பங்கிம் முகர்ஜி

இந்திய அரசியல்வாதி

பங்கிம் முகர்ஜி (Bankim Mukherjee; 1896-1961) வங்காளப் பொதுவுடைமை அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். மேலும், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளை ஏற்பாடு செய்தார். இவரது மனைவி சாந்தா பாலேராவ் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் உதவிச் செயலாளராக இருந்தார்.[1]

பங்கிம் முகர்ஜி
বঙ্কিম মুখোপাধ্যায়
சட்டப் பேரவை உறுப்பினர், மாநிலச் சட்டப் பேரவை
பதவியில்
1952–1957; 1957–1961
முன்னையவர்தொகுதி உருவாக்கம்
பின்னவர்அரோலால் அல்தார்
தொகுதிபட்ஜ் பட்ஜ்
வங்காள சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1936
தொகுதிஅசான்சோல் சட்டப்பேரவைத் தொகுதி
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்
பதவியில்
1943
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசுமார் 1896
பேலூர், ஹௌரா
இறப்பு15 நவம்பர் 1961(1961-11-15) (அகவை 64)
குடியுரிமைஇந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்சாந்தா பாலேராவ்

அரசியல் வாழ்க்கை

தொகு

முகர்ஜி 1920களில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். வங்காளத்தில் நடந்த சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் சணல் ஆலை தொழிலாளர் சங்கப் போராட்டங்களில் பங்கேற்றார். 1921இல் முகர்ஜி தனது நண்பர் ராதாராமன் மித்ராவுடன் இட்டாவாவுக்குச் சென்று ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். அங்கு இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு. மோதிலால் நேரு உத்தரவைப் பின்பற்றி இவர் வங்காளத்திற்குத் திரும்பினார். மேலும் சுயாட்சிக் கட்சியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.[2]

 
கொல்கத்தா சிறை வாசலில் முசாபர் அகமது, பங்கிம் முகர்ஜி, பூரன் சந்த் ஜோஷி, சோம்நாத் லகிரி ஆகியோர், 1937

பொதுவுடைமை இயக்கம்

தொகு

பூபேந்திரநாத் தத்தாவைச் சந்தித்த பிறகு இவர் பொதுவுடைமை இயக்கத்தில் ஈர்க்கப்பட்டார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபட்டார். அப்துல் மோமின் மற்றும் அப்துர் ரெசாக் கான் ஆகியோருடன் இணைந்து தொழிலாளர் வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்தார். 1936இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினரானார். 1937இல் வங்காள சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943இல் நடைபெற்ற கட்சியின் முதல் அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அதன் துணைத் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[3]

பங்கிம் ஜோஷி 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் பட்ஜ் பட்ஜ் தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]

இறப்பு

தொகு

ஜோஷி தனது 64வது வயதில் 1961 நவம்பர் 15 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. India, Communist Party of (1975). Immortal Heroes: Lives of Communist Leaders (in ஆங்கிலம்). Communist Party of India.
  2. Vol - I, Subodh C Sengupta & Anjali Basu (2002). Sansad Bangali Charitavidhan (Bengali). Kolkata: Sahitya Sansad. p. 326.
  3. Windmiller, Marshall (2011). "Communism in India".
  4. "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  5. "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கிம்_முகர்ஜி&oldid=4064329" இலிருந்து மீள்விக்கப்பட்டது