சைமா
சைமா | |
---|---|
மஞ்சள் அலகு மீன்கொத்தி , (சைமா டொரோடோரோ) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | லெசன், 1827
|
மாதிரி இனம் | |
சைமா டொரோடோரோ[1] லெசன், 1827 |
சைமா என்பது நியூ கினி மற்றும் வடகிழக்கு ஆத்திரேலியாவில் காணப்படும் அல்செடினிடே குடும்பத்தில் உள்ள மர மீன்கொத்தி பேரினமாகும்.
1827-இல் பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணரும் இயற்கை ஆர்வலருமான ரெனே லெசன் என்பவரால் இந்த பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] சைமா என்பது கிரேக்கப் புராணங்களில் காணப்படும் கடல் வாழ் இளம் உயிரியின் பெயர்.
இந்தப் பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. அவை:[3]
படம் | விலங்கியல் பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
சைமா மெகர்ஹிஞ்சா | மலை மீன்கொத்தி | நியூ கினி | |
சைமா டொரோடோரோ | மஞ்சள் அலகு மீன்கொத்தி | நியூ கினி மற்றும் ஆத்திரேலியாவின் வடக்கு கேப் யோர்க் தீபகற்பம் |
இரண்டு சிற்றினங்களின் முதிர்வடைந்த மீன்கொத்திகள் பிரகாசமான மஞ்சள் அலகினைக் கொண்டுள்ளன. மலை மீன்கொத்தி நியூ கினி மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும். நியூ கினியாவின் தாழ் நிலப் பகுதிகளிலும், வடகிழக்கு ஆத்திரேலியாவில் உள்ள கேப் யோர்க் தீபகற்பத்திலும் மஞ்சள்-அலகு மீன்கொத்தி காணப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alcedinidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-25.
- ↑ René Lesson (1827). "Nouveau gendre d'oiseau" (in French). Bulletin Universel des Sciences et de l'Industrie 11: 443. https://www.biodiversitylibrary.org/page/4828758.
- ↑ "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. 2017. பார்க்கப்பட்ட நாள் 17 May 2017.
- ↑ Fry, C. Hilary; Fry, Kathie; Harris, Alan (1992). Kingfishers, Bee-eaters, and Rollers. London: Christopher Helm. pp. 171–174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7136-8028-7.