சோடியம் டெட்ராபுளோரோபோரேட்டு

வேதியியல் சேர்மம்

சோடியம் டெட்ராபுளோரோபோரேட்டு (Sodium tetrafluoroborate) என்பது NaBF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை அல்லது நிறமற்று உருவாகும் இவ்வுப்பு சாய்சதுர படிகங்களாக படிகமாகிறது. சோடியம் டெட்ராபுளோரோபோரேட்டு தண்ணீரில் நன்றாகவும் (108 கி/100 மி.லி) கரிமக் கரைப்பான்களில் சிறிதளவும் கரைகிறது[1].

சோடியம் டெட்ராபுளோரோபோரேட்டு
The sodium cation
The sodium cation
The tetrafluoroborate anion (ball-and-stick model)
The tetrafluoroborate anion (ball-and-stick model)
பெயர்கள்
வேறு பெயர்கள்
சோடியம் புளோரோபோரேட்டு, NaBF4
இனங்காட்டிகள்
13755-29-8 Y
ChemSpider 24462 N
InChI
  • InChI=1S/BF4.Na/c2-1(3,4)5;/q-1;+1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4343483
SMILES
  • [B-](F)(F)(F)F.[Na+]
பண்புகள்
NaBF4
வாய்ப்பாட்டு எடை 109.794 கி/மோல்
அடர்த்தி 2.47 கி/செ.மீ3
உருகுநிலை 384 °C (723 °F; 657 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் நைட்ரோசோனியம் டெட்ராபுளோரோபோரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பற்றவைத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் சில பாய்மங்களிலும் போரான் டிரைபுளோரைடு உற்பத்தியிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது[2]

தயாரிப்பு தொகு

டெட்ரோபுளோரோபோரிக் அமிலத்தை சோடியம் கார்பனேட்டு அல்லது சோடியம் ஐதராக்சைடு சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தி டெட்ரோபுளோரோபோரேட்டு தயாரிக்கப்படுகிறது.[3]

NaOH + HBF4 → NaBF4 + H2O
Na2CO3 + 2 HBF4 → 2 NaBF4 + H2O + CO2

போரிக் அமிலம், ஐதரோபுளோரிக் அமிலம் மற்றும் சோடியம் கார்பனேட்டு ஆகியனவற்றை வினைபுரியச் செய்தும் மாற்று வழிமுறையில் இதைத் தயாரிக்கலாம்:[2]

2H3BO3 + 8HF + Na2CO3 → 2NaBF4 + 7H2O + CO2

வினைகளும் பயன்களும் தொகு

உருகுநிலை வரையிலான வெப்பநிலைக்கு டெட்ரோபுளோரோபோரேட்டை சூடாக்கும்போது இது சோடியம் புளோரைடாகவும் போரான் டிரைபுளோரைடாகவும் சிதைவடைகிறது:[4]

NaBF4 → NaF + BF3.

டெட்ரோபுளோரோபோரேட்டு எதிர்மின் அயனிக்கு இச்சேர்மமே மூலமாகும். கரிம வேதியியல் உப்புகளைத் தயாரிப்பதற்கும் அயன நீர்மங்களைத் தயாரிப்பதற்கும் இந்த எதிர்மின் அயனி பெரிதும் உதவுகிறது.

மேற்கோள்கள் தொகு