சொற்பொருளியல்
பொதுவாக சொற்பொருளியல் என்பது பொருள் (meaning) பற்றிய ஆய்வாகும். சொற்பொருளியல் பெரும்பாலும் சொற்றொடரியலுக்கு எதிர்மறையானது, ஏனெனில், சொற்பொருளியல் ஏதாவதொன்று என்ன பொருள் குறிக்கின்றது என்பதுடன் சம்பந்தப்பட்டிருக்கும் அதேவேளை சொற்றொடரியல், ஏதாவதொரு கருத்தை வெளிப்படுத்துகின்றதன் (உ.ம் எழுத்து அல்லது பேச்சு) முறையான அமைப்பு / வடிவம் சம்பந்தப்பட்டது.
இச் சொல்லுக்கான மேலும் பல பொருள்கள் உண்டு:
மொழியியலில்
தொகுசொற்பொருளியல், சொற்கள் (அல்லது அதன் பகுதிகள்), சொற்றொடர்கள், வசனங்கள் மற்றும் உரைகளின் பொருள் பற்றிய ஆய்வாகும் என்று வரைவிலக்கணம் கூறப்படும் மொழியியலின் ஒரு துணைத் துறையாகும். சொற்பொருளியல், கோட்பாட்டு (theoretical) முறையிலும், செயலறிவு (empirical) முறையிலும் (உ.ம் உளவியல்சார் மொழியியல்) அணுகப்படக்கூடியது. சொற்பொருள்களைப் பிரித்து ஆராயும் முறைப்படி, சொற்பொருளின் அடிப்படைக் கூறுகளை வரையறுப்பதன் மூலம் அச் சொற்பொருள்களைப் பகுத்தாய்வு செய்யமுடியும். இதன் ஒரு ஆய்வுப் பரப்பு கூட்டுச் சொற்களின் (compound) பொருள் பற்றியது; இன்னொன்று ஒலி வேற்றுமையின்றிப் பொருள் வேறுபடுதல் (homonymy), ஒலி வேற்றுமை இருப்பினும் ஒரே பொருள் தருதல் (synonymy), எதிர்ப் பொருள் தருதல் (antonymy), ஒரு சொல் பல பொருள் தருதல் (polysemy), பொது வகைப் பொருள் தருதல் (hypernymy), துணை வகைப் பொருள் தருதல் (hyponymy), முழுமைப் பொருள் குறிக்கும் சொல்லுக்கான பகுதிப் பொருட் சொல் (meronymy), பகுதிப் பொருள் குறிக்கும் சொல்லுக்கான முழுமைப் பொருட் சொல் (holonymy), கூட்டுச் சொல் கூறுகளுக்கு இல்லாத இலக்கணப் பண்புகளை உடையதாதல் (exocentric), கூட்டுச் சொல் கூறுகளில் ஒன்றின் இலக்கணப் பண்புகளையாவது உடையதாதல் (endocentric) போன்ற வெவ்வேறு மொழியியல் வெளிப்பாடுகளுக்கிடையேயான தொடர்புகள் பற்றிய ஆய்வாகும். சூழ்பொருளியல் பெரும்பாலும் சொற்பொருளியலின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
தொகு- சொற்பொருள் இயல்பு (semantic property)
- சொற்பொருள் வகுப்பு (semantic class),
- சொற்பொருள் அம்சம் (semantic feature)
- சொற்பொருள் விருத்தி (semantic progression)