சைப்பேன் நாணல் கதிர்க்குருவி

சைப்பேன் நாணல் கதிர்க்குருவி (Saipan reed warbler)(அக்ரோசெபாலசு ஹிவே) என்பது வடக்கு மரியானா தீவுகளில் காணப்படும் மிக அருகிய இன கதிர்க்குருவி சிற்றினம் ஆகும்.

சைப்பேன் நாணல் கதிர்க்குருவி
சைப்பேன் நாணல் கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அக்ரோசெபாலசு
இனம்:
A. hiwae
இருசொற் பெயரீடு
Acrocephalus hiwae
யாமாசினா, 1942)

வகைப்பாட்டியல் தொகு

சில வகைப்பாட்டியல் அறிஞர்கள் சில சமயங்களில் அழிந்துபோன நைட்டிங்கேல் நாணல் கதிர்க்குருவியின் (ஏ. லூசினியசு) துணையினமாக இதனைக் கருதுகின்றனர்.

வாழிடம் தொகு

இது சைப்பேன் மற்றும் அலமகன் தீவுகளில் காணப்படுகிறது. 2009ஆம் ஆண்டில் சைப்பேனில் 2700 பறவைகள் இருந்ததாகவும், 2010ஆம் ஆண்டில் அலமகனில் 950 பறவைகள் இருந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இது ஈரநிலங்கள், முட்கள் மற்றும் காடுகளின் ஓரங்களில் வாழ்கிறது.

விளக்கம் தொகு

சைப்பேன் நாணல் கதிர்க்குருவி தோராயமாக 17 cm (6.7 அங்) நீளமும், சாம்பல் கலந்த ஆலிவ்-பழுப்பு நிறத்தில் வெளிர்-மஞ்சள் நிறத்தின் கீழ்ப்பகுதி காணப்படும். பெண் ஆணை விடச் சற்று சிறியது. மற்ற நாணல் கதிர்க்குருவி சிற்றினங்களுடன் ஒப்பிடும்போது இரு பாலினருக்கும் நீண்ட அலகு உள்ளது.

பாதுகாப்பு தொகு

நகர்ப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்தின் விளைவாக வாழ்விட அழிவு, ஆக்கிரமிப்பு இனங்களின் அறிமுகம் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஆகியவை சைப்பேன் நாணல் கதிர்க்குருவியின் உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தல்களில் அடங்கும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Rounds, Rachel; Radley, Paul. "Nightingale Reed-Warbler (Acrocephalus luscinia)". Web Page of Pacific Bird Conservation, Hawaii. Archived from the original on 21 September 2015. பார்க்கப்பட்ட நாள் 21 September 2015.
  2. "Saipan Reed-warbler". IUCN Red List of Threatened Species. https://www.iucnredlist.org/species/103780118/125502795. பார்த்த நாள்: 11 December 2020.