சோகினி மிஸ்ரா
சோகினி மிஸ்ரா இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இந்தி திரையுலக பின்னணிப் பாடகியாவார். ஒடிசா மாநிலம் கட்டாக்கைப் பூர்விகமாகக் கொண்டுள்ள இவர், சோனி டிவியின் யதார்த்த நிகழ்ச்சியான இந்தியாவின் ஆதர்சம் ஆறாம் பாகம் (2012) மூலமாக கண்டறியப்பட்ட திறைமைசாலியாவார்[1]. அந்த நிகழ்ச்சியில் முதலாவதாக வந்த ஆறு பேரில் இவரும் ஒருவர்.
மிஸ்ரா, கட்டக்கில் உள்ள அகில இந்திய வானொலியில் அங்கீகரிக்கப்பட்ட கலைஞர் (பி உயர் தரம் என்ற பிரிவில்), மேலும் அவர் பண்டிட் தேவேந்திர நாராயண் சதபதியின் கீழ் இந்துஸ்தானி பாரம்பரிய குரலிசையிலும் பயிற்சி பெற்றவர். எல்லாவிதமான இசைவகைகளிலும் பாடல்களையும் பாடக்கூடியவர் என்றாலும் அவருடைய பலம் பாரம்பரிய இசை தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒடியா, ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.[2] சோகினி ஒடியாவை பூர்விகமாகக் கொண்டுள்ளவர் என்பதால் அங்குள்ள கலை, திரைப்படத் துறை மற்றும் பொதுமக்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்பட்டுள்ளார். மேலும் பல ஒடியா திரைப்படங்கள் மற்றும் நவீன தனி இசைத்தொகுப்புகளுக்கு பாடல்களைப் பாடியுள்ளார்.
மிஸ்ரா, கட்டாக்கில் உள்ள ராவென்ஷா பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜியில் முதுகலை வரை படித்துள்ளார். அவரது தந்தை மற்றும் தாய் இருவரும் அகில இந்திய வானொலியால், கட்டாக்கில் அங்கீகரிக்கப்பட்ட இசைக்கலைஞர்கள். எனவே சிறுவயதிலிருந்தே இசையார்வம் மிக்கவராக வளர்த்துள்ளார். சிறந்த பின்னணிப் பாடகி பிரிவில் பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை
- பிக் எஃப்எம் 92.7 சிறந்த பாடகர் விருது,
- தரங் சினி சிறந்த பின்னணிப் பாடகர் விருது,
- கவர்னர் விருது (ராஜீவ் காந்தி மன்ற விருது), மற்றும்
- முதல்வர் விருது போன்றவையாகும்.
மிஸ்ரா, பின்னணிப் பாடகியாக மட்டுமல்லாமல் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பாடியுள்ளார்.
மோகன் மஜிதியாவால் எழுதப்பட்டு ஓம் பிரகாஷ் மொகந்தியால் இசையமைக்கப்பட்ட இந்தி பாடல்களின் மிஸ்ராவின் முதல் தனி இசைத்தொகுப்பு "லவ் ரெயின்போ" என்ற பெயரில் 2014 ம் ஆண்டில் வெளியானது.[3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/events/others/Sohini-Mishra-of-Indian-Idol-fame-performs-on-the-third-day-of-Cuttack-Mahotsav/articleshow/18071590.cms
- ↑ http://timesofindia.indiatimes.com/others/news-interviews/Singing-for-Lataji-was-amazing-says-Sohini-Mishra/articleshow/15401736.cms
- ↑ http://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/Singer-Sohini-debuts-in-Indi-pop-releases-album/articleshow/45611324.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-03-11.
- ↑ [1]