சோடியம் சிங்கேட்டு
சோடியம் சிங்கேட்டு (Sodium zincate) என்பது Na2ZnO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் டெட்ரா ஐதராக்சிடோசிங்கேட்டு(2−)
| |
இனங்காட்டிகள் | |
12179-14-5 | |
EC number | 235-342-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166652 |
| |
பண்புகள் | |
Na2ZnO2 | |
வாய்ப்பாட்டு எடை | 179.418 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எதிர்மின் அயனி துத்தநாக ஆக்சைடுகள் அல்லது ஐதராக்சைடுகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுவாக சோடியம் சிங்கேட்டுகள் என அறியப்படுகின்றன. இவற்றின் பயன்பாடுகளை முன்னிறுத்தி நோக்கும்போது சரியான மூலக்கூற்று வாய்ப்பாடு என்பது அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. அதே போலவே நீரிய சிங்கேட்டு கரைசல்களும் கலவைகளைக் கொண்டிருக்கின்றன [1].
ஐதராக்சி சிங்கேட்டுகள்
தொகுதுத்தநாகம், துத்தநாக ஐதராக்சைடு அல்லது துத்தநாக ஆக்சைடை சோடியம் ஐதராக்சைடின் நீரிய கரைசலுடன் சேர்த்து சோடியம் சிங்கேட்டு கரைசல் தயாரிக்கப்படுகிறது [2]. சிக்கலான இச்செயல் முறைக்குரிய எளிய சமன்பாடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- ZnO + H2O + 2 NaOH → Na2Zn(OH)4
- Zn + 2 H2O + 2 NaOH → Na2Zn(OH)4 + H2
இத்தகைய கரைசல்களிலிருந்து Zn(OH)42−, Zn2(OH)62−, மற்றும் Zn(OH)64−.போன்ற எதிர்மின் அயனி உப்புகளை நாம் படிகமாக்க இயலும். Na2Zn(OH)4 சேர்மத்தில் நான்முக சிங்கேட்டு அயனியும் எண்முக சோடியம் நேர்மின் அயனியும் இடம் பெற்றுள்ளன [3] Sr2Zn(OH)6 உப்பில் துத்தநாகம் எண்முக ஒருங்கினைப்புக் கோளத்தில் தோற்றமளிக்கிறது.
ஆக்சோசிங்கேட்டுகள்
தொகுNa2ZnO2,[4] Na2Zn2O3,[5] Na10Zn4O9.[6] போன்ற தொடர்புடைய ஆக்சைடுகளும் அறியப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Glenn O. Mallory, Juan B. Hajdu, (1990), Electroless Plating: Fundamentals and Applications, American Electroplaters and Surface Finishers Society, , William Andrew Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-936569-07-7
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Synthese und Kristallstruktur von Na2Zn(OH)4, R. Stahl , R. Niewa , H. Jacobs, Zeitschrift für anorganische und allgemeine Chemie, volume 625, pp. 48 - 50, எஆசு:<48::AID-ZAAC48>3.0.CO;2-L 10.1002/(SICI)1521-3749(199901)625:1<48::AID-ZAAC48>3.0.CO;2-L
- ↑ Ein neues Natriumzinkat, D. Trinschek, M. Jansen: Na2ZnO2, Z. Naturforschung 51b (1996) 711-4
- ↑ Eine neue Modifikation von Na2Zn2O3, D. Trinschek, M. Jansen: , Z. Naturforschung 51b, (1996), 917-21
- ↑ Ein neues Oxozinkat mit trigonal-planar koordiniertem Zink, D. Trinschek, M. Jansen: Na10Zn4O9, Zeitschrift für anorganische und allgemeine Chemie volume 622 (1996), pp. 245-50