சோம் தத்

சோம் தத் (सोम दत्त, Som Dutt, பிறப்பு: பெப்ரவரி 17, 1977) ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1][2] தில்லி சதர் பசார் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இவர் 2013 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றார்[3][4].

முதன்முதலாக 2013 ஆம் ஆண்டும் பின்னர் இரண்டாவது முறையாக 2015 ஆம் ஆண்டும் தில்லி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு தில்லி சட்டமன்றத் தேர்தலின்போது கலகம் உண்டாக்குதல், தனிநபர் ஒருவரைத் தவறான முறையில் தடுத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக விசாரிக்கப்படவுள்ளார்.[5]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம்_தத்&oldid=3213376" இருந்து மீள்விக்கப்பட்டது