சோம்நாத் லகிரி
சோம்நாத் லகிரி (Somnath Lahiri; 1 செப்டம்பர் 1909-19 அக்டோபர் 1984)[1] ஒரு இந்திய அரசியல்வாதியும், எழுத்தாளரும் மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவரும் ஆவார். இவர் வங்காளத்திலிருந்து இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக இருந்தார். பின்னர் 1957 முதல் 1977 வரை மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1967 முதல் 1970 வரை அமைச்சராகவும் பணியாற்றினார்.
சோம்நாத் லகிரி | |
---|---|
সোমনাথ লাহিড়ী | |
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர் | |
பதவியில் 9 டிசம்பர் 1946 – 24 ஜனவரி 1950 | |
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1967–1977 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | ஜதின் சக்ரவர்த்தி |
தொகுதி | தாக்குரியா |
பதவியில் 1957–1967 | |
முன்னையவர் | சத்யேந்திர குமார் பாசு |
பின்னவர் | மணி சன்யால் |
தொகுதி | அலிப்பூர் |
தகவல் அமைச்சகம், மேற்கு வங்காள அரசு | |
பதவியில் 1967-1968 | |
மேற்கு வங்காள அரசின் உள்ளாட்சி, வளர்ச்சி மற்றும் திட்டமிடல் அமைச்சர் | |
பதவியில் 1969-1970 | |
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் | |
பதவியில் 1935 | |
முன்னையவர் | எஸ். எஸ். மிராஜ்கர் |
பின்னவர் | பூரன் சந்த் ஜோஷி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 செப்டம்பர் 1909 |
இறப்பு | 19 அக்டோபர் 1984 | (அகவை 75)
குடியுரிமை | இந்தியா |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
வேலை | அரசியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் |
1930 ஆம் ஆண்டில் வங்காளப் புரட்சியாளர் பூபேந்திரநாத் தத்தாவின் வழிகாட்டுதலின் கீழ் லகிரி மார்க்சியத்தில் ஈர்க்கப்பட்டார். ஆரம்பத்தில், இரயில்வே தொழிலாளர் சங்கத்தில் பணிபுரிந்தார். மேலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கொல்கத்தா குழுவைக் கட்டியெழுப்புவதில் முனைவர் ரோனன் சென் மற்றும் அப்துல் கலீம் ஆகியோருடன் முக்கிய பங்கு வகித்தார்.[2]
ஆரம்பகால அரசியல் வாழ்க்கை
தொகுசோம்நாத் லகிரி 1931இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். கொல்கத்தா இரயில் மற்றும் டிராம் தொழிலாளர்கள் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். 1933 ஆம் ஆண்டில், ஜம்சேத்பூரில் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் முதல் தொழிலாளர் சங்கத்தை ஏற்பாடு செய்தார்.
எஸ். எஸ். மிராஜ்கர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1935இல் இவர் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், சில மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக பி. சி. ஜோஷி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.[3]
1938 ஆம் ஆண்டு கட்சியின் தீர்மானத்தின்படி, இவர் முசாபர் அகமது மற்றும் பங்கிம் முகர்ஜி ஆகியோருடன் இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டில் கொல்கத்தா மாநகராட்சியின் வரலாற்று சிறப்புமிக்க துப்புரவாளர்கள் வேலைநிறுத்தத்திற்கும் இவர் தலைமை தாங்கினார்.
சோம்நாத் வங்காளத்திற்கு தனது தளத்தை மாற்றி பணியாற்றத் தொடங்கினார். 1944 ஆம் ஆண்டில் தொழிலாளர் தொகுதியிலிருந்து கொல்கத்தா மாநகராட்சிக்கு கட்சியின் மாமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
படைப்புகள்
தொகுசோம்நாத் லகிரி நன்கு அறியப்பட்ட அரசியல் அறிஞரும் எழுத்தாளரும் ஆவார். 1931 ஆம் ஆண்டில் இவர் தி ஸ்டேட் அண்ட் ரெவல்யூஷன் என்ற புத்தகத்தை வங்காள மொழியில் மொழிபெயர்த்தார். சம்யோபாத் (சோசலிசம்) இவரது மற்றொரு புத்தகம் வெளியானது. இவர் இடதுசாரி அரசியல் நாளேடான சுவாதிநாட்டாவின் ஆசிரியராகவும் இருந்தார். ஞானசக்தி, ஆகே சோலோ, கலாநதர் களியூஜெர் கோல்போ போன்ற இதழ்களிலும் பல கட்டுரைகளை எழுதினார். சோம்நாத் லகிரியின் சிறுகதைத் தொகுப்பு முதன்முதலில் 1967 இல் வெளியிடப்பட்டது.
தொழிலாள வர்க்கத்திற்காக அபிஜான் மற்றும் ஜாங்கி மஸ்தூர் என்ற முதல் வங்காள மற்றும் இந்திப் பத்திரிகைகளை இவர் வெளியிட்டார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Social Science Textbook for Class XI - Part III. 2006. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788189611194.
- ↑ "Remembering Somnath Lahiri on His Birth Centenary". mainstreamweekly.net. October 5, 2009. பார்க்கப்பட்ட நாள் September 2, 2017.
- ↑ https://www.mainstreamweekly.net/article1675.html
- ↑ 4.0 4.1 http://www.frontierweekly.com/archive/vol-number/vol/vol-42-2009-10/vol-42-10-13%20Sep%2020-Oct%2017%202009/look-back-42-10-13.pdf