சையது அகமது கான்
சர் சையது அகமது கான் (Urdu: سید احمد خان; அக்டோபர் 17, 1817 – மார்ச் 27, 1898) ஒரு இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி, இதழாளர், இசுலாமிய சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர். இந்தியத் தலைநகர் புது தில்லியில் பிறந்த இவர் வீட்டிலிருந்தபடியே கல்வி கற்றார். யுனானி மருத்துவமுறையான “திப்” கல்வியைக் கற்றுக் கொண்ட இவர் 1841 ல் சட்டம் பயின்று தேர்ச்சி பெற்றார்.
- 1839 ஆம் ஆண்டில் ஆக்ராவில் முன்சீப் நியமனம் பெற்று நீதித்துறைப் பணியைத் தொடங்கினார்.
- 1855 ஆம் ஆண்டில் பிஜ்னார் எனுமிடத்தில் சதர் அமீன் எனும் பதவியில் நியமிக்கப்பட்டார்.
- 1858 ஆம் ஆண்டில் மொராதாபாத் எனுமிடத்தில் “சதர்-அஸ்-சாதர்” எனும் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார்.
- 1859 ஆம் ஆண்டில் மொராதாபாத்தில் “பெர்சியன் மதர்சா” எனும் கல்விச்சாலையை நிறுவினார்.
- 1860 ஆம் ஆண்டில் வடமேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட பஞ்ச நிவாரப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டார்.
- 1864 ஆம் ஆண்டில் “டிரான்ஸ்லேசன் சொசைட்டி” எனும் அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு பின்னர் “சயிண்டிபிக் சொசைட்டி ஆஃப் அலிகார்” எனும் பெயரில் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
- 1870 ஆம் ஆண்டில் இசுலாமியர்களிடையே எழுச்சியை ஏற்படுத்த “தேஜிபுல் இலாஹி” எனும் இதழைப் பதிப்பித்து வெளியிட்டார்.
- 1875 ஆம் ஆண்டில் அலிகார் எனுமிடத்தில் எம் ஏ ஓ எனும் கல்லூரியை நிறுவினார்.
- 1878 ஆம் ஆண்டு வைஸ்ராய் சட்டப்பணிக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
- 1888 ஆம் ஆண்டில் “இந்திய சுதந்திரக் கழகம்” எனும் அமைப்பை நிறுவினார்.
- வரலாறு, அரசியல், மதம் மற்றும் சட்டம் பற்றிய கட்டுரைகளையும், புத்தகங்களையும் நிறைய எழுதியிருக்கிறார்.
சையது அகமது கான் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 17, 1817 தில்லி, முகலாயப் பேரரசு |
இறப்பு | மார்ச்சு 27, 1898 அலிகார், பிரித்தானிய் இந்தியா | (அகவை 80)
முக்கிய ஆர்வங்கள் | கல்வி, அரசியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், இரு நாடுகள் கோட்பாடு |
சிறப்புகள்
தொகு- 1842 ஆம் ஆண்டில் இவருக்கு “ஜவாத் உத் தௌலா ஆரிஃப் ஜங்” எனும் பட்டம் வழங்கப்பட்டது.
- 1864 ஆம் ஆண்டில் ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஃபெலோசிப் வழங்கப்பட்டது.
- 1866 ஆம் ஆண்டில் வஸ்ராயின் தங்கப்பதக்கம் கல்விப்பணிகளுக்காக அளிக்கப்பட்டது.
- 1869 ஆம் ஆண்டில் “டியூக் ஆஃப் ஆர்ஜி2” இவருக்கு சி.எஸ்.ஐ எனும் பட்டத்தினை அளித்தார்.
- 1888 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு “கே.சி.எஸ்” மற்றும் “நைட் ஹீட்” எனும் இரு சிறப்புப் பட்டங்களை அளித்தது.
- 1889 ஆம் ஆண்டில் எடின்பரோ பல்கலைக்கழகம் எல்.எல்.டி எனும் சிறப்புப் பட்டம் வழங்கியது.
- “கிலால்” எனும் சிறப்புப் பட்டமும் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமும் அளிக்கப்பட்டது.
மறைவு
தொகு- உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகார் நகரில் 27-03-1898 ஆம் நாளில் மரணமடைந்தார்.