சோடியம் ஒற்றைதயோ பாசுப்பேட்டு
சோடியம் ஒற்றைதயோ பாசுப்பேட்டு (Sodium monothiophosphate) என்பது Na3PO3S(H2O)x என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இதை சோடியம் மோனோதயோபாசுப்பேட்டு அல்லது சோடியம் பசுப்போரோதயோயேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கலாம். இவையனைத்தும் வெண்மையான திண்மங்கள் ஆகும். (x = 0) என்ற மதிப்பைக் கொண்ட நீரிலி வடிவம் 120-125 ° செல்சியசு வெப்பநிலையில் உருகாம்லேயே சிதைவடைகிறது. பன்னிருநீரேற்று வடிவம் பரவலாகக் காணப்படுகிறது. ஒன்பதுநீரேற்று வடிவமும் அறியப்படுகிறது. இருதயோபாசுப்பேட்டுகள் (Na3PS2O2.11H2O), முத்தயோபாசுப்பேட்டுகள் (Na3PS3O.11H2O), நான்குதையோபாசுப்பேட்டுகள் (Na3PS4.8H2O) உள்ளிட்ட சேர்மங்கள் சோடியம் ஒற்றைதயோ பாசுப்பேட்டுடன் தொடர்புடைய பிற உப்புகளாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் மோனோதயோபாசுப்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10101-88-9 நீரிலி 51674-18-1 (ஒன்பது நீரேற்று) 51674-17-0 (பன்னிருநீரேற்று) | |
EC number | 233-26-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6913045 |
| |
UNII | AN1017219I |
பண்புகள் | |
Na3PO3S | |
வாய்ப்பாட்டு எடை | 180.030 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 1.58 கி/செ.மீ3 (பன்னிருநீரேற்று), 2.40 கி/செ.மீ3 (நீரிலி) |
உருகுநிலை | 120 முதல் 125 °C (248 முதல் 257 °F; 393 முதல் 398 K) (சிதைவடையும்) |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதயோபாசுப்போனைல் குளோரைடை நீரிய சோடியம் ஐதராக்சைடைப் பயன்படுத்தி கார நீராற்பகுப்பு செய்வதன் மூலம் சோடியம் ஒற்றைதயோ பாசுப்பேட்டு தயாரிக்கப்படுகிறது:[1][2]
- PSCl3 + 6 NaOH + 9 H2O → Na3PO3S.(H2O)12 + 3 NaCl
இவ்வினையில் பன்னிருநீரேற்று கிடைக்கிறது. இதை எளிதில் நீர்நீக்கம் செய்ய இயலும். 6.5 மோல் H2SO4 அமிலத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பகுதி நீர் நீக்க வினையில் ஒன்பது நீரேற்று உருவாகிறது. நைட்ரசன் வாயுவைச் செலுத்தி மேற்கொள்ளப்படும் நீர் நீக்க வினையால் நீரிலி வடிவ உப்பு தோன்றுகிறது.[3]
சோடியம் பாசுப்போரோதயோலேட்டு நடுநிலை pH நிலையில் சிதைவடைகிறது. சிலிக்கான் உயவுப்பசை பாசுப்போரோதையோயேட்டு அயனியின் நீராற்பகுப்பு வினையில் வினையூக்கியாகச் செயற்படுகிறது. எனவே இதை கண்ணாடி இணைப்புகளில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதில்லை.[4]
நீரிலி நிலை சேர்மத்தில் P-S பிணைப்புக்கு இடையில் 211 பைக்கோமீட்டர் இடைவெளியும், இதற்குச் சமமான மூன்று P-O பிணைப்புகளுக்கு இடையில் 151 பைக்கோமீட்டர் என்ற குறைந்த இடைவெளியும் காணப்படுகின்றன. முற்றிலும் வேறுபட்ட இம்மதிப்புகள் P-S பிணைப்பை தனி பிணைப்பாக அடையாளப்படுத்துகின்றன.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Stanley K. Yasuda, Jack L. Lambert (1957). "Sodium Monothiophosphate". Inorganic Syntheses 5: 102–104. doi:10.1002/9780470132364.ch28.
- ↑ L. C. Washburn, R. L. Hayes (1977). "Importance of Excess Base in the Synthesis of Sodium Monothiophosphate: (Sodium Phosphorothioate)". Inorganic Syntheses 17: 193–4. doi:10.1002/9780470132487.ch53.
- ↑ Palazzi, Marcel (1973). "Trisodium monothiophosphate. Radiocrystallographic study". Bulletin de la Societe Chimique de France 12: 3246–8.
- ↑ Lucian C. Pop and M. Saito (2015). "Serendipitous Reactions Involving a Silicone Grease". Coordination Chemistry Reviews. doi:10.1016/j.ccr.2015.07.005.
- ↑ Pompetzki, M.; Jansen, M. (2002). "Natriummonothiophosphat(V): Kristallstruktur und Natriumionenleitfähigkeit". Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie 628: 641–646. doi:10.1002/1521-3749(200203)628:3<641::AID-ZAAC641>3.0.CO;2-8.