சோம்பேறித் தூண்டில் மீன்

ஒரு மீன் இன வரிசை

கடல்வாழ் உயிரிகளில் தூண்டில் மீன்களில் ஒரு சிறப்பு தன்மை உண்டு. இவை ஆங்கிலத்தில் Angler Fishes எனப்படும். இதில் ஆண் மீன்கள், பெண் மீன்களை விட சிறியது. பெண் மீன்கள் தலையில் நீண்ட முன்புறத்தைப் பெற்றுள்ளன. ஆண் மீன்களிடம் இவை காணப்படுவதில்லை. ஆண் மீன்கள் மாபெரும் சோம்பேறிகள். இவை தமது தேவைகளுக்கு பெண்மீன்களையே நம்பி வாழ்கின்றன. துணை ஏதும் கிடைக்கவில்லையெனில், உணவு உண்ணாமலே உயிர் நீக்கும்.பெண் துணை கிடைக்கும் போது தனது பற்களை அதன் உடலில் பதிய வைத்து கொண்டு ஒட்டி வாழ்கிறது. பிறகு சிறிது சிறிதாக ஆண் மீனின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண் உடலின் தசையோடு ஆணின் தசை இணைந்து விடுகின்றது. ஆணின் நரம்பு மண்டல உறுப்புகள், உணவு மண்டல உறுப்பகள் அழிந்து மறைகின்றன. இனப்பெருக்க உறுப்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஒட்டுண்ணியாக பெண்ணோடு சேர்ந்து வாழ்கின்றது. சுவாச்சித்திற்கான ஆக்ஸிஜன் பெண்ணிடமிருந்தேப் பெற்றுக் கொள்கிறது. இனப்பெருக்கமும் நடைபெறுகிறது. தனது முழுத் தேவைகளையும் பெண்களிடமிருந்தேப் பெற்றுக்கொள்கிறது. உணவு உண்பதில் ஆண் தூண்டில் மீன்களைப் போல சோம்பேறி வேறு ஏதும் எதுவுமில்லை.[1][2]

  1. உயிரியலில் சில உண்மைகள்;இராம.இலக்குமிநாராயணன்,சேகர் பதிப்பகம்
  2. https://commons.wikimedia.org/wiki/File:Haplophryne_mollis_(female,_with_atrophied_male_attached).gif
ஆண் தூண்டில் மீன்
பெண் மீனுடன் இணைந்த ஆண் மீன்