சோலோஸ் (தொடர்)
2021 ஆம் ஆண்டு வெளியான அமேசான் பிரத்யேகத் தொடர்
சோலோஸ் என்பது டேவிட் வீல் என்பவரின் உருவாக்கத்தில் மே 21 2021 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ஏழு பாகங்களைக் கொண்ட நாடகத் தொடர் தொகுப்பாகும்.[1]
சோலோஸ் | |
---|---|
வகை | தொகுப்பு அறிவியல் புனைவு நாடகம் |
உருவாக்கம் | டேவிட் வீல் |
எழுத்து | டேவிட் வீல் டோரி சேம்ப்சன் ஸ்டேசி கஃபூர் |
இயக்கம் | டேவிட் வீல் சேம் ஜான்சன் சேக் பிராஃப் டிஃபனி ஜான்சன் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
அத்தியாயங்கள் | 7 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | டேவிட் வீல் சேம் ஜான்சன் லாரா லேன்கேஸ்டர் |
ஓட்டம் | 21–32 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | அமேசான் |
விநியோகம் | அமேசான் பிரைம் வீடியோ |
ஒளிபரப்பு | |
ஒளிபரப்பான காலம் | மே 21, 2021 |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
கதைக்கரு
தொகுதொழில்நுட்பத்தினால் விளையும் தனிமையில் இத்தொகுப்பின் ஒவ்வொரு பாகத்திலும் வரும் கதாபாத்திரங்கள் தங்களை ஆழ அறிகின்ற வகையிலான கதைகளைக் கொண்டுள்ளது சோலோஸ்.
பகுதிகள்
தொகு- லியா என்பது இந்தத் தொகுப்பின் முதல் பகுதி ஆகும். இந்த பகுதியை சேக் பிராஃப் இயக்க டேவிட் வீல் எழுதி இருந்தார். காலப் பயணத்தை சாத்தியமாக்கும் லியா என்கிற கதாப்பாத்திரம் தன் வழியில் தானே நிற்பதை அறிவதாக இக்கதை அமைந்துள்ளது.
- டாம் என்பது இந்தத் தொகுப்பின் இரண்டாம் பகுதி ஆகும். டேவிட் வீல் இந்தப் பகுதியை எழுதி இயக்கியிருந்தார். டாம் என்கிற கதாப்பாத்திரம் தன் வாழ்நாள் முடிவில் தன்னைப் போன்ற ஒரு இயந்திரத்தை உருவாக்கி அதைத் தன்னைப் போலிருக்க பயிற்றுவிப்பதன் வேளையில் வாழ்வின் அருமையை அறியும் வகையில் இந்த கதை அமைந்துள்ளது.
- பெக் என்பது இந்த தொகுப்பின் மூன்றாம் பகுதி ஆகும். இந்தப் பகுதியை டேவிட் வீல் எழுத சாம் ஜான்சன் இயக்கி இருந்தார். பெக் என்கிற வயதான பெண்மணி தன் விண்வெளி பயணத்தில் செயற்கை நுண்ணறிவிடம் தன் வாழ்க்கை பயணத்தை பகிர்கிற பாங்கில் அமைந்துள்ளது கதை.[2]
நடிப்பு
தொகு- ஸ்ட்டூவார்ட் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மார்கன் பிறீமன்.
- லியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆன் ஹாத்வே.
- டாம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்தோணி மேக்கி.
- பெக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஹெலன் மிரன்.