சோகி, இமாச்சலப் பிரதேசம்
சோகி (Shogi, Himachal Pradesh) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். துணை மாவட்டத் தலைமையகமான சிம்லாவிலிருந்து 15 கிமீ தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. 15 ஆவது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இக்கிராமத்தில் 685 ஆண் மக்கள் மற்றும் 571 பெண் மக்கள் தொகையுடன் 1,256 மக்கள் இருந்தனர்.[2] சோகி கிராமம் கோவில்களின் கிராமமாக அறியப்படுகிறது.[3]
சோகி Shogi | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 31°02′N 77°07′E / 31.04°N 77.12°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | [[Image:|22x20px|border |]] இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சிம்லா மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 95.21 ha (235.27 acres) |
ஏற்றம் | 1,790 m (5,873 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,256 |
• அடர்த்தி | 1,300/km2 (3,400/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 171219 [1] |
வாகனப் பதிவு | எச்பி-51 |
மக்கள் தொகை
தொகுவிவரம் | மொத்தம் | ஆண் | பெண் |
---|---|---|---|
மொத்த மக்கள் தொகை | 1,256 | 685 | 571 |
கற்றவர்கள் | 1,000 | 561 | 439 |
கல்லாதவர்கள் | 256 | 124 | 132 |
அமைவிடம்
தொகுசோகி கிராமம் கடல் மட்டத்திலிருந்து 5873 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தாரா தேவி கோயில், அனுமான் கோயில், காளி கோயில் போன்றவை இங்குள்ள சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாகும். சுற்றுலாப் பயணிகள் சிம்லா மற்றும் கல்காவிலிருந்து இமயமலை ராணி இரயிலில் ஏறி சோகியை அடையலாம். சிம்லாவிலிருந்து கிடைக்கும் வாடகை வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலமாகவும் மக்கள் சோகி கிராமத்திற்குப் பயணிக்கலாம்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shoghi Pin Code | Postal Code (Zip Code) of Shoghi, Shimla, Himachal Pradesh, India". India TV. பார்க்கப்பட்ட நாள் 8 January 2023.
- ↑ "Census of India 2011 - Himachal Pradesh - Series 03 - Part XII B - District Census Handbook, Shimla". இந்திய அரசு. Ministry of Home Affairs (India). பார்க்கப்பட்ட நாள் 8 January 2023.
- ↑ Dey, Panchali (June 10, 2021). "Exploring Shogi, the hidden beauty in the lap of Himalayas". Times of India Travel. https://timesofindia.indiatimes.com/travel/destinations/exploring-shogi-the-hidden-beauty-in-the-lap-of-himalayas/photostory/83370464.cms?picid=83370494.
- ↑ "For those looking for a relaxed weekend getaway with absolutely nothing to do but plunge into the lap of nature, Shoghi, an unfrequented paradise in Himachal is the perfect place to be". Outlook India. May 4, 2015. https://www.outlookindia.com/outlooktraveller/explore/story/47252/quick-guide-shoghi-himachal-pradesh.