சைத்திய பூமி

சைத்திய பூமி (Chaitya Bhoomi) (மகாபரிநிர்வான நினைவிடம்) என்பது ஒரு பௌத்த சைத்தியமும், இந்திய அரசியலமைப்பை கட்டியெழுப்பியவரான டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் தகன இடமுமாகும். இது மும்பையின் தாதர் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த சைத்திய பூமி என்பது அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களுக்கான புனித யாத்திரைக்கான இடமுமாகும். ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாள் விழாவில் (மகாபரிநிர்வான தினம்) ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் வருகை தருகிறார். [1] [2] [3]

சைத்திய பூமி
சைத்திய பூமி தாது கோபுரம்
ஆள்கூறுகள்19°01′34″N 72°50′05″E / 19.026149°N 72.834599°E / 19.026149; 72.834599
இடம்தாதர், மும்பை, மகாராட்டிரம்
வகைதாது கோபுரம்
திறக்கப்பட்ட நாள்5 திசம்பர் 1971
அர்ப்பணிப்புஅம்பேத்கர்

மகாராட்டிரா முதல்வர், ஆளுநர், அமைச்சர் மற்றும் பல அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 6 ஆம் தேதி சைத்திய பூமியில் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இதை பார்வையிட்டுள்ளார். [4] சைத்திய பூமி அம்பேத்கருக்கு ஒரு நினைவுச்சின்னத்தை வழங்குகிறது. மேலும் மகாராட்டிரா அரசாங்கத்தால் ஏ-வகுப்பு சுற்றுலா மற்றும் புனித யாத்திரைத் தளமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. [5]

கட்டமைப்பு விவரங்கள்

தொகு
 
சைத்திய பூமி தாது கோபுரதினுள் புத்தரும் பாபாசாகேப் அம்பேத்கரும்

இந்த அமைப்பு சதுர வடிவத்தில் கட்டப்படுள்ளது. இது ஒரு சிறிய குவிமாடம் கொண்டு தரைத் தளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சதுர வடிவ கட்டமைப்பில் 1.5 மீட்டர் உயரத்தில் ஒரு வட்ட சுவர் உள்ளது. வட்ட பகுதியில் அம்பேத்கரின் மார்பளவு சிலையும், கௌதம புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. வட்ட சுவரில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. அவை பளிங்கு தரையையும் கொண்டுள்ளன. தவிர பிக்குகளுக்கு ஓய்வெடுக்கும் இடமும் உள்ளது. சைத்திய பூமியின் பிரதான நுழைவாயில் சாஞ்சி தாது கோபுர வாயிலின் பிரதி ஆகும். அதே நேரத்தில் அசோகரின் தூணின் பிரதியையும் கொண்டுள்ளது.

சைத்திய பூமியை 1971 திசம்பர் 5 ஆம் தேதி பி.ஆர்.அம்பேத்கரின் மருமகள் மீராபாய் யசுவந்த் அம்பேத்கர் திறந்து வைத்தார். இங்கே, அம்பேத்கரின் நினைவுச்சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு நினைவுச்சின்னம் கட்டுவதற்காக இந்து ஆலைகளின் நிலத்தை மகாராட்டிரா அரசுக்கு மாற்ற அனுமதித்தது. [6]

மகாபரிநிர்வான தினம்

தொகு
 
சைத்திய பூமி வாயிலில் அமைக்கப்பட்டுள்ள அசோகரின் தூண் பிரதி
 
இந்தியாவின் 2013 அஞ்சல் முத்திரையில் அம்பேத்கரின் உருவமும், சைத்திய பூமியும் இடம் பெற்றன

அம்பேத்கரின் நினைவு ஆண்டுவிழா (திசம்பர் 6) மகாபரிநிர்வான தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இவருக்கு மரியாதை செலுத்துவதற்காக இங்கு வருகிறார்கள். [7]

புகைப்படங்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சைத்திய_பூமி&oldid=3091899" இலிருந்து மீள்விக்கப்பட்டது