சோபா ராஜா
சோபா ராஜா (Shoba Raja) ஓர் சமூக செயற்பாட்டாளர் ஆவார்.குறிப்பாக இயலாமை மற்றும் மனநலத் துறையில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் வளர்ச்சிப் பிரச்சினைகளில் செயலாற்றியதன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார்.
சுயசரிதை
தொகுபம்பாய் பல்கலைக்கழகத்தில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார், பின்னர் மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் மருத்துவ மற்றும் மனநல சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றார். மும்பையில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கு மருத்துவ சமூக சேவகியாக "ஆஷா சதன்", ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் தத்தெடுப்பு மையம், தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா உள்ளிட்டவற்றில் பல வருடங்கள் பணிபுரிந்தார்,தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியாவில் அவர் பல நிறுவனங்களில் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்காக பல நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
1999 ஆம் ஆண்டில், ராஜா, ஆக்சன் எய்ட் இந்தியா உடன் ஒரு கொள்கை ஆய்வாளராக தனது சமூக செயல்பட்டினைத் தொடங்கினார், இதில் பரவலாக்கப்பட்ட நிர்வாகம் மற்றும் தொடக்கக் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். ராஜா பின்னர் பேசிக் நீட்சில் சேர்ந்தார், இது மனநல கோளாறுகள் தொடர்பாக கானா, உகாண்டா, கென்யா, தான்சானியா, இந்தியா, இலங்கை, நேபாளம், லாவோ பிடிஆர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் பணியாற்றும் மக்களுடன் வேலை செய்கிறது. இங்கு அவர் ஆராய்ச்சி கொள்கை ஆய்வாளராக தொடங்கி, பின்னர் சர்வதேச கொள்கை மற்றும் ஆராய்ச்சிக்கான திட்ட மேலாளராக ஆனார். அவர் தற்போது பேசிக் நீட்சுக்கான கொள்கை மற்றும் பயிற்சியின் இயக்குநராக உள்ளார், இதில் நிறுவனம் செயல்படும் நாடுகளின் அனைத்து களத் திட்டங்களின் ஒட்டுமொத்த கண்காணிப்பு, மதிப்பீடு, தாக்க மதிப்பீடு மற்றும் தர உத்தரவாதம் ஆகிய பணிகளிலும் கவனம் செலுத்தினார். 2000 முதல், இந்த அமைப்பு 78,036 மனநோய் அல்லது கால் -கை வலிப்பு நோயாளிகளைப் பராமரித்துள்ளது.[1]
ராஜா கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்துடன் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களில் பணியாற்றியுள்ளார், தற்போது லண்டன் பொருளியல் பள்ளி, கேப் டவுன் பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்கா; மெல்போர்ன் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா; குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா; ஐ.நா.வின்புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் (MDGs) மில்லினியம் கிராமத் திட்டம் ஆகிய திட்டங்களோடு பேசிக் நீட்சில் பங்களித்தார். அவர் இயலாமை மற்றும் மன ஆரோக்கியம் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார், அத்துடன் பேசிக் நீட்சின் சர்வதேச ஆராய்ச்சித் திட்டம் மற்றும் அறிவுத் திட்டத்தை நிர்வகித்து வருகிறார்.
லண்டன் பொருளியல் பள்ளியில் கௌரவ பேராசிரியராக உள்ளார்.[2] அவர் உலகளாவிய மன ஆரோக்கியத்திற்கான இயக்கத்திற்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[3] தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் உலகளாவிய மனநல குறைபாடுகளுடன் வாழும் மக்களுக்கான ஆதார அடிப்படையிலான சேவைகளை அதிகரித்தல் செயல்பாடுகளிலும், அத்துடன் உலக மனநல சங்கத்தின் (WPA) பணிக்குழுவின் ஆலோசகராகவும் இவர் செயல்படுகிறார்.[4] இந்தியாவில் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனம் , ஜனோதயா சிறுநிதி பொது அறக்கட்டளையின் விளம்பரதாரராகவும் ஆலோசகராகவும் உள்ளார். இது பெண்களுக்கு சுய உதவி குழுக்களுடன் இணைந்து கடன், வணிக பயிற்சி மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான ஆதரவை வழங்குகிறது.[5]
சான்றுகள்
தொகு- ↑ "Mental Health and Development Sustaining Impact – BasicNeeds Impact Report 2009" (PDF). BasicNeeds. Archived from the original (PDF) on 24 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2 June 2011.
- ↑ "Visitors affiliated to PSSRU". London School of Economics. பார்க்கப்பட்ட நாள் 2 June 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Advisory Group". The Movement for Global Mental Health. பார்க்கப்பட்ட நாள் 2 June 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "WPA Recommendations on best practice in working with service users and carers". World Psychiatric Association. Archived from the original on 29 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 2 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Janodaya Public Trust". Mix Market. Archived from the original on 21 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 2 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)