சோழர் குறிப்புகள்

தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் ஓர் அரசர் குடியினர் சோழர். இவர்களின் வரலாற்றை அறிய இலக்கியங்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் உதவுகின்றன. சங்க கால நூல்களுக்குப் பின்னர் தோன்றிய நூல்களிலும் சோழர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டவையே இந்தச் சோழர் குறிப்புகள்.

சோழ வேந்தனின் மகனாகிய இளவரசன் உதயகுமரன் மாதவி மகள் மணிமேகலை மீது தீராக் காதல் கொண்ட காமுகனாக இருந்தான். [4] [5]
கரிகாலன் இளமையிலேயே அரசனானான். அரசனிடம் வழக்குரைக்க வந்தவர் அரசன் இளையவன் ஆயிற்றே! இவனால் சரியான தீர்ப்பு வழங்க முடியுமா என ஐயுற்றனர். கரிகாலனோ முதியவர் போல நரைமுடி தரித்துக்கொண்டு அவைக்கு வந்து வழக்குரைத்தவர்களுக்குச் சரியான தீர்ப்பு வழங்கினான். இவனுக்கு இந்த மதிநுட்பம் இவனது முன்னோரின் குலத்தொழில் மரபால் வந்தது என்கிறது பாடல். பாடலில் சோழன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை அறிஞர்கள் கரிகாலன் எனக் கூறுகின்றனர். [6]

களவழி நாற்பது

தொகு
களவழி நாற்பது நூலின் இறுதியில் 'சோழன் செங்கணானும் சேரமான் கணைக்காலிரும் பொறையும் (திருப்)போர்ப் புறத்துப் பொருது உடைந்துழி, சேரமான் கணைக்காலிரும் பொறையைப் பற்றிக்கொண்டு, சோழன் சிறை வைத்துழி, பொய்கையார் களம் பாடி, வீடு கொண்ட களவழி நாற்பது' என்னும் குறிப்பு உள்ளது. இதில் சோழன் செங்கணான் பற்றிய குறிப்பு உள்ளது.

சோழர் பரம்பரையை ஒட்டக்கூத்தரின் விக்கிரம சோழன் உலா தொகுத்துக் காட்டுகிறது.

  1. திருமால்
  2. திருமால் உந்தியில் பிறந்த பிரமன்
  3. காசிபன்
  4. மரீசி
  5. ஞாயிறு
  6. ஆவுக்காக மகன்மேல் தேரோட்டி நீதி வழங்கியவன் மனுநீதிச் சோழன்
  7. ஆடுதுறையில் புலியும் மானும் சேர்ந்து நீருண்ணச் செய்தவன்.
  8. மாக விமானம் ஊர்ந்த மன்னவன்
  9. மக்களுக்காக நீதி கேட்டு எமனிடம் போராடியவன்
  10. எமனைச் சாடியில் ஒளித்துவைத்த தராபதி
  11. தூங்கும் எயில் எறிந்த சோழன் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
  12. மேலைக்கடல் நீரைப் கீழைக்கடலுக்கு விட்டவன்
  13. நாகர் குகையில் புகுந்து நாக்கன்னியை மணந்தவன்
  14. புறாவுக்காகத் துலை புக்கவன் சிபிச் சக்கரவர்த்தி
  15. குடமலையை அறுத்துக் காவிரியைக் கொண்டுவந்தவன்
  16. மலையை உடைத்துக் காவிரிக்குக் கரை போட்டவன் கரிகாலன்
  17. பொய்கையார் கவி கேட்டு வில்லவனை விடுவித்தவன் (களவழி நூல் கேட்டு வில் சின்னம் கொண்ட வில்லவனாகிய சேரனை விடுவித்த கோச்செங்கணான்)
  18. தொண்ணூற்றாறு புண் கொண்ட சோழன்
  19. தில்லைக்குப் பொன் வேய்ந்தவன்
  20. ஒரே பகலில் 18 காடுகளையும் மலைநாட்டையும் கொண்டவன்
  21. கங்கையும் கடாரமும் கொண்டவன்
  22. கல்யாணி நகரைக் கைப்பற்றியவன்
  23. கொப்பத்துப் போரில் ஒரு யானையைக் கொண்டு ஆயிரம் யானைகளைக் கைப்பற்றியவன்
  24. திருவரங்க்கதில் தென்னரங்கன் பள்ளி கொள்ள காணிக்கப்பள்ளி அமைத்தவன்.
  25. கூடலசங்கமப் போரில் எண்ணற்ற யானைகளை வெட்டி வீழ்த்திப் பரணி நூல் கொண்டவன்

இவர்களுக்குப் பின்னர் விக்கிரம சோழன் அரசனானான்[7]

அடிக்குறிப்பு

தொகு
  1.  காவல் வெண்குடை மன்னவன் கோயில்
    இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
    வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் 120
    (அரங்கேற்றுக் காதை)

