சைனாபு அன்சாரி கொலை

ஏழு வயது பெண் பாக்கித்தானில் கற்பழித்து கொன்ற வழக்கு

சைனாபு அமின் அன்சாரி (Murder of Zainab Ansari உருது: زینب امین انصاری‎எப்; c. 2010 -ஜனவரி 2018) ஏழு வயது பாக்கித்தானிய பெண், தனது சொந்த ஊரான பஞ்சாபில் உள்ள கசூரில், 4 ஜனவரி 2018 அன்று குர்ஆன் பாராயண வகுப்புகளுக்கு சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். அவளது உடல் 9 ஜனவரி 2018 அன்று லாகூர் நகருக்கு அருகிலுள்ள குப்பை அகற்றும் இடத்திற்குள் கண்டறியப்பட்டது; பிரேத பரிசோதனை அறிக்கையில், இவர் கழுத்தை நெரித்து கொல்வதற்கு முன், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது [1] அவரது கற்பழிப்பு நிகழ்த்தியவனும், கொலைகாரனுமான, 24 வயதான இம்ரான் அலி, கைது செய்யப்பட்டு ஒரு தொடர் கொலைகாரராக அடையாளம் காணப்பட்டார். குறைந்தது ஏழு முன் குமரப்பருவப் பெண்களை இவர் கொலை செய்துள்ளார்.[2]

அன்சாரியின் கொலை பாக்கித்தான் முழுவதும் பரவலான எதிர்ப்புகளையும் சீற்றத்தையும் தூண்டியது,[3][4] இறுதியில் பாக்கித்தானின் முதல் தேசிய குழந்தை பாதுகாப்புச் சட்டம், ஜைனாப் எச்சரிக்கை மசோதா (அமெரிக்காவில் உள்ள AMBER எச்சரிக்கை அமைப்பைப் போன்றது) நிறைவேற்றப்பட்டது.[5] சிறுவர் துன்புறுத்தலில் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் குறைந்தபட்சம் கட்டாயமாக ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், ஒரு குழந்தை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதில் ஏதேனும் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் மசோதா அறிவுறுத்துகிறது.[6]

நிகழ்வு

தொகு

அன்சாரியின் பெற்றோர் உம்ரா செய்வதற்காக சவுதி அரேபியாவில் இருந்தபோது, அவள் மாமாவுடன் தற்காலிகமாக வாழ்ந்தபோது இந்த சம்பவம் நடந்தது. ஜனவரி 4, 2018 அன்று, அவள் வீட்டிற்கு அருகிலுள்ள குர்ஆன் வகுப்பிற்கு செல்லும் போது காணாமல் போனார். அவரது மாமா, முகம்மது அட்னான், கசூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் புகார் செய்தார். மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி நிகழ்படக் காட்சிகளைப் பார்த்த போது வெள்ளை உடை அணிந்த நபர் ஒருவர் கசூரில் உள்ள பீரோவாலா சாலையில் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.அவரது உடல் பின்னர் 9 ஜனவரி 2018 அன்று சாபாஸ் கான் சாலையில் உள்ள குப்பை அகற்றும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.[7]

எதிர்ப்புகள்

தொகு

அன்சாரி பாலியல் வன்கலவி மற்றும் கொலைக்கு முன்னர், பஞ்சாப் மாகாணம் பல குழந்தைப் புணர்வு வழக்குகள் நடந்துள்ளது. உள்ளூர் சட்ட அமலாக்கம் செயலற்றது மற்றும்/அல்லது மறைக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.[8] அன்சாரி படுகொலையைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டங்கள் பல முக்கிய நகரங்கள் முழுவதும் நடத்தப்பட்டன பாக்கிஸ்தான், தலைநகர் இஸ்லாமாபாத், உட்பட பல இடங்களில் இது ஸல் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் போராட்டங்களிலும்,[9] வாகனங்கள் எரித்தல், சாலைகள் தடை செய்தல் போன்ற வன்முறைகளும் நடந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பல மோதல்கள் நிகழ்ந்தன;[10] காவல் நிலையத்திற்குள் நுழைந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.[11][12][13][14] கசூரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நான்கு காவல்துறையினர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.[15]

