தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015


2015 தில்லி சட்டமன்றத் தேர்தல் (Delhi Legislative Assembly election, 2015) 6-ஆவது தில்லி சட்டமன்றத்துக்கான 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2015 பெப்ரவரி 7 அன்று நடைபெற்றது. 2015 பெப்ரவரி 10 இல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.[1]

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015

← 2013 7 பெப்ரவரி 2015 (2015-02-07) 2020 →

தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தல்
அனைத்து 70 தொகுதிகளுக்கும்
பெரும்பான்மைக்கு 36 தொகுதிகள் தேவை

அதிகபட்சமாக 36 தொகுதிகள் தேவைப்படுகிறது
Opinion polls
வாக்களித்தோர்67.08%
  First party Second party Third party
 
தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கிரண் பேடி அசய் மக்கான்
கட்சி ஆஆக பா.ஜ.க காங்கிரசு
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
புது தில்லி கிருஷ்ணா நகர்
(தோல்வி)
சதர் பசார்
(தோல்வி)
முந்தைய
தேர்தல்
28 தொகுதிகள், 29.5% 32 தொகுதிகள் (BJP + SAD)
31 தொகுதிகள் (BJP), 33.1%
08 தொகுதிகள், 24.6%
வென்ற
தொகுதிகள்
67 03 0
மாற்றம் Increase 39 29 8
விழுக்காடு 54.3% 32.3% 9.7%
மாற்றம் Increase 24.8% 0.8% 14.9%

2015ஆம் ஆண்டு முடிவுகளின் அடிப்படையில் தில்லி சட்டமன்றத்தின் வரைபடம்

முந்தைய ஆட்சி - குடியரசுத் தலைவர்

நஜீப் ஜங் (துணை நிலை ஆளுநர்)

முதல்வர்

அரவிந்த் கெஜ்ரிவால்
ஆஆக

வேட்பாளர்கள்

தொகு

ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது.[2] ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் புது தில்லி தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரசு முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கும்,[3] பின் இரண்டாம் கட்டமாக 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது[4] பாசக 62 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து, அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகக் கிரண் பேடியை அறிவித்தது[5]. அவர் கிருஷ்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.[6] கிருஷ்ணா நகர் தொகுதி 2013ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாசக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அர்ஷ வர்தன் வென்ற தொகுதியாகும். இத்தேர்தலில் காங்கிரசு கட்சியை வழிநடத்துபவராக அசய் மக்கானைக் காங்கிரசு தேர்ந்தெடுத்தது.[7] அசய் மக்கான் சதர் பசார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.[8] பாசக முன்னர் வேட்பாளர்களை அறிவித்த இடங்கள் போக மீதி உள்ள எட்டு இடங்களில் நான்கு இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.[9] பாசகவின் தோழமைக் கட்சியான அகாலி தளம் மீதி உள்ள நான்கு இடங்களுக்கு போட்டியிட்டது.[10] ராஜவுரி கார்டன் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அகாலி தளம் தனது சொந்த சின்னத்திலும் மற்ற மூன்று தொகுதிகளில் (ஹரி நகர், கால்காஜி, ஷாதரா) பாசக சின்னத்திலும் போட்டியிட்டது. தில்லி காங்கிரசு தலைவர் அர்விந்தர் சிங் லௌலியின் பெயர் காங்கிரசு வெளியிட்ட முதல் பட்டியலில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடவில்லை[11]

 
தில்லியின் 70 சட்டமன்றங்களை காட்டும் படம்

கட்சித் தாவல்

தொகு

காங்கிரசு கட்சியின் முன்னாள் தேவ்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான அர்விந்தர் சிங் லௌலி பாசகவில் இணைந்தார். இவரின் தந்தை முன்னாள் நடுவண் வேளாண், உள்துறை அமைச்சர் பூட்டா சிங்கிற்கு தொகுதி மறுக்கப்பட்டதாலும் இம்முறை இவருக்கும் தொகுதி மறுக்கப்பட்டது என்பதாலும் இவர் கட்சி மாறியதாக அறிவித்தார்.[12][13] இந்நாள் காந்திநகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தில்லி காங்கிரசு கட்சித் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லியுடன் இவரை குழப்பிக்கொள்ள வேண்டாம். ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இந்நாளைய லட்சுமி நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வினோத் குமார் பென்னி பாசகவில் சேர்ந்தார்.[14][15] காங்கிரசு அரசில் நடுவண் அமைச்சராக இருந்த கிருட்டிண திரத் பாசகவில் சேர்ந்தார்.[16]

நேர அட்டவணை

தொகு
வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் சனவரி 21, 2015
வாக்களித்தல் பெப்ரவரி 7, 2015
வாக்கெண்ணல் பெப்ரவரி 10, 2015

