சோடியம் கோபால்ட்நைட்ரைட்டு
சோடியம் கோபால்ட்நைட்ரைட்டு (Sodium cobaltinitrite) Na3Co(NO2)6 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு அணைவுச் சேர்மம் ஆகும். இந்த மஞ்சள் நிற உப்பின் எதிர்மின்னயனியானது கோபால்ட் (III) அயனியை மையத்திலும் N-உடன் பிணைக்கப்பட்ட நைட்ரிடோ ஈனிகளையும் கொண்டுள்ளது. இது பொட்டாசியம் மற்றும் அம்மோனியம் அயனிகளைக் கண்டறியப் பயன்படும் பண்பறிப் பகுப்பாய்வுக் காரணியாக உள்ளது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் எக்சாநைட்ரேட்(III)
| |
இனங்காட்டிகள் | |
13600-98-1 | |
ChemSpider | 13198283 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16211641 |
| |
பண்புகள் | |
CoN6Na3O12 | |
வாய்ப்பாட்டு எடை | 403.93 g·mol−1 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | JT Baker MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தொகுப்பு முறை தயாரிப்பு மற்றும் வினைகள்
தொகுஇந்த சேர்மமானது சோடியம் நைட்ரைட்டின் முன்னிலையில் கோபால்ட்டு(II) உப்புகளின் ஆக்சிசனேற்றத்தின் மூலமாகத் தயாரிக்கப்பபடுகிறது.[2]
- 4 [Co(H2O)6](NO3)2 + O2 + 24 NaNO2 → 4 Na3[Co(NO2)6] + 8 NaNO3 + 4 NaOH + 22 H2O
பொட்டாசியத்தைக் கண்டறிவதில் பயன்பாடு
தொகுசோடியம் கோபால்ட்நைட்ரைட்டானது நீரில் கரையக்கூடியதாக இருப்பினும், இதுவே பொட்டாசியம், தாலியம் மற்றும் அம்மோனியம் அயனிகளின் அளவறி பகுப்பாய்வில் பயன்படுவதற்கான அடிப்படையை கட்டமைக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட வினைச்சூழல்களில் நீரில் கரையாத இரட்டை உப்பான, K2Na[Co(NO2)6]·H2O ஆனது வீழ்படிவாக்கப்பட்டு, எடையறியப்படுகிறது.[3] புவி வேதியியல் பகுப்பாய்வில், சோடியம் கோபால்ட்நைட்ரைட்டானது ஆல்க்கலி பெல்ட்ஸ்பார்களை பிளாஜியோகிளாசு பெல்ட்ஸ்பார்களிடமிருந்து வேறுபடுத்தி அறிய உதவுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Glemser, O. (1963). "Sodium Hexanitritocobaltate(III)". Handbook of Preparative Inorganic Chemistry (2nd) 1. New York, NY: Academic Press.
- ↑ Vogel, A. I. (1951). Quantitative Inorganic Analysis (2nd ed.). Longmans Green and Co.
- ↑ Bailey, E. H.; Stevens, R. E. (1960). "Selective staining of K-feldspar and plagioclase on rock slabs and thin sections". American Mineralogist 45: 1020–1025.