சான்றுகள்

தொகு
  1. "Pakistan Passes Law Against Child Abuse in Wake of Zainab Ansari Case". The Guardian. 12 March 2020. https://www.theguardian.com/world/2020/mar/12/pakistan-passes-law-against-child-abuse-in-wake-of-zainab-ansari-case. பார்த்த நாள்: 29 July 2020. 
  2. "Zainab's murderer caught, is a 'serial killer', confirms CM Shehbaz". Geo TV. 23 January 2018. Archived from the original on 23 January 2018. பார்க்கப்பட்ட நாள் 23 January 2018.
  3. "Zainab murder: Riots in Pakistan's Kasur after child rape and killing". பிபிசி. Archived from the original on 10 January 2018. பார்க்கப்பட்ட நாள் 10 January 2018.
  4. Polianskaya, Alina (10 January 2018). "Zainab Ansari killing: Two people died in Pakistan protests over the alleged rape and murder of eight-year-old girl". The Independent. Archived from the original on 10 January 2018. பார்க்கப்பட்ட நாள் 10 January 2018.
  5. "NA approves Zainab Alert Bill Two Years After Uproar over Kasur Killings". The Dawn. 5 March 2020. https://www.dawn.com/news/1527486/na-approves-zainab-alert-bill-two-years-after-uproar-over-kasur-killings. பார்த்த நாள்: 29 July 2020. 
  6. geo.tv
  7. "6-year-old Zainab's autopsy suggests child endured rape, captivity before murder". Dawn. Archived from the original on 11 January 2018. பார்க்கப்பட்ட நாள் 11 January 2018.
  8. "Pakistan Zainab Murder: New Law Aims to Catch Child Abusers". BBC. 12 March 2020. https://www.bbc.co.uk/news/world-asia-51852381. பார்த்த நாள்: 13 August 2020. 
  9. "The Worrying Trend of Violent Crimes Against Children in Pakistan's Kasur". The Wire. 13 January 2018. https://thewire.in/external-affairs/pakistan-kasur-crimes-against-children. பார்த்த நாள்: 13 August 2020. 
  10. "Protests in Pakistan over Inaction on Rape and Murder of Girl, Seven". The Guardian. 11 January 2018. https://www.theguardian.com/world/2018/jan/11/protests-pakistan-police-inaction-rape-murder-girl-seven. பார்த்த நாள்: 13 August 2020. 
  11. "Pakistan mob angered by rape, murder of girl attacks police". CTV. 10 January 2018. Archived from the original on 10 January 2018. பார்க்கப்பட்ட நாள் 10 January 2018.
  12. "Parents of raped and murdered girl, 7, seek justice". Al Jazeera. 10 January 2018. Archived from the original on 10 January 2018. பார்க்கப்பட்ட நாள் 10 January 2018.
  13. Erickson, Amanda (10 January 2018). "A 7-year-old Pakistani girl was raped, strangled and left in a dumpster". The Washington Post. Archived from the original on 10 January 2018. பார்க்கப்பட்ட நாள் 11 January 2018.
  14. "Kasur: Two dead in protests, Tahir ul-Qadri leads Zainab's funeral prayer". Daily Times. 10 January 2018. https://dailytimes.com.pk/178056/kasur-two-dead-protests-tahir-ul-qadri-leads-zainabs-funeral-prayer/. பார்த்த நாள்: 10 January 2018. 
  15. GovtOfPunjab (11 January 2018). "All the four accused policemen who opened fire on protestors in Kasur yesterday have been arrested and being interrogated. JIT, comprising officials from Police & intelligence agencies, are working on Zainab murder case & will locate the main accused soon IA. #JusticeForZainab" (Tweet). பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைனாபு_அன்சாரி_கொலை&oldid=3931035" இலிருந்து மீள்விக்கப்பட்டது