சைப்பிரசு சுண்டெலி
சைப்பிரசு சுண்டெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ம. சைப்பிராகசு
|
இருசொற் பெயரீடு | |
மசு சைப்பிராகசு (குச்சி மற்றும் பலர், 2006) |
சைப்பிரசு சுண்டெலி (Cypriot mouse-மசு சைப்பிராகசு) என்பது சைப்பிரசில் மட்டும் காணப்படும் எலி சிற்றினமாகும்.[2] இந்த அகணிய உயிரி துரொடோசு மலைப் பகுதியின் திராட்சைத் தோட்டங்கள் மற்றும் வயல்களை முதன்மையான வாழ்விடமாகக் கொண்டுள்ளன.
வகைப்பாட்டியல்
தொகு2004ஆம் ஆண்டில் துர்காம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் தாமஸ் குச்சி இந்த சுண்டெலியினைத் தனிச் சிற்றினமாக அங்கீகரித்தார். இதனை முறையாக 2006,12 அக்டோபர் நாளிட்ட சூடாக்சா ஆய்விதழ் வெளியிட்டது.[3][4]
சைப்பிரசு சுண்டெலி மற்ற ஐரோப்பியச் சுண்டெலிகளிடமிருந்து வேறுபடுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை பெரிய காதுகள், கண்கள் மற்றும் பற்கள் ஆகும்.[5] டி. என். ஏ. சோதனைகள் இதனைத் தனித்துவமான சிற்றினம் என உறுதிப்படுத்தியது. இதன் தாயகம் சைப்பிரசு.[6]
"மத்தியதரைக்கடல் தீவுகளின் மற்ற அனைத்து உள்ளூர் பாலூட்டிகளும் மனிதனின் வருகையைத் தொடர்ந்து இறந்துவிட்டன. இந்த அழிவில் இரண்டு வகையான மூஞ்சூறு தப்பின. சைப்பிரசு சுண்டெலி மட்டுமே இன்னும் உயிருடன் இருக்கும் ஒரே ஒரு கொறித்துண்ணியாகும். மேலும் இது வாழும் தொல்லுயிர் எச்சமாகக் கருதப்படலாம்" என்று குச்சி தெரிவிக்கின்றார்.[4] கிரேக்கத் தொன்மவியல் கருத்தின்படி சைப்பிரசு அப்ரோடிட்டின் பிறப்பிடமாக இருப்பதால், முதலில், குச்சி இதை மசு அப்ரோடைட் என்று அழைக்க விரும்பினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Amori, G. (2017). "Mus cypriacus". IUCN Red List of Threatened Species 2017: e.T136641A22406364. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T136641A22406364.en. https://www.iucnredlist.org/species/136641/22406364. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ T. Cucchi, A. Orth, J.-C. Auffray, S. Renaud, L. Fabre, J. Catalan, E. Hadjisterkotis, F. Bonhomme, J.-D. Vigne (23 June 2006). "A new endemic species of the subgenus Mus (Rodentia, Mammalia) on the Island of Cyprus". Zootaxa (Magnolia Press) 1241. https://www.researchgate.net/publication/229076579.
- ↑ "New mouse find is 'living fossil'". BBC News. October 12, 2006. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/6043648.stm.
- ↑ 4.0 4.1 "'Living fossil' mouse found on Cyprus, a rare discovery for Europe". North County Times. October 13, 2006. http://www.nctimes.com/news/science/article_3f52b0d4-74ae-50c3-b7b0-288b44a6996e.html.Thomas Wagner (October 13, 2006).
- ↑ "Durham Research Fellow discovers new species of mammal in Europe". University of Durham. http://www.dur.ac.uk/news/newsitem/?itemno=4778.
- ↑ Nancy H. Demand (2011). The Mediterranean Context of Early Greek History. John Wiley & Sons. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781444342345.