டது என்று கருதப்படுகிறது. சக்திவாய்ந்த நிலப்பிரபுத்துவ தலைவரான பாலியத்து அச்சன்களும் இந்த பிரிவில் இருந்து வெளியேறினர் என்று கருதப்படுகிறது. சமீப காலம் வரை, அங்கு ஒரு "பாலியம் பறம்பு" (பாலியம் மைதானம்) காணப்படுகிறது. கோழிக்கோடு நாட்டின் படையெடுப்பு காரணமாக பாலியத்து அச்சன்கள் பெரும்படப்பு சுவரூபத்துடன் திருவஞ்சிக்குளம் அச்சன்களும் அவர்களுடன் நகர்ந்திருக்கலாம்.
தறவாடு அரண்மனை
தொகுமுக்கிய குடும்பமான தறவாடு ( நாலுகெட்டு வீடு ) சுமார் 450 ஆண்டுகள் பழமையானது. "கோவிலகம்" (அரண்மனை) பண்டைய ஆவணங்கள், மத சடங்குகள், வாள், துப்பாக்கிகள், வெளிநாட்டு பிரமுகர்களால் கொண்டுவரப்பட்ட பரிசுகள் உள்ளிட்ட ஏராளமான கலைப்பொருட்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளன. பாலியத்து அச்சனின் "கோவிலகம்" (இது டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது, டச்சு அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது) போன்ற பல கட்டிடங்கள் தர்வாட்டுக்கு அருகில் உள்ளன. இப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் 60 முதல் 300 ஆண்டுகள் வரையிலான பதிவுகள் எங்கும் காணப்படுகின்றன. இன்று மிகச் சில பாலியத்து குடும்ப உறுப்பினர்கள் திரிசூரில் உள்ளனர்.
பி. செயச்சந்திரன்
தொகுபிரபல பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் ("மெல்லிசை தம்புரான்") இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Synagogue set to showcase history". The Hindu. 1 March 2005. Archived from the original on 5 மார்ச் 2005. பார்க்கப்பட்ட நாள் 6 July 2006.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Milford, Humphrey (1941). Journal of Indian History. Kerala: Oxford University Press. p. 129.
வெளி இணைப்புகள்
தொகு- History of Cochin பரணிடப்பட்டது 2019-12-14 at the வந்தவழி இயந்திரம்