கருத்துக் கணிப்புக்கள்

தொகு

ஆசனங்களில் எண்ணிக்கை (70)

கணக்கெடுப்பு திகதி சான்று(கள்)
ஆஆக பாசக காங் ஏனையோர்
ABP News–Nielsen 10 நவம்பர் 2014 18 46 5 1 [17]
NewsX–CVoter 12 நவம்பர் 2014 26 37 6 2 [18][19]
ABP News–Nielsen 12 திசம்பர் 2014 17 45 7 1 [20]
India Today–CICERO Wave 1 18 திசம்பர் 2014 25–31 34–40 3–5 0–2 [21]
Economic Times–TNS 22 திசம்பர் 2014 22–25 43–47 0–3 N/A [22]
TV24 News India 25 திசம்பர் 2014 39 23 5 3 [23]
India Today–CICERO Wave 2 12 சனவரி 2015 25–31 34–40 3–5 0–2 [24]
India TV-CVoter 12 சனவரி 2015 29 35 5 1 [25]
News Nation 19 சனவரி 2015 33 31 5 1 [26]

வாக்குப் பகிர்வு

கணக்கெடுப்பு திகதி சான்று(கள்)
ஆஆக பாசக காங் ஏனையோர்
ABP News–Nielsen 10 November 2014 27% 38% 22% 14% [27]
NewsX–CVoter 12 நவம்பர் 2014 39% 44% 11% 6% [18]
[19]
ABP News–Nielsen 12 திசம்பர் 2014 27% 38% 24% 11% [28]
India Today–CICERO Wave 1 18 திசம்பர் 2014 36% 39% 16% 9% [21]
The Economic Times–TNS 22 திசம்பர் 2014 40% 46% N/A N/A [22]
TotalTV News 23 திசம்பர் 2014 48% 40% 8% 4% [29]
India Today–CICERO Wave 2 12 சனவரி 2015 36% 40% 16% 8% [24]
India TV-CVoter 12 சனவரி 2015 40% 42% 11% 7% [25]
News Nation 19 சனவரி 2015 39% 35% 15% 5% [26]
ABP News–Nielsen 25 சனவரி 2015 50 41 9 0 [30]
ABP News–Nielsen பிப்ரவரி 2 (சனவரியில்
எடுக்கப்பட்டது
தேதி தெரியவில்லை)
35 29 06 0 [31]

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு

தொகு

2015, பிப்பரவரி 7 அன்று நடந்த இத்தேர்தலில் 67.12% மக்கள் வாக்களித்தார்கள்.[32]

நிறுவனம் ஆம் ஆத்மி கட்சி பாசக காங்கிரசு மற்றவை
ABP-Nielsen 43 26 1 0
India TV’s C-Voter 35-43 25-33 0-2 0
News Nation 41-45 23-27 1-3 0
News 24 Chanakya 48 22 0 0
India Today-Cicero 38-46 19-27 3-5 0

[33]

முடிவு

தொகு

2015 தில்லி சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள்:[34]

[உரை] – [தொகு]
கட்சி கொடி போட்டியிட்ட
தொகுதிகள்
வென்றவை மாற்றம் தொகுதிகளின்
 %
வாக்குகள் வாக்கு % வாக்கு % இல்
மாற்றம்
ஆம் ஆத்மி கட்சி   70 67   39 95.7% 48,79,127 54.3%   24.81%
பாரதிய ஜனதா கட்சி 69 3 28 4.28% 28,91,510 32.2% 0.8%
அகாலி தளம்   1 0 1 0% 44,880 0.5% 0.5%
இந்திய தேசிய காங்கிரசு 70 0 8 0% 8,67,027 9.7% 14.85%
பகுஜன் சமாஜ் கட்சி   70 0 - 0% 1,17,124 1.3% -
இந்திய தேசிய லோக தளம்   2 0 - 0% 54,464 0.6% -
சுயேச்சைகள் - 0 1 0% 47,623 0.5% -
நோட்டா   NA NA NA NA 35,924 0.4% NA
மொத்தம் 70 வாக்காளர்கள் - வாக்குவீதம் 67.08 %


 

கட்சிகள் பெற்ற வாக்கு விழுக்காடு.

  ஆஆக (53.4%)
  பாசக (32.2%)
  பசக (1.3%)
  கட்சி சார்பற்றவர்கள் (0.5%)
  யாருக்கும் வாக்கில்லை (0.4%)
  ஏனைய (1.4%)

அரவிந்த் கெஜ்ரிவால் 31,583 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார். கிரண் பேடி 2277 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றார் , அசய் மக்கான் தன் தொகுதியில் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். குடியரசு தலைவரின் மகள் சர்மிசுதா முகர்ச்சி கிரேட்டர் கைலாசு தொகுதியில் 6,102 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். நசஃப்கட் தொகுதியில் லோக் தளம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பகுசன் சமாச் கட்சியின் வாக்குகள் 2013 தேர்தலில் 5.44 % ஆக இருந்தது இத்தேர்தலில் 1.3% ஆக குறைந்துவிட்டது. இக்கட்சி தில்லியின் 70 தொகுதிகளிலும் போட்டியிட்டது.[35] அசய் மக்கான் உட்பட காங்கிரசின் 62 வேட்பாளர்கள் பிணை தொகையை இழந்தனர். 15% வாக்குகள் பெற்றால் மட்டுமே பிணையை திரும்ப பெறமுடியும்.[36] 2015 பிப்பரவரி 13ஆம் தேதி தில்லியின் எட்டாவது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்.[37] இவர் எந்த துறையையும் தனக்கு எடுத்துக்கொள்ளவில்லை.[38][39] பட்பட்கஞ்சு தொகுதியில் வென்ற மனிசு சிசோடியா துணை முதல்வராகவும் நிதி, வருவாய், சேவை, திட்டம், மின்சாரம், கல்வி, தகவல் தொழிற்னுட்பம், நிருவாக சீர்திருத்தம், நகர்புற வளர்ச்சி, லஞ்ச ஒழிப்பு, நிலம் & கட்டங்கள் துறைகளையும் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்காத துறைகளையும் கவனிப்பார். பாபர்பூர் தொகுதியில் வென்ற கோபால் ராய் அவர்கள் வளர்ச்சி, தொழிலாளர் நலன், போக்குவரத்து, பொது நிருவாகம் போன்ற துறைகளை கவனிப்பார். சகூர் பசுதி தொகுதியில் வென்ற சத்யேந்தர் செயின் மின்சாரம், நலம், தொழில், குருத்துவாரா மேலாண்மை, பாசனம் & வெள்ளம், பொதுப்பணித் துறை போன்ற துறைகளை கவனிப்பார். திரிநகர் தொகுதியில் வென்ற சிதேந்தர் சிங் உள்துறை, சட்டம், நீதி, சுற்றுலா, கலை & பண்பாடு போன்ற துறைகளை கவனிப்பார். மட்டியா மகல் தொகுதியில் வென்ற ஆசிம் அகமது கான் உணவு & பகிர்தல், வனம், தேர்தல், சுற்றுச்சூழல் போன்ற துறைகளை கவனிப்பார். சுல்தான்பூர் மாச்ரா தொகுதியில் வென்ற சந்தீப் குமார் நலம், பெண்கள் & குழந்தைகள், மொழி, தாழ்த்ப்பட்டோர் & பழங்குடியினர் போன்ற துறைகளை கவனிப்பார்.[39]

மேற்கோள்கள்

தொகு
  1. "EC cracks whip as Delhi goes to polls". தி இந்து. 13 சனவரி 2015. http://www.thehindu.com/news/national/delhi-elections-on-february-7/article6781169.ece. பார்த்த நாள்: 13 சனவரி 2015. 
  2. http://www.dnaindia.com/delhi/report-delhi-assembly-elections-aam-aadmi-party-announces-candidates-for-all-70-seats-2049618
  3. http://www.thehindu.com/news/national/congress-declares-first-list-of-candidates-for-delhi-assembly-polls/article6745292.ece
  4. "Delhi Assembly elections: Congress releases second list of 25 candidates". m.ibnlive. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2015.
  5. "Kiran Bedi named BJPs' Delhi CM candidate". rediff. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2015.
  6. "BJP declares list of 62 candidates for Delhi assembly polls". rediff. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2015.
  7. "Ajay Maken to Be Congress's Face in Delhi Assembly Polls". NDTV. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2015.
  8. "Delhi Assembly elections: Congress's Ajay Maken to contest from Sadar Bazar". indiatoday. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2015.
  9. "Delhi Assembly Poll: BJP Declares Second List of Candidates". NDTV. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2015.
  10. [www.ndtv.com/article/assembly-polls/delhi-assembly-elections-bjp-ally-sad-announces-candidates-in-4-seats-651518?curl=1421790907 "Delhi Assembly Elections: BJP Ally SAD Announces Candidates in 4 Seats"]. NDTV. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2015. {{cite web}}: Check |url= value (help)
  11. "Delhi unit chief Arvinder Singh Lovely will not contest Delhi Assembly elections: Congress". IndianExpress. பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2015.
  12. "Delhi Elections: Arvinder Singh Lovely joins BJP after Congress denies ticket to father Buta Singh". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2015.
  13. "Former Congress MLA joins BJP". business-standard. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2015.
  14. "Expelled Aam Aadmi Party MLA Binny follows Bedi, Ilmi into BJP". hindustantimes. Archived from the original on 2015-01-20. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2015.
  15. [www.ndtv.com/article/assembly-polls/former-aap-lawmaker-vinod-kumar-binny-joins-bjp-650449 "Former AAP Lawmaker Vinod Kumar Binny Joins BJP"]. NDTV. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2015. {{cite web}}: Check |url= value (help)
  16. "Congress Stunned as Former Minister Krishna Tirath Joins BJP". NDTV. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2015.
  17. "Majority for BJP in Delhi, but Kejriwal top pick for CM: Survey". Hindustan Times. 11 November 2014. Archived from the original on 20 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  18. 18.0 18.1 "Opinion poll predicts BJP may not get majority in Jharkhand, J&K". பிசினஸ் ஸ்டாண்டர்ட் (Business Standard Ltd). 12 November 2014. http://www.business-standard.com/article/politics/opinion-poll-predicts-bjp-unlikely-to-reach-majority-mark-in-jharkhand-or-j-k-114111101174_1.html. பார்த்த நாள்: 12 December 2014. 
  19. 19.0 19.1 "#DecisionDelhi – Who will win the Delhi polls?". NewsX. 12 November 2014. Archived from the original on 11 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  20. "BJP to get majority with 45 seats, Kejriwal most popular CM candidate in Delhi: ABP News- Nielsen opinion poll predicts". ABP News-Nielsen. 12 December 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
  21. 21.0 21.1 "India Today-CICERO poll: BJP may form govt in Delhi, but Kejriwal still a favourite for CM". இந்தியா டுடே (India Today). 18 December 2014. http://indiatoday.intoday.in/story/bjp-modi-arvind-kejriwal-delhi-assembly-polls-india-today-cicero-poll/1/407623.html. பார்த்த நாள்: 18 December 2014. 
  22. 22.0 22.1 "Delhi polls: Voters prefer BJP but want Arvind Kejriwal in power, says ET-TNS poll". தி எகனாமிக் டைம்ஸ் (The Times Group). 22 December 2014. http://articles.economictimes.indiatimes.com/2014-12-22/news/57316720_1_delhi-polls-arvind-kejriwal-bjp. பார்த்த நாள்: 7 January 2015. 
  23. https://twitter.com/TV24India/status/548227663190429697
  24. 24.0 24.1 "Delhi elections 2015: BJP projected to win 34-40 seats, AAP 25-31 seats, says India Today-Cicero opinion poll". India Today. 12 January 2015. http://indiatoday.intoday.in/story/bjp-win-india-today-cicero-poll-delhi-assembly-seats-poll-tracker-2015-aap-arvind-kejriwal-sheila-dikshit/1/412923.htmll. பார்த்த நாள்: 13 January 2015. 
  25. 25.0 25.1 "Delhi elections 2015: BJP to win 35 seats, AAP may get 29, says opinion poll". India TV-CVoter. 12 January 2015. பார்க்கப்பட்ட நாள் 13 January 2015.
  26. 26.0 26.1 http://www.newsnation.in/article/67179-news-nation-opinion-poll-delhi-assembly-election.html
  27. "Opinion Poll: BJP likely to form Delhi govt with absolute majority". ABP Live. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  28. "BJP to get majority with 45 seats, Kejriwal most popular CM candidate in Delhi: ABP News- Nielsen opinion poll predicts". ABP Live. 12 December 2014. பார்க்கப்பட்ட நாள் 13 December 2014.
  29. https://www.youtube.com/watch?v=klkVXuZv3NQ
  30. "Kejriwal continues to be the most preferred CM; AAP gets an edge over BJP: ABP News-Nielsen Snap Poll". ABP Live. பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி 2015.
  31. "ABP NEWS-Nielsen Opinion Poll: AAP gains strength, likely to win majority ; BJP drops behind". ABPLive. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  32. "Record 67.14 per cent voting in the battle for Delhi". Rediff. பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  33. "AAP set to sweep Delhi away, predict exit polls". Rediff. பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  34. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-15. பார்க்கப்பட்ட நாள் 2015-02-12.
  35. Delhi election result 2015: BSP washed away in Delhi polls
  36. Delhi assembly election results 2015: 62 out of 70 Congress candidates forfeit deposit
  37. "Arvind Kejriwal becomes 8th Delhi CM, says must act strongly against any act of religious hate". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  38. "Arvind Kejriwal takes oath, promises to act against graft". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  39. 39.0 39.1 "Arvind Kejriwal not to keep any portfolio". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு