சோமாலி காகம்
சோமாலி காகம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கோர்வசு
|
இனம்: | கோ. எடிதே
|
இருசொற் பெயரீடு | |
கோர்வசு எடிதே லார்ட் பிலிப்சு, 1895 |
சோமாலி காகம் (Somali crow) அல்லது குள்ள காக்கை (கோர்வசு எடிதே) என்பது தோராயமாக 44-46 செ.மீ. நீளமுடைய கரியன் காக்கை, கோர்வசு கொரோன் காகமாகும். ஆனால் இதன் நீளமான அலகு மற்றும் இறகு ஓரளவு பழுப்பு நிற வார்ப்புடன் காணப்படும்.[2]
பரவல்
தொகுசோமாலி காகம் முக்கியமாகச் சோமாலியா, சீபூத்தி, ஒகாடன் மற்றும் ஆப்பிரிக்காவின் வட எல்லைப்புற மாவட்டத்தில் காணப்படுகிறது. மேலும் பெரிய பழுப்பு-கழுத்து காக்கை கோ. உருபிகோலிசிலிருந்து இதன் குரல், தோற்றம் மற்றும் நடத்தையில் உள்ள வேறுபாடுகளால் வேறுபடுத்தி அறியப்படுகிறது.
இது முன்னர் பெரிய பழுப்பு-கழுத்து காக்கையின் (சி. உரூபிகோலிசு) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இது ஒரு தனித்துவமான சிற்றினமாகக் கருதப்படுகிறது.
இந்த காகம், பழுப்பு கழுத்து காக்கையை விடக் கருப்பு வெள்ளை காக்கை கோ. ஆல்பசுடன் நெருக்கமாக இருப்பதாக சில வகைப்பாட்டியலளாரால் கருதப்படுகிறது. குறிப்பாக இதன் நடத்தையில். கருப்பு வெள்ளைக் காகத்திற்கும் சோமாலிய காகத்திற்கும் இடையே உள்ள கலப்பினப் பறவைகள், இரண்டு சிற்றினங்களின் நெருங்கிய உறவை வலுப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
இனப்பெருக்கம்
தொகுகூடு என்பது காக்கை போன்ற பருமனான கட்டமைப்பாகும். இது ஒரு தனி மரத்திலோ அல்லது தந்தி கம்பத்திலோ அமைக்கப்பட்டுள்ளது. இது கடலோரப் பகுதிகளில் அல்லது மரங்கள் கிடைக்காத பகுதிகளில் காணப்படும் பாறைகளில் கூடு கட்டும். ஒரு முறை 3-5 முட்டைகள் ஏப்ரல் மற்றும் மே மாத தொடக்கத்தில் இடுகின்றது.
இதன் குரல் ஐரோவாசியாவின் கோர்வசு புருகிலெகசு என்ற காக்கையினைப் போல "கவ்" என்று ஒலிக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Corvus edithae". IUCN Red List of Threatened Species 2016: e.T22732286A95046030. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22732286A95046030.en. https://www.iucnredlist.org/species/22732286/95046030. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Somali Crow - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-17.