தரவாடு
தரவாடு, என்றும் உச்சரிக்கப்படுகிறது தறவாடு (ⓘ), என்பது கேரளத்தில் உள்ள உயர்குடி நாயர் குடும்பங்களின் பரம்பரை வீட்டைக் குறிக்கும் ஒரு மலையாளச் சொல்லாகும்.[1][2] இது நாயர் இந்துக்கள் மற்றும் நாயர் முஸ்லிம்களிடையே[3] பொதுவான ஒன்றாக உள்ளது. இது பொதுவாக மாநிலத்தில் நடைமுறையில் உள்ள மருமக்கதாயத்தின் கீழ் தாய்வழி கூட்டுக் குடும்பத்தினரின் பொதுவான வசிப்பிடமாக இருந்தது.[4][5] ஜெர்மன் மொழியியலாளர் ஹெர்மன் குண்டர்ட், 1872 இல் வெளியிடப்பட்ட தனது மலையாள—ஆங்கில அகராதியில், தறவாடு என்பதை," நில உரிமையாளர்கள் மற்றும் மன்னர்களின் பரம்பரை குடியிருப்பு", மேலும்,"ஒரு வீடு, முக்கியமாக பிரபுக்களின் வீடு" என்று வரையறுத்துள்ளார்.[6] இது பாரம்பரியமாக ஜென்மிமாரின் வசிப்பிடமாக இருந்தது. ஆனால் தாரவாடு என்ற சொல்லின் தற்கால பயன்பாடு கேரளத்தில் உள்ள அனைத்து சமூக வர்க்கங்களுக்கும் சமய மக்களுக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது.[7] இதன் ஒரு நீட்சியாக, இந்தச் சொல் வீட்டை மட்டுமல்லாமல், அந்த வீட்டைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டுக் குடும்பத்தையும் குறிப்பதாக உள்ளது. தரவாடின் தலைவர்கள்-பொதுவாக குடும்பத்தின் மூத்த ஆண் காரணவர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இளைய உறுப்பினர்கள் ஆனந்த்ரவான்கள் என அழைக்கப்பட்டனர்.
கட்டடக்கலை
தொகுதரவாடு என்ற பாரம்பரியத்திலுருந்து பிரிக்க முடியாததாக, வரலாற்று ரீதியாக, கேரளத்தின் தனித்துவமான நாலுகெட்டு வீட்டுப் கட்டடக்கலை பாரம்பரியம் உள்ளது. ஒரு உன்னதமான நாலுகெட்டு தரவாடு நான்கு கூடங்களுடன் கட்டப்படும், ஒவ்வொன்றும் ஒரு வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படும். மேலும் ஒரு நடுமுற்றத்தைக் கொண்டிருக்கும். செல்வம் மிக்க, மிகவும் பிரபலமான தரவாடுகள் எட்டுகெட்டு, இரண்டு நடுமுற்றங்களுடன், அல்லது பதினாறுகெட்டு, பதினாறு கூடங்கள் கொண்ட நான்கு நடுமுற்றங்கள் கொண்டிருக்கும். மேலும் அரச குடும்பங்கள் இதேபோன்ற தரவரிசை கொண்ட தரவாடுகள் போன்ற வீடுகளை பாதுகாப்பு வசதிகளுடன் கொண்டிருப்பார்கள். அரிதாக, பன்னிரண்டு கூடங்கள் கொண்டதாக பன்னிரண்டுகேட்டு கட்டப்பட்டுள்ளன. மூன்று முற்றங்களுடன்,[8] 32 கூடங்கள் கொண்ட முப்பதிரண்டுகெட்டு அமைக்கப்பட்டதற்கான பதிவு உள்ளது. இருப்பினும் அது கட்டப்பட்டு விரைவிலேயே தீயினால் அழிந்தது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ manoramanews, manoramaonline. "Christian Tharavadu". https://www.onmanorama.com/travel/kerala/2021/10/25/touring-christian-tharavadu-edakkalathur-chengalai.html.
- ↑ The new indian express, Indian Express. "A house reminisces 400 years of its history". https://www.newindianexpress.com/states/kerala/2012/Nov/12/a-house-reminisces-400-years-of-its-history-424582.html.
- ↑ Mohamed Koya, S.M, MATRILINY AND MALABAR MUSLIMS, Proceedings of the Indian History Congress, Vol. 40 (1979), pp. 419-431 (13 pages)
- ↑ Kakkat, Thulasi (18 August 2012). "Kerala's Nalukettus". தி இந்து. http://www.thehindu.com/features/magazine/keralas-nalukettus/article3784842.ece.
- ↑ Kunhikrishnan, K. (12 April 2003). "Fallen tharavads". தி இந்து. http://www.thehindu.com/lr/2003/12/07/stories/2003120700380600.htm.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Hermann Gundert (1872). A Malayalam and English Dictionary. C. Stolz. p. 434. பார்க்கப்பட்ட நாள் 15 February 2017.
- ↑ Pannikar, K.M. (1960). "A History of Kerala 1498 - 1801". Annamalai University Press.
- ↑ Nayar, Devu (2022). "House as Ritual: Stories of Gender, Space, and Caste in Colonial Kerala". Masters of Environmental Design Theses 6. https://elischolar.library.yale.edu/cgi/viewcontent.cgi?article=1005&context=envdesign.
- ↑ "Some Namboothiri Illams". www.namboothiri.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-01.