சோயாத் கலன்
சோயாத் கலன் அல்லது சோயாத் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது காந்தல் ஆற்றின் கரையில் இந்தூர் - கோட்டா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது மூன்று பக்கங்களில் ராஜஸ்தான் எல்லையால் சூழப்பட்டுள்ளது. இது மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் இரு மாநிலங்களுக்கிடையே பிரபலமான போக்குவரத்து வணிக மையமாக செயல்படுகிறது. மத்தியப் பிரதேச முதல்வர் சோயாத்தை புதிய தாலுகாவாக (வட்டம்) ஆகஸ்ட் 11,2018 அன்று அறிவித்துள்ளார்.
மக்கள் தொகையியல்
தொகு2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] சோயாத் கலன் நகரின் மக்கள் தொகை 13,576 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 51%, பெண்கள் 49%. சோயாத் கலனின் சராசரி கல்வியறிவு விகிதம் 62% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண் கல்வியறிவு 79%, மற்றும் பெண் கல்வியறிவு 51%. சோயாத் கலனின், மக்கள் தொகையில் 6 வயதுக்குட்பட்டவர்கள் 16% ஆகும்.
மதங்கள்
தொகுசௌசத் யோகினி கோயில், பாங்கே பிஹாரி கோயில், ராதா கிருஷ்ணா மந்திர் பாடி கெடி, ராமன் பிஹாரி, ஸ்ரீ ராம் கோயில், மா ஆஷபுராணா மந்திர் பட்டி ராவ்லா, நர்சிங் மந்திர், பாபா ராம்தேவ் மந்திர், பாடா மந்திர், பாடா மந்திர் பவாரி கோயில், காயத்ரி கோயில், பாலாஜி கோயில், நர்மதேஸ்வர் கோயில், தோலா கெடி கோயில், பஞ்சமுகி கோயில், மற்றும் விசுவகர்மா கோயில் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இந்து கோவில்களைக் கொண்ட சோயாத் கலன் உள்ளூர் பகுதிகளில் பல ஆண்டுகளாக பிரபலமாக உள்ளது. இங்கு உள்ள செளசத் யோகினி கோயில் இந்தியாவில் காணப்படும் மூன்று பழமையான செளசத் மாதா கோயில்களில் ஒன்று என கூறப்படுகிறது. சோயாத்தின் முஸ்லிம் மக்களுக்காக சில பள்ளிவாசல்களும் உள்ளன. பட்டி சாலையில் உள்ள ஜமா பள்ளிவாசல் தான் மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகும்.
பள்ளிகள்
தொகுசோயாத் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரபலமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பல பள்ளிகளைக் கொண்டுள்ளது. ஜிகியாசா பொதுப் பள்ளி தனித்துவமான பொது உயர்நிலைப்பள்ளி, மேலும் சரஸ்வதி ஷிஷு வித்யா மந்திர், செயிண்ட் கபீர் பொது மேல்நிலைப்பள்ளி, விவேகானந்த் ராஷ்டிரிய வித்யாலயா, காளிதாஸ் வித்யா நிகேதன், தர்ஷன் பப்ளிக் பள்ளி, மகாரா பிரதாப் கிட்ஸ் அகாடமி ஆகியவை அவற்றில் முக்கியமானவை. சுஸ்னர் போன்ற பிற நகரங்களிலிருந்து கல்வி பயில பல மாணவர்களும் இங்கு வருகிறார்கள்.
அருகிலுள்ள நகரங்கள்
தொகுஅருகிலுள்ள கிராமங்கள்
தொகுசோயாத் கலன் பல நகரங்கள் மற்றும் கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. சோயாத்தைச் சுற்றி 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அவற்றில் சல்யாகேடி, டோங்கர்கான், அகர் மால்வா, டெஹ்ரியா, தரோனியா, நிஷானியா, கெடி, தனோடா, ஜிரியகேடி, கோகத்பூர், காந்தலியா, காந்தலியா கெடா, சோயாத் குர்த் மற்றும் குராடியா ஆகியவை முக்கிய கிராமங்கள் ஆகும்.
காளி சிந்து படுகை
தொகுமாவட்டத்தின் தெற்கு மற்றும் வடக்கு எல்லைகளுக்கு இடையில் காளி சிந்து படுகை நீண்டுள்ளது. இது சுஸ்னர் மற்றும் ஷாஜாபூர் தெஹ்ஸில்ஸின் (தாலுகா அல்லது வட்டம்) முக்கிய பகுதிகளையும், அகர் தெஹ்ஸிலின் மிகச் சிறிய பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது. இப்பகுதியின் தெற்கு பகுதி மலைப்பாங்கானது. மலைகள் படிப்படியாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உயரத்தில் குறைகின்றன. மத்திய மற்றும் வடக்கு பகுதிகளிலும் ஒரு சில சிதறிய மலைகள் உள்ளன. இப்பகுதியின் உயரம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 450 முதல் 528 மீட்டர் வரை வேறுபடுகிறது. பல நீரோடைகள் மலைப்பாங்கான பகுதியிலிருந்து தோன்றி மேற்பரப்பைப் பிரிக்கின்றன. காளி சிந்து பிரதான நதியாகும், இது மலைகளை கடந்து மாவட்டத்தின் கிழக்கு எல்லையில் பாய்கிறது. வடக்கு நோக்கி பாயும் காளி சிந்தின் முக்கிய சிற்றோடை லகுந்தர். புவியியல் ரீதியாக முழு பிராந்தியமும் கிரெட்டேசியஸ் இயோசீன் காலத்தின் தக்காண பீடபூமியின் ஒரு பகுதியாகும். அதன் முக்கிய துணை நதியான காந்தல் நதி சோயாத் கலனில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும்.
மொழி
தொகுசோயாத் கலனில் பேசப்படும் முக்கிய மொழிகள் இந்தி, மால்வி மற்றும் ராஜஸ்தானி ஆகும்.
குறிப்புகள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.