  2. நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்
    காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
    இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத் 160
    தலைக்கோல் எய்தி
    (அரங்கேற்றுக் காதை)

  3. தேரா மன்னா செப்புவ துடையேன் 50
    எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
    புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
    வாயிற் கடைமணி நடுநா நடுங்க
    ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
    அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் 55
    பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
    ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
    மாசாத்து வாணிகன் மகனை யாகி
    வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
    சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு 60
    என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
    கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
    கண்ணகி யென்பதென் பெயரே
    (வழக்குரை காதை)

  4. மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன் உதய குமரன் - மணிமேகலை 4-27
  5. உதய குமரனாம் உலகு ஆள் வண்டின் - மணிமேகலை 18-27
  6. உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
    நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
    சொல்லால் முறைசெய்தான் சோழன் 'குலவிச்சை
    கல்லாமல் பாகம் படும்'. 6

  7. மூவருலா, விக்கிரமசோழன் உலா

    சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருக்
    கார்தந்த வுந்திக் கமலத்துப் – பார்தந்த (1)
    ஆதிக் கடவுட் டிசைமுகனு மாங்கவன்றன்
    காதற் குலமைந்தன் காசிபனும் – மேதக்க (2)
    மையறு காட்சி மரீசியு மண்டிலஞ்
    செய்ய தனியாழித் தேரோனும் – மையல்கூர் (3)
    சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில்
    மைந்தனை யூர்ந்த மறவோனும் – பைந்தடத் (4)
    தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்
    கூடநீ ரூட்டிய கொற்றவனும் – நீடிய (5)
    மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும்
    போக புரிபுரிந்த பூபதியும் –மாகத்துக் (6)
    கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத்
    தேற வழக்குரைத்த செம்பியனும் – மாறழிந் (7)
    தோடி மறலி யொளிப்ப முதுமக்கட்
    சாடி வகுத்த தராபதியும் – கூடார்தம் (8)
    தூங்கு மெயிலெறிந்த சோழனு மேல்கடலில்
    வீங்குநீர் கீழ்கடற்கு விட்டோனும் – ஆங்குப் (9)
    பிலமதனிற் புக்குத்தன் பேரொளியா னாகர்
    குலமகளைக் கைப்பிடித்த கோவும் – உலகறியக் (10)
    காக்குஞ் சிறபுறவுக் காகக் களிகூர்ந்து
    தூக்குந் துலைபுக்க தூயோனும் – மேக்குயரக் (11)
    கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியக்
    தள்ளுந் திரைப்பொன்னி தந்தோனும் – தெள்ளருவிச் (12)
    சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப்
    பொன்னிக் கரைகண்ட பூபதியும் –இன்னருளின் (13)
    மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
    பாதத் தளைவிட்ட பார்த்திவனும் –மீதெலாம் (14)
    எண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்று
    புண்கொண்ட வென்றிப் புரவலனும் – கண்கொண்ட (15)
    கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றம்
    காதலாற் பொன்வேய்ந்த காவலனும் – தூதற்காப் (16)
    பண்டு பகலொன்றி லீரொன் பதுசுரமும்
    கொண்டு மலைநாடு கொண்டோனும் – தண்டேவிக் (17)
    கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
    சிங்கா தனத்திருந்த செம்பியனும் – வங்கத்தை (18)
    முற்று முரணடக்கி மும்மடிபோய்க் கல்யாணி
    செற்ற தனியாண்மைச் சேவகனும் – பற்றலரை (19)
    வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்
    கொப்பத் தொருகளிற்றாற் கொண்டோனும் - அப்பழநூல்
    பாடவரத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால்
    ஆடவரப் பாய லமைத்தோனும் – கூடல (21)
    சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த
    துங்கமத யானை துணித்தோனும் – அங்கவன்பின் (22)
    காவல் புரிந்தவனி காந்தோனு மென்றிவர்கள்
    பூவலய முற்றும் புரந்ததற்பின் – மேவலர்தம் (23)
    சேலைத் துரந்துசிலையைத் தடிந்திருகால்
    சாலைக் களமறுத்த தண்டினான் – மேலைக் (24)
    கடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமுன் கைக்கொண்
    டடல்கொண்ட மாராட் ரானை – உடலை (25)
    இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை
    மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி – அறத்திகிரி (26)
    வாரிப் புவனம் வலமாக வந்தளிக்கும்
    ஆரிற் பொலிதோ ளபயற்குப் – பார்விளங்கத் (27)
    தோன்றியகோன் விக்கிரம சோழன் றொடைத்தும்பை
    மூன்று முரசு முகின்முழங்க – நோன்றலைய (28)

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்_குறிப்புகள்&oldid=1226310" இலிருந்து மீள்விக்கப்பட்டது