சௌபாக்யா திட்டம்

சௌபாக்யா திட்டம் (Saubhagya scheme) அல்லது பிரதான் மந்திரி சஹாஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா என்பது வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான இந்திய அரசின் திட்டமாகும்.[1][2]

பின்னணி

தொகு

சௌபாக்யா திட்டம் செப்டம்பர் 2017-ல் பிரதம மந்திரி நரேந்திர மோதியால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் திசம்பர் 2018க்குள் மின் மயமாக்கல் செயல்முறையை முடிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.[3] 2011ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்ட சில குடும்பங்கள் இலவச மின்சார இணைப்புகளுக்குத் தகுதிபெறும், மற்றவர்கள் ரூ. 500 செலுத்தி இத்திட்டத்தில் பயன் பெறுவர்.[4][5] நவம்பர் 16, 2017 அன்று, இத்திட்டத்தைப் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்காக இந்திய அரசாங்கம் saubhagya.gov.in என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது.[6] இத்திட்டத்தின் மொத்தச் செலவு ரூ. 16, 320 கோடி ஆகும். இதன் மொத்த நிதிநிலை ஆதரவு (ஜிபிஎஸ்) ரூ. 12,320 கோடி ஆகும். பயனாளி குடும்பத்திற்கு ஒரு ஒளிகாலும் இருவாயி விளக்கு, ஒரு நேர் முனை மின் வசதி கிடைக்கும். இதில் 5 ஆண்டுகளுக்கு மீட்டர் பழுது மற்றும் பராமரிப்பு செலவும் அடங்கும்.

சௌபாக்யா திட்டம் இலச்சினை மற்றும் ஊரக மின்வசதியாக்க கழக நிறுவன மேற்பார்வையின் கீழ் மொஹித் அகமதுவின் முதல் கட்ட வடிவமைப்பின் படைப்பாகும்.

செயல்பாடு

தொகு

ஜூன் 2019க்குள் 91% கிராமப்புற இந்தியக் குடும்பங்கள் மின்சார வசதியைப் பெற்றுள்ளன. இத்திட்டம் ஏழை மற்றும் கிராமப்புற வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திறனை வழங்கும் அதே வேளையில், இத்திட்டத்தினால் மின்வெட்டு பிரச்சனையைத் தீர்க்கவில்லை[2][7] மற்றும் மின் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழலில், அதனைச் சரிசெய்ய எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.[7] அக்டோபர் 2018-ல், சௌபாக்யா திட்டத்தின் கீழ் விருப்பமுள்ள குடும்பங்களுக்கு 100 சதவீத மின் மயமாக்கல் இலக்கை பீகார் நிறைவு செய்தது.[8] இது நடைமுறைப்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் 2021 நிலவரப்படி 2.82 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்கவும்

தொகு
  • சாமானிய மனிதன் அதிகாரமளித்தல்:

மேற்கோள்கள்

தொகு
  1. "PM launches ‘Saubhagya’ scheme to provide power to all.". The Hindu Business Online. 25 September 2017. http://www.thehindubusinessline.com/news/pm-launches-saubhagya-scheme-to-provide-power-to-all/article9872678.ece. 
  2. 2.0 2.1 Rahul Tongia (31 October 2017). "Can the Saubhagya scheme work?". Brookings.
  3. "Government launches Saubhagya scheme for household electrification". The Economic Times. 25 September 2017. https://economictimes.indiatimes.com/news/economy/policy/government-launches-saubhagya-scheme-for-household-electrification/articleshow/60828887.cms. 
  4. E Prachee Mishra (5 October 2017). "Electrification in India: 'Saubhagya' scheme". The PRS Blog. Archived from the original on 17 February 2020. பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.
  5. "PM Modi's 16,000-Crore Power Point: Free Electricity Connections For Poor". NDTV. 26 September 2017.
  6. "Govt launches Saubhagya scheme web portal to register citizens for free electricity". India Today. 25 November 2017. Archived from the original on 25 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. 7.0 7.1 "Shedding light on Saubhagya: on electrification scheme". 25 October 2017. http://www.thehindu.com/opinion/op-ed/shedding-light-on-saubhagya/article19913598.ece. 
  8. "Bihar completes 100% electrification two months before deadline".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌபாக்யா_திட்டம்&oldid=3930370" இலிருந்து மீள்விக்கப்பட்டது