சைபாரிசு

மாக்னா கிரேசியாவின் முக்கியமான பண்டைய நகரம்

சைபாரிசு (Sybaris (பண்டைக் கிரேக்கம்Σύβαρις; இத்தாலியம்: Sibari) என்பது மாக்னா கிரேசியாவின் முக்கிய நகரமாக இருந்தது. இது தெற்கு இத்தாலியில் டரான்டோ வளைகுடாவில், கிராதிஸ் (கிராட்டி) மற்றும் சைபரிஸ் (காஸ்சில்) ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடையில் அமைந்தது. இது கி.மு. 720 ஆம் ஆண்டு தோன்றி கி.மு. 510ஆம் ஆண்டு அழிவுற்றது.

சைபாரிஸ்
Σύβαρις
Sibari
சைபரிசின் தியேட்டரின் எச்சங்கள்
சைபாரிசு is located in இத்தாலி
சைபாரிசு
Shown within Italy
இருப்பிடம்Sibari, Province of Cosenza, கலபிரியா, இத்தாலி
பகுதிMagna Graecia
ஆயத்தொலைகள்39°43′0″N 16°29′38″E / 39.71667°N 16.49389°E / 39.71667; 16.49389
வகைSettlement
பரப்பளவுApproximately 500 ha (1,200 ஏக்கர்கள்)
வரலாறு
கட்டுநர்அக்கீயர் மற்றும் திரோசெனிய குடியேற்றவாசிகள்
கட்டப்பட்டது720 BC
பயனற்றுப்போனது445 BC
காலம்Archaic Greece to Classical Greece
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1960s
மேலாண்மைSoprintendenza per i Beni Archeologici della Calabria
இணையத்தளம்ArcheoCalabriaVirtual (in இத்தாலிய மொழி)

இந்த நகரம் கி.மு 720 இல் அக்கீயர் மற்றும் திரொசெனியன் குடியேறிகளால் நிறுவப்பட்டது. சைபாரிஸ் அதன் வளமான நிலம் மற்றும் பரபரப்பான துறைமுகத்தின் காரணமாக பெரும் செல்வத்தை குவித்தது. மூன்று இலட்சம்பேர் இங்கு வசித்துவந்தனர். இர்களில் பெரும்பாலானவர்கள் அடிமைகளாவர். இதன் பிரஜைகள் குறைந்த எண்ணிக்கையிலானவர்களாவர். இவர்களுக்கான அனைத்து வேலைகளையும் அடிமைகளே செய்துகொடுத்தனர். இந்த நகர பிரஜைகள் பகட்டான ஆடையணிந்து உடல் உழைப்பு இல்லாமல் சுக வாழ்வு வாழ்ந்து வந்தனர். தச்சர், கொல்லர் முதலியோர் செய்யும் பணிகளால் ஓசை எழும்பி அது நகர பிரஜைகளின் அமைதியைக் கெடுக்கிறது என்பதற்காக அவர்களை நகரின் வெளியே சென்று வேலை செய்ய வைக்குமளவுக்கு பிரஜைகள் சுக வாழ்வு வாழ்ந்துவந்தனர்.[1] "சிபரைட்" மற்றும் "சைபரிட்டிக்" ஆகியவை செழுமை, ஆடம்பரம் மற்றும் வெறித்தனமான இன்பத்தைத் நாடுவது என்று பொருள் கொள்ளத்தகதாக மாறும் அளவிற்கு, இதன் குடிமக்கள் கிரேக்கர்களிடையே அவர்களின் இன்பவியல், விருந்துகள் மற்றும் மிகைத்தூய்பால் பிரபலமானார்கள்.

கி.மு. 510/509 இல் [A] இந்த நகரம் இதன் அண்டை நாடான கிரோட்டனால் அடிமைப்படுத்தப்பட்டது. மேலும் இதன் மக்கள் வெளியேற்றப்பட்டனர். சைபரிஸ் கிரோடனின் சார்புடைய கூட்டாளியாக ஆயினர். ஆனால் கிரோட்டனால் இந்த நகரம் மீண்டும் கி.மு. 476/475 இல் முற்றுகையிடப்பட்டது. கிரோடனுக்கு மற்றொரு வெற்றி கிடைத்தது. கி.மு 452/451 மற்றும் கி.மு 446/445 இல் நகரத்தை மீண்டும் ஆக்கிரமிப்பதற்கான இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்தன. மீதமுள்ள சைபரைட்டுகள் மீண்டும் கிரோடோனியேட்டுகளால் வெளியேற்றப்பட்டனர். ஏதென்ஸ் மற்றும் பெலோபொன்னீசில் உள்ள பிற நகரங்களின் புதிய குடியேறியவர்களின் உதவியுடன் சைபரைட்டுகள் கிமு 446/445 இல் தங்கள் நகரத்தை மீண்டும் ஆக்கிரமித்தனர். இந்த சகவாழ்வு நீண்ட காலம் நீடிக்கவில்லை: சைபரைட்டுகள் புதிய குடியேறிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். கிமு 445 கோடையில் கடைசியாக புதிய குடியேறிகள் வெளியேற்றப்பட்டனர். மொத்தத்தில், நகரம் மொத்தம் ஐந்து காலக்கட்டங்களில் நடந்த ஆக்கிரமிப்புகளைக் கண்டது. புதிய குடியேறிக்ள் கி.மு. 444/443 இல் துரி நகரத்தை உருவாக்கிக்கொண்டனர். இது சைபரிசின் பகுதியளவு தளத்தின் மேல் கட்டப்பட்ட ஒரு புதிய குடியிருப்பாகும். எஞ்சியிருக்கும் சைபரைட்டுகள் டிரேயிசில் சைபரிசை நிறுவினர்.

சைபரிஸ் மற்றும் துரியின் இடிபாடுகள் காலப்போக்கில் கிராட்டி ஆற்றின் வண்டலால் புதைந்ததால் அவை மறக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் 1960 களில் டொனால்ட் ப்ரீமேன் பிரவுனால் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்பட்டன. இன்று அவை சிபாரியின் தென்கிழக்கில் காணப்படுகின்றன. இது இத்தாலியின் கலாப்ரியா பகுதியில் உள்ள கோசென்சா மாகாணத்தில் உள்ள காசானோ அல்லோ அயோனியோவின் கம்யூனில் உள்ள ஒரு ஃப்ரேசியோன் ஆகும்.

குறிப்புகள்

தொகு
  • ^ This article frequently makes use of Athenian archon years which were used by Diodorus Siculus, who is the most important primary source for information on Sybaris. These years ran from July to June.
  • மேற்கோள்கள்

    தொகு
    1. வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 86–87.
    "https://ta.wikipedia.org/w/index.php?title=சைபாரிசு&oldid=3365624" இலிருந்து மீள்விக்கப்பட